Home » உடல் நலக் குறிப்புகள் » கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!
கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!

கொழுப்பைக் கரைக்க உதவும் பயிற்சிகள்!!!

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!!

ஆண்கள் ஒவ்வொருவருக்குமே நடிகர் சூர்யாவைப் போல் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நாள் முழுவதும் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்வதால், பலருக்கு சிக்ஸ் பேக் வருவதற்கு பதிலாக ஃபேமிலி பேக் வந்துவிடுகிறது. அத்துடன் உடலில் பல்வேறு நோய்களும் அழைய விருந்தாளிகளாக வந்துவிடுகிறது.

சரி, உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாதவாறு தொப்பை இருக்கிறதா? அந்த தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். எனவே தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளுடன், தினமும் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதிலும் உங்களுக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? கவலை வேண்டாம், எந்த ஒரு கருவிகளின் உதவியும் இல்லாமல் ஈஸியான உடற்பயிற்சியின் மூலமே தொப்பையைக் குறைக்கலாம்.

இங்கு சிக்ஸ் பேக் வைக்க தடையாக வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் உங்களால் முடிந்ததை தினமும் செய்து வாருங்கள்.

ரன்னிங்/வாக்கிங்
உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகளானது கரைக்கப்பட்டு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும். தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி தான் அவசியம் என்பதில்லை. தினமும் எளிய உடற்பயிற்சியான ரன்னிங்/வாக்கிங்கை மேற்கொண்டாலே, கொழுப்பை கரைக்கலாம். ஆனால் ரன்னிங்/வாக்கிங் மேற்கொள்ளும் போது, நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரிப்பதுடன், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் வாம்ப் அப் செய்து உடலை ரிலாக்ஸ் செய்ய மறக்க வேண்டாம்.

நீள் பயிற்சி (elliptical trainer)

உங்களால் உடற்பயிற்சி இயந்திரங்களை வாங்க முடிந்தால், நீள் பயிற்சி கருவியை வாங்கி தினமும் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இந்த உடற்பயிற்சி இயந்திரம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த இயந்திரத்தில் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், 300 கலோரிகளை கரைக்கலா

சைக்கிளிங்

உங்கள் வீட்டில் சைக்கிள் இருந்தால், தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளில் வெளியே பயணம் செய்யுங்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், கால்கள் வலிமையடைவதுடன், குனிந்தவாறு ஓட்டுவதால் வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

s-img-2015-02-23-1424700239-4-reversecrunch

ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)

இந்த உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, சிக்ஸ் பேக் வைக்கவும் முடியும். அதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கால்களை தூக்கி 90 டிகிரி மடக்கி, கைகளை கழுத்திற்கு பின்னால் வைத்துக் கொண்டு, முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இதேப்போன்று 12-16 முறை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

s-img-2015-02-23-1424700246-5-verticallegcrunch

வெர்டிகிள் லெக் க்ரஞ்ச் (Vertical leg crunch)

இந்த உடற்பயிற்சி செய்வதும் ஈஸியே. இதற்கு எந்த ஒரு கருவியும் அவசியம் இல்லை. அந்த உடற்பயிற்சியின் மூலமும் வயிற்றுக் கொழுப்புக்களை கரைக்கலாம். இந்த உடற்பயிற்சியை செய்ய, தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மேலே தூக்கி, கைகளை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு, தலையை முன்னோக்கி தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியின் போது முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த உடற்பயிற்சியையும் 12-16 முறை செய்ய வேண்டும்.

s-img-2015-02-23-1424700253-6-stability-ball-crunch

உடற்பயிற்சி பந்து க்ரஞ்ச் (Exercise ball crunch)

இந்த உடற்பயிற்சியின் போது, உடலின் அனைத்து தசைகளும் செயல்படும். மேலும் மிகவும் கவனமாக இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அதற்கு உடற்பயிற்சி பந்தின் மேல் படுத்துக் கொண்டும், தரையில் கால்களை நன்கு ஊன்றி, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முன்னும், பின்னும் எழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top