Home » படித்ததில் பிடித்தது

Category Archives: படித்ததில் பிடித்தது

சமையல் டிப்ஸ்!!!

சமையல் டிப்ஸ்!!!

* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது. * தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது. * பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள். * உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் ... Read More »

அம்மாக்களுக்கு!!!

அம்மாக்களுக்கு!!!

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம் இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் ! =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது எமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== பிள்ளைகள் வெளியூரில் பணியிலிருக்கும் ஒரு வீட்டில், பக்கத்துவீட்டுக் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ! =================== அப்பா வாசம் வெயில் வாசம் ! அம்மா வாசம் நிலா வாசம் ! எமது சமையலறையெங்கும் நிலா வாசம் ... Read More »

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது 1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு ... Read More »

அன்பு மயமாய்!!!

அன்பு மயமாய்!!!

தியானத்தினால் நீங்கள் அன்பு மயமாய் மாறி விடுவீர்கள். புற உலகம் உங்கள் பரு உடலை மட்டுமே பார்த்தாலும்… உங்களுக்குள் நீங்கள் சக்தி நிலையிலிருந்து (சூக்கும உடல்) இயங்கத் தொடங்குவீர்கள். 24 மணி நேரமும் எதையாவது telecast செய்துகொண்டு இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களைப் போல… 24 மணி நேரமும் உங்கள் சக்திநிலையிலிருந்து நிபந்தனையற்ற அன்பு அலைகள் வெளியேறிக்கொண்டேயிருக்கும். அங்கு நீங்கள் தொலைந்துபோய் இருப்பீர்கள். வெறுமனே அன்பை “வெளி”யில் பரப்பிக்கொண்டிருக்கும் (Radiating love in the cosmic) ஒரு Antenna ... Read More »

துன்பத்தை உதறித் தள்ளு

துன்பத்தை உதறித் தள்ளு

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று ... Read More »

நண்டு போதனை

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது. நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது. Read More »

மணி என்ன?

மணி என்ன?

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…?” இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்! அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்…. “ஆமாப்பா…. அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி…. அங்க என்ன பாடமா நடத்துறான்…? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு…” பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. “”நேத்து ... Read More »

இரு தவளைகள்!!!

இரு தவளைகள்!!!

இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழ்குழியில் விழுந்து விட்டது. வெளியே வர முடியவில்லை. மேலேயிருந்த தவளைகள் கேவலமாக இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது, முயற்சியை கைவிடுங்கள், செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து நண்பர்களின் கொடூர குணத்ை எண்ணி முயற்சியை கைவிட்டுவிட்டது. குழிக்குள்ளேயே இருந்து விட்டது. இரண்டாம் தவளை மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது. அது மேலே வந்து எல்லாரையும் பார்த்து சொல்லிச்சாம். ... Read More »

செத்தேன்!

செத்தேன்!

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன்.  எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான்.  தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து ... Read More »

செய்வன திருந்தச்செய் !!!

செய்வன திருந்தச்செய் !!!

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது. ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன. வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை ” நாம் இக்கிணற்றில் இறங்கி…இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது” என்றது. உடன் இரண்டாவது தவளை …’வெயில் அதிகமாக அதிகமாக …இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது’ என்று கேட்டது. இரண்டாவது தவளை….புத்திசாலித்தனமாக யோசித்து ... Read More »

Scroll To Top