Home » பாரதியார் (page 2)

Category Archives: பாரதியார்

மன்னிப்போம்! மறப்போம்!-பாரதி!!!

மன்னிப்போம்! மறப்போம்!-பாரதி!!!

மன்னிப்போம்! மறப்போம்! * பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிறருக்கு தண்டனை தரும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது. * பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருந்தால், உங்களை நல்லவர் என நீங்களே முடிவு கட்டிக்கொள்ளலாம். மன்னிப்பது மனிதகுணம். மறப்பது தெய்வீக குணம். * சொல் வலிமை மட்டுமின்றி, ஆள்பலம், பொருள்பலம் போன்ற வலிமைகளைக் கொண்டிருப்பவனே வல்லவன். * சுயநலம் கருதி தனக்கு சாதகமான விஷயத்தை அங்கீகரிப்பது கூடாது. இயற்கையின் வழியில் நியாய தர்மத்தைப் ... Read More »

மகாகவி பாரதியார் – வரலாற்று நாயகர்!!!

மகாகவி பாரதியார் – வரலாற்று நாயகர்!!!

மகாகவி பாரதியார் – வரலாற்று நாயகர்! காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!   நல்லதோர் வீனை செய்து அதை  நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!   நெருங்கின பொருள் கைபட வேண்டும் மனதில் உறுதி வேண்டும்!   வட்ட கரிய விழியில் கண்ணம்மா வானக் கருனைக் கொள்! இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். ‘வரகவி’ என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட ... Read More »

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி!!!

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி!!!

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ... Read More »

புதுமைப் பெண்!!!

புதுமைப் பெண்!!!

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலோளி தோற்றி நின்றனை பாரத நாடைலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1 மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே ... Read More »

எங்கள் நாடு!!!

எங்கள் நாடு!!!

ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் ... Read More »

பெண்கள் விடுதலைக் கும்பி!!!

பெண்கள் விடுதலைக் கும்பி!!!

காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் ... Read More »

பாரதியார் படைப்புகள்

பாரதியார் படைப்புகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) Read More »

பாரத மாதா நவரத்தின மாலை!!!

பாரத மாதா நவரத்தின மாலை!!!

(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே – சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு – பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் ... Read More »

இருளும் ஒளியும்!!!

இருளும் ஒளியும்!!!

இருளும் ஒளியும் வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான். மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு, 5 பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார். “ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10 சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?” என்று நெரித்துவிட்டார் கேள்விகளை, ... Read More »

அழகுத் தெய்வம்!!!

அழகுத் தெய்வம்!!!

அழகுத் தெய்வம் மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம் துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1 யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்; யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள். ‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்; ‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள். ‘தாகமறிந் ... Read More »

Scroll To Top