Home » பாரதியார்

Category Archives: பாரதியார்

மகாகவி பாரதியின் இறுதி உரை!!!

மகாகவி பாரதியின் இறுதி உரை!!!

அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார். அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர். ... Read More »

போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்!!!

போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்!!!

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்) 1. வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ பொலிவி லாமு கத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஒலியி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனினாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 2. இன்று பார தத்திடை ... Read More »

உறுதி வேண்டும்!!!

உறுதி வேண்டும்!!!

மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம். Read More »

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்தகாலம் 11திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921 வரையாகும். அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்காக மிக வலிமையாக போரிட்டவர், போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு. சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக ... Read More »

சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!

சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த ... Read More »

எல்லாம் கடவுள்மயம்!!!

எல்லாம் கடவுள்மயம்!!!

* மதத்தின் பெயரால் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. அவரவர் மன விருப்பப்படி, எந்த வடித்தில் வணங்கினாலும் நாம் வழிபடுவது ஒரே கடவுளைத் தான். * கடவுள் ஒருவரே. அவரையே ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்று ரிக்வேதம் கூறுகிறது. * “எல்லா உடம்புகளிலும் நானே உயிராக இருக்கிறேன்’ என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதனால், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது. * “எல்லாம் பிரம்ம மயம்’ “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வசனங்கள் உலகம் கடவுளின் ... Read More »

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை ... Read More »

பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் நற்சிந்தனைகள்:- * ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது. * வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது. * உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய மூவகையான சக்தியே இந்த உலகத்தை ஆள்கிறது. இதையே இச்சா, கிரியா, ஞானசக்தி என சாஸ்திரம் சொல்கிறது. * “காலம் பணவிலை உடையது’ ... Read More »

பொன்மொழிகள் – 1

பொன்மொழிகள் – 1

பொன்மொழிகள்:- ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-மகாகவி பாரதி கல்வி விரல்களுக்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை. – கவிஞர் வைரமுத்து தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. – கவிஞர் வைரமுத்து கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். ... Read More »

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும் முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும். பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் ... Read More »

Scroll To Top