Home » பாரதியார் (page 4)

Category Archives: பாரதியார்

கொட்டு முரசு!!!

கொட்டு முரசு!!!

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!1. ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்.2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் – தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன். 3. பண்டங்கள் ... Read More »

மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!

மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!

மஹாசக்திக்கு விண்ணப்பம் மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே!  1 பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச் செத்த வுடலாக்கு; இந்தப் பதர்களையே-நெல்லாமென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே.  2 உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? ... Read More »

நல்லதோர் வீணை!!!

நல்லதோர் வீணை!!!

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1 விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2 Read More »

காணி நிலம் வேண்டும்!!

காணி நிலம் வேண்டும்!!

காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும்   1 பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும்.  2 பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன் காவலுற வேணும்;என்தன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.  3 Read More »

பாரதியார் – 25

பாரதியார் – 25

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்! எட்டயபுரம், பிறந்த ... Read More »

வள்ளிப்பாட்டு!!!

வள்ளிப்பாட்டு!!!

வள்ளிப்பாட்டு -1 பல்லவி எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ! குற வள்ளீ!சிறு வள்ளீ! சரணங்கள் (இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம் மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல் பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலை பெற்று அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்) வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக் கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக் குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன் பிள்ளைக் ... Read More »

முருகா!!!முருகா!!!

முருகா!!!முருகா!!!

ராகம்-நாட்டைக்குறிஞ்சி)  தாளம்-ஆதி பல்லவி முருகா!-முருகா!-முருகா! சரணங்கள் 1. வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா) 2. அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே!அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா) 3. சுருதிப் பொருளே,வருக! துணிவே,கனலே,வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா) 4. அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்!சரணம்,சரணம் குமரா,பிணியா ... Read More »

விநாயகர் நான்மணி மாலை!!!

விநாயகர் நான்மணி மாலை!!!

வெண்பா 1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே! (நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்புநீ யே. கலித்துறை 2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்; வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. விருத்தம் 3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய் வாய். வையந் தனையும் வெளியினையும் வானத்தையும்முன் படைத்தவனே! ஐயா!நான்மு கப்பிரமா! ... Read More »

அச்சமில்லை!!!அச்சமில்லை!!!

அச்சமில்லை!!!அச்சமில்லை!!!

பண்டாரப் பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நச்சை வாயி லேகொணர்ந்து ... Read More »

சுதந்திரப் பள்ளு!!!

சுதந்திரப் பள்ளு!!!

ராகம்-வராளி  தாளம்-ஆதி பல்லவி ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று  (ஆடுவோமே) சரணங்கள் 1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே  (ஆடுவோமே) 2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே  (ஆடுவோமே) 3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற ... Read More »

Scroll To Top