Home » படித்ததில் பிடித்தது » சமையல் டிப்ஸ்!!!
சமையல் டிப்ஸ்!!!

சமையல் டிப்ஸ்!!!

* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.

* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.

* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.

* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.

* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.

* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.

* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.

* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.

* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

* செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.

* திராட்சைப் பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல் புண் குணமாகும்.

* விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம்; தொண்டை நோய்கள் குணமாகும்.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

* எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும். சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம். ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்.

* புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.

* தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.

* ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

* தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்.

* பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

* அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

* முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள். அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.

* குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

* கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.

* பால் அடிப்பிடித்து, தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையைப் போடவும். அடிப்பிடித்த வாசனை போய் விடும்.

* இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். ஏதாவது ஒரு எசென்ஸ் ஊற்றவும். புதுமையான சுவையான பாயசம் ரெடி.

* அல்வா செய்யும் போது, வெண்ணெயை அரைப் பதமாக உருக்கி வைத்துக் கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும்.

* பூண்டைப் பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் இதயக் கோளாறு கட்டுப்படும்.,

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது, அரை கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் கமகமக்கும்.

* தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றி, கேசரி பவுடர் போடாமல் செய்து பாருங்கள். வெண்மையாக பால் கோவாவுடன் போட்டி போடும் சுவை..!

* பாதுஷா செய்யப் போகிறீர்களா? சோடா, டால்டா இரண்டுடனும் கொஞ்சம் கெட்டியான புளிப்புத் தயிரும் சேர்த்துப் பிசைந்தால், பதர் பதராக மிருதுவாக, சர்க்கரைப் பாகில் ஊறி புதுச்சுவையோடு இருக்கும்.

* பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து செய்தால் ‘பீட்ரூட் அல்வா’ பிரமாதம்!

* மோர்க்குழம்பு மீதமாகிவிட்டதா? கொஞ்சம் கடலை மாவைப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்க்கவும். வடைகறி மாதிரி அருமையாக இருக்கும்.

* மோர் நிறைய மீந்துவிட்டால், அதில் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பைப் போட்டு வைக்கவும். விரைவில் புளிக்காமலும் வாடை வராமலும் இருக்கும்.

* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும் போது சிறிது பால் பவுடர் சேர்க்கவும்… ருசி கூடும்.

* சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கெட்டித் தயிரில் சிறிது சில்லி சாஸை கலந்து பரிமாறவும். அவசரத்துக்குக் கை கொடுக்கும் இந்த அபார ருசி.

* குளிர் காலத்தில் உறை மோர் விடும் போது, சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.

* தேங்காயை மெல்லியதாக நறுக்கி, தயிரில் போட்டு வைத்தால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

* மோர்க்குழம்பு செய்யும் போது, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும். குழம்பு வாசனையாக, ருசியாக இருக்கும்.

* பால் சூடாக இருக்கும் போதோ, ஆறிப் போன பிறகோ உறை ஊற்றினால் தயிர் பக்குவமாக இருக்காது. இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால், பக்குவத்தோடு கெட்டியாகவும் இருக்கும்.

* தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் புதுச் சுவை.

* ஆப்பத்துக்கு அரைக்கும் போது, தேங்காய் தண்ணீர் சேர்க்கவும். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் சூடான பால் சேர்த்து பிறகு ஆப்பம் சுடவும். மென்மையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top