Home » பாரதியார் (page 5)

Category Archives: பாரதியார்

விடுதலை!   விடுதலை!  விடுதலை!

விடுதலை! விடுதலை! விடுதலை!

ராகம்-பிலகரி விடுதலை!   விடுதலை!  விடுதலை! 1. பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை; பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுலை; திறமை கொண்ட தீமை யற்ற தொழில்பு ரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை) 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே ... Read More »

பாரத தேசம்!!!

பாரத தேசம்!!!

ராகம்–புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத) 2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்; சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத) 3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் ... Read More »

தமிழ்மொழி

தமிழ்மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.  1 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!  2 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் ... Read More »

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே  (செந்தமிழ்) 2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு  (செந்தமிழ்) 3. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி-என மேவி யாறு பலவோடத்-திரு மேனி செழித்த தமிழ்நாடு.  (செந்தமிழ்) 4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு. ... Read More »

பாரதி வரலாறு!!!!

பாரதி வரலாறு!!!!

செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை “யானை அடித்து கொன்றது” என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் ... Read More »

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை!!!

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை!!!

கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் – சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். ... Read More »

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக; நாட்கள் ஒழிக; பருவங்கள் மாறுக; ஆண்டுகள் செல்க; நான் மாறுபடமாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் <உண்மையென்று அறிவேன். நான் கடவுள்; ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் வீழும்படி எப்போதும் திறந்து ... Read More »

தாயின் மணிக்கொடி!!!

தாயின் மணிக்கொடி!!!

(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு) பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் 1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) 2. பட்டுத் துகிலென லாமோ?-அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகந்தடித் தாலும்-அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்) 3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ... Read More »

சிவசக்தி!!!

சிவசக்தி!!!

இயற்கையென் றுனைரைப்பார்-சிலர் இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்: செயற்கையின் சக்தியென்பார்-உயித் தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்; வியப்புறு தாய்நினக்கே-இங்கு வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும் நயப்படு மதுவுண்டே?-சிவ நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1 அன்புறு சோதியென்பார்-சிலர் ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்: இன்பமென் றுரைத்திடுவார்-சிலர் எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்; புன்பலி கொண்டுவந்தோம்-அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி எங்கள் வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2 உண்மையில அமுதாவாய்;-புண்கள் ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்! வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்; ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய்; ... Read More »

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மக்களின் மனதில் நிற்பவர் யார்

இதோ ஒரு இனிமையான கவிதை! இந்தக் கவிதையை இளவயதில் பள்ளியில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. என்ன கவிதை அது! “”செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே”   பாரதியார் எழுதிய இந்தப்பாடல், ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது. “ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்பவர்கள் தொடருங்கள். சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் ... Read More »

Scroll To Top