Home » 2015 » May (page 3)

Monthly Archives: May 2015

பண்டைய நாகரிகங்கள் – 34

மாய நகரம் மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்: *    கி. மு. 11000 மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு  வாழ்ந்தார்கள்.   *    கி. மு. 2000 மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 33

கடவுள் ஜெயித்த கதை மாயன் நாகரிகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று. கி. மு. 2600 ல் தொடங்கி கி. பி. 900 வரை நீடித்த நாகரிகம். இது. மாயன் நாகரிகம் அமெரிக்க இந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப் பகுதிகள், காலத்தின் போக்கால், அரசியல் மாற்றங்களால், இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை: மெக்ஸிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார். மாயன் நாகரிகம் எந்தெந்த துறைகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறது? உலக ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 32

கிரேக்கம் : கதை, கலை, மனிதர்கள் பொழுதுபோக்குகள் ஒலிம்பிக் தேசியத் திருவிழாவாக, மாபெரும் பொழுதுபோக்காக இருந்தது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கவேண்டும், அரசாங்கம் அயராது ஏற்பாடுகள் செய்யவேண்டும். நான்கு வருடங்களுக்கு ஒரு முறையே வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் சம்பந்தமான ஏதோ ஒரு முன் ஏற்பாடு கிரேக்கத்தில் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கும், அதற்காக, கற்பனா சக்தி கொண்ட மனிதர்கள் ஒலிம்பிக் என்னும் ஒரே கூட்டுக்குள் தங்களை அடக்கிக்கொண்டுவிட முடியுமா? கிரேக்கர்களின் பொழுதுபோக்குகளுக்குப் பல பரிணாமங்கள் இருந்தன. நாடோடிக் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 31

கிரேக்கத்தின் ஒலிம்பிக்ஸ் ஆட்சி முறை கிரேக்கம் ஒரே நாடாக இருந்தபோதிலும், ஆட்சிமுறை நகர ராஜ்ஜியங்களுக்கிடையே மாறுபட்டது. உதாரணமாக, ஸ்பார்ட்டாவில் மன்னராட்சி: ஏதென்ஸில் கி.மு. 1066 வரை மன்னராட்சி இருந்தது. இதற்குப் பிறகு, மாஜிஸ்ட்ரேட் நகர ராஜ்ஜியத் தலைவரானார், மக்களாட்சி மலர்ந்தது. இந்த முறையில், உயர் குடியினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். இவர்களுள், ஓட்டளிக்க இருபது வயது ஆகவேண்டும். இரண்டு சபைகள் இருந்தன. போலே (Boule) என்பது மேல்சபை. கீழ்ச்சபையின் பெயர் எக்ளீஸியா (Eclesia). மேல்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 30

குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்து வசிப்பார்கள். கிரேக்கச் சமுதாயத்தில் ஆண்களே முக்கியமானவர்கள். பெண்களுக்குச் சம உரிமை கிடையாது.  ஆண்கள் சாப்பிடும் அறையில் பெண்கள் சாப்பிடக்கூடாது. கடைகளுக்கும், தெருவுக்கும் போகக்கூடாது. பெண்கள் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கவேண்டும். சமைப்பது, ஆடைகள் நெய்வது, வீடைச் சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 29

சமுதாய அமைப்பு சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. உயர் குடியினர் நடுத்தர வர்க்கத்தினர் அடித்தட்டு மக்கள் அடிமைகள் உயர் குடியினர்  என்பவர்கள், எந்த வேலையும் பார்க்காதவர்கள். ஏராளமான சொத்து சுகம் படைத்தவர்கள். கணக்கற்ற அடிமைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். எல்லா வேலைகளுக்கும்  இவர்களால் அடிமைகளை ஏவ முடியும், ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பம்போல் செலவிடும் சுதந்தரம் கொண்டவர்கள்.  கலைகள், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை வளர்க்கவும், அரசியல், நிர்வாகம் ஆகிய சமுதாயத் துறைகளில் பணியாற்றவும், ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 28

கிரேக்க நாகரிகம் – I பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 28 கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 ) எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பல பாரம்பரியப் பரிணாமங்கள் உள்ளன. ஆனால்,  இவற்றையெல்லாம் தாண்டி தனித்துவம் மிக்கது கிரேக்க நாகரிகம். சீனாவுக்குப் பெரும் சுவர், எகிப்துக்குப் பிரமிட்கள், மம்மிகள். ரோமாபுரிக்கு வீரம். கிரேக்கத்துக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கல்வி, அறிவு, சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகள் என்று அள்ள அள்ளக் குறையாமல் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 27

மத நம்பிக்கைகள் புரிந்துகொள்ள முடியாத எழுத்துககள் காரணமாக, சந்து சமவெளியினரின் சமூக வாழ்க்கை, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள, நாம் கலைப்பொருட்கள், இலச்சினைகள் ஆகியவற்றைத்தாம் நம்பவேண்டியிருக்கிறது. ஏராளமான இலச்சினைகளில் இருக்கும் ஓர் உருவம் பசுபதி. இது சிவபெருமானைக் குறிக்கிறது என்கிறார்கள். பசு  என்றால், வடமொழியில் ஜீவராசிகள் என்று அர்த்தம்: பதி  என்றால் தலைவர். அதாவது, எல்லா ஜீவராசிகளையும் காப்பவர், அவர்களின் தலைவர். படைப்பின் மூலகுரு, ஆண் வடிவம். சிந்து சமவெளியில் கிடைத்த இலச்சினையில் பத்மாசனம் என்னும் யோகா ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 26

அறிவியல் அறிவு : உலோகங்கள் செம்பு, வெள்ளீயம் இரண்டையும் கலந்தால் வெண்கலம் செய்யலாம் என்னும் அறிவியல் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுட்ட செங்கற்களால் ஆன தொட்டிகளில் செம்பையும், வெள்ளீயத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து காய்ச்சி, வெண்கலம் தயாரித்தார்கள். வெண்கலத்தால் அரிவாள், கோடரி போன்ற கருவிகள் செய்தார்கள். இவை செப்புக் கருவிகளைவிட உறுதியானவை என்று உணர்ந்தார்கள். வெண்கலப் பாத்திரங்களும், அடுக்களையில் மண்சட்டிகளின் இடங்களைப் பிடித்தன. ஒரு பெண்ணுக்குத் தன் அழகைத் தானே ரசிக்கும் ஆசை. கணவனிடம் சொன்னாள். அவன் வெண்கல ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 25

 நகரங்கள், வீடுகள் சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது. தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி ... Read More »

Scroll To Top