Home » 2017 » March » 23

Daily Archives: March 23, 2017

உடலினைப் போற்றுவோம்

உடலினைப் போற்றுவோம்

உடல் என்பது ஒரு இயந்திரம் அல்ல நாம் சொன்னதைக் கேட்க… அது சொல்வதைக் கேளுங்கள் அதை உணர்ந்து வாழ்ந்து பாருங்கள் நீங்கள் நிம்மதியை அடையலாம் ! இன்றைய அவசரமான உலகத்தில் பொறுமையை கடைபிடிப்பது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை. ஒவ்வொரு வேலையினையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்வது என்பதும் இயலாத காரியமாய் போய்விட்டது. எவ்வளவு சுலபமாக ஒரு வேலையை முடிக்கலாம் அல்லது எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கலாம் என்பதில்தான் நாம் குறியாய் இருக்கிறோம். வேகமும் தேவை என்றாலும் விவேகமும் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

துப்பு கொடுத்தது தப்பு சென்னைக்கு பக்கத்தில், திருவாலங்காடு. அங்கு ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ கிளை. காலை வேளை. வங்கி கொஞ்சம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கி வாசலை ஒட்டிய அறை. அதில் ரங்கமணி அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த வங்கி கிளையின் மேனேஜர். அவருக்கு கிட்டதட்ட ஒரு நாப்பது வயது. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ” ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார். “யார்ன்னு தெரியலே சார், ... Read More »

ஆலமரமும் வீரனும்

ஆலமரமும் வீரனும்

ஒரு பெரிய ஆலமரம் பல பல கிளைகளை பரப்பிக்கொண்டு பலருக்கும் நிழல் தந்துவந்தது. பல ஊருக்கும் செல்லும் வழியில் அது இருந்ததால், பல உயிரினங்களும் அது தரும் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் பலரையும் சந்தித்து, நட்புறவுடன் பழக இருந்த அமைதியான சூழலுக்கும் அம்மரத்தை நாடி வந்தனர். அவர்களுள் ஒரு வீரனும் சில வருடங்களாக அவனுக்கு இருந்த பல பொறுப்புக்களிடையே அம்மரம் தரும் மன நிம்மதிக்காக முடிந்தபோதெல்லாம் அங்கு வந்து கொண்டிருந்தான். தன்னை போல் மரத்தினை நாடி வந்த ... Read More »

ரொட்டி என்றால் என்ன?

ரொட்டி என்றால் என்ன?

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »

Scroll To Top