Home » 2015 » May

Monthly Archives: May 2015

ரோபோ!!!

ரோபோக்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்று சொன்னால் அது மிகையாகாது. தன்னுடைய ‘ஜீனோ’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ரோபோ என்கிற வார்த்தையை பிரபலமாக்கினார். “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார். கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் ... Read More »

மின் விசிறிகள்!!!

வீட்டுக்கு வெளியே அனல் பறக்கும் கோடை வெப்பம் தாங்க முடியாமல் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் நாம் செய்யும் முதல் வேலை மின் விசிறியின் குமிழை அழுத்தி அதைச் சுழலச் செய்வதுதான். விசிறி சுழலத் துவங்கியதும் நாம் குளிர்ச்சியும் வசதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம். மின்விசிறியின் கண்டுபிடிப்பு பற்றி அறிந்துகொள்வதும் உண்மையில் அத்தகைய மகிழ்ச்சியளிப்பதுதான். பழங்காலந்தொட்டே மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு ... Read More »

நுண்செயலி!!!

நுண்செயலி என்பது சிலிகான் சில்லுவின் (Silicon chip) ஒரு செயற்கை வடிவம்; இது கணினியின் மூளை போன்று செயல்படுவது. கணினியில் விரும்பிய செயல்களை மேற்கொள்ள, நிரல்களை வடிவமைக்க, நினைவகத்திலிருந்து (memory) தரவுகளைப் (data) பயன்படுத்த, வெற்றிகரமாக கணிதச் செயல்பாடுகளை நிறைவேற்ற என்று பல வழிகளிலும் இந்த நுண்செயலி பணியாற்றுகிறது. தொடக்க காலக் கணினிகள் மிக மிகப் பெரியவை, ஓர் அறையையே அடைத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தன; ஏராளமான பெரிய இணைப்புக் கம்பிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு, உரிய ... Read More »

போக்குவரத்து விளக்குகள்!!!

பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகியன. ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். ... Read More »

தொலைநகலி!!!

பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொலைபேசியுடன் கூடவே அதைப்போன்ற வேறொரு கருவியும் உடன் இருப்பதைக் கண்டிருக்கலாம். இதுவே தொலை நகலி அல்லது ஃபேக்ஸ் எந்திரம் எனப்படுவது. தொலைபேசி மூலம் சேய்மையில் இருப்பவரிடமும் தொடர்பு கொண்டு பேச இயலும். எழுதப்பட்ட செய்தி எதையும் இதன் வாயிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது; ஆனால் தொலைநகலி வாயிலாக இது இயலும். எனவே வணிக உலகில் இந்த எந்திரம் மிகுந்த பயனுள்ளதாக விளங்குகிறது. இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander ... Read More »

சுருக்கெழுத்து!!!

சுருக்கெழுத்து!!!

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். லத்தீன் மொழிச் சொலான stenography என்பதற்கு சிறுசிறு அமைப்புகளில் எழுதுதல் எனப் பொருள். சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் “Tenets and Lectures” என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் ... Read More »

சாக்லேட்!!!

சாக்லேட்!!!

உலகில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தின்பண்டங்களுள் சாக்லேட்டும் ஒன்றாகும். கிறிஸ்டபர் கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பழைய பதிவேடுகளின்படி சாக்லேட் கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் ... Read More »

செயற்கைத் துணைக்கோள்!!!

அறிவியல் அறிவு வளர வளர, விண்வெளி பற்றியும் இப்புவியின் பல்வேறு பகுதிகளில் நடப்பவை பற்றியும் அறியும் ஆவல் மனிதனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாகத் தோன்றியதுதான் செயற்கைத் துணைக்கோள்கள் ஆகும். செயற்கைத் துணைக்கோள்கள் உண்மையில் மனிதரால் உருவாக்கப்பட்ட எந்திர சாதனங்களே. ராக்கெட்கள் எனப்படும் ஏவூர்திகளின் உதவியால் இத்துணைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. செயற்கைத் துணைக்கோள்கள் இப்புவியைச் சுற்றிக் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (orbit) செல்லும்; அப்போது அவை பதிவு செய்த, திரட்டிய தகவல்களை அனுப்பி வைக்கும். இந்தத் துணைக்கோள்களின் உதவியுடன் புவியின் ... Read More »

ஏ. கே. 47!!!

இன்றைய போர்ப்படைக் கருவிகளுள் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இக்கருவி தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் ... Read More »

இறை துகள்!!!

“கடவுள் இருக்கிறார்” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டால் எப்படி இருக்கும்? ஆத்திகர்கள் அனைவரும், “இப்பொழுதாவது கடவுளை உணருங்கள்” என்பார்கள். நாத்திகர்கள் அனைவரும், “கடவுளை அறிவியல் வென்றுவிட்டதால் அறிவியலே கடவுள்” என்பார்கள். அறிவியலால் விளக்க முடியாத சங்கதிகள் பல. அட்லாண்டிக் கடலின் பெர்முடா முக்கோணத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தவண்ணம் உள்ளது. சபரிமலை ஜோதிக்கு இன்னும் விளக்கம் தர முடியவில்லை. அறிவியலின் வரலாற்றைப் படித்தாலோ, அல்லது காலத்தின் வரலாற்றைப் படித்தாலோ.. ஏன், கடவுளின் வரலாற்றைப் படித்தால் கூட, நாம் சேருமிடம் ... Read More »

Scroll To Top