Home » தன்னம்பிக்கை » தத்துவங்கள்!!!
தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

– விவேகானந்தர்

=========================

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

=========================

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

=========================

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

=========================

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. – பில் கேட்ஸ்

=========================

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

=========================

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.

மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !!!!

=========================

அலைகளுக்கு தெரியும் கடலின் ஆழம். ஒவ்வொருவர் சிந்தும் கண்ணீர்
கறைகளில் தெரியும்பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்.

=========================

தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப் போகமலிருக்க!
தேங்காய் பொறுக்குகிறார்கள்…வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்

=========================

தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.
கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும் ….!

=========================

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது நமது கடமை……

=========================

இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்……

=========================

பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும்.
அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும்.
அன்புக்காக அன்பு வை அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்…

=========================

அழகை நேசிக்காதே அறிவை நேசி,
பணத்தை நேசிக்காதே பாசத்தை நேசி,
ஆடம்பரத்தை நேசிக்காதே அடக்கத்தை நேசி,
ஆணவத்தை நேசிக்காதே அன்பை நேசி
ஏனெனில் ஆணவம் அழிவுப்பாதையை விரைவில் நோக்கி செல்லும்…!!

=========================

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

=========================

அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்
நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்…

=========================

துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்…….

=========================

கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்

=========================

உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்;
பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்

=========================

கோபம் உன்னை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்…
ஆனால் அன்பு உன்னை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்…..

=========================

வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை.
முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும்.
வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது,
நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.

=========================

இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை அனால்
ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது ……கவலையை விடு ….

=========================

கடுமையான கஞ்சத்தனம் , தகுதியற்ற தற்பெருமை , எல்லையற்ற பேராசை
இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்

=========================

உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை நீயும் சிரிக்கவை,
உன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்கவை….

=========================

நல்லவனாய் இரு ஆனால் கோழையாய் இராதே.

=========================

எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும்
மடையர் ஆக்க முடியும். ஆனால்
எல்லா நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியாது…

=========================

ஒரு மனிதன் தனது துயரத்தில் தான்
உண்மையான மனிதர்களை அறிகின்றான்……

=========================

காலத்தால் உருவங்களை மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர,
அதன் நினைவுகளை அல்ல..

=========================

தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து
தன்னம்பிக்கையின் வலிமையால்
அக்னிச் சிறகுகள் விரித்துப் பறந்து இலக்கையாடைவோம்…!

=========================

வாழ்க்கை என்பது…ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள்!
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்!!
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்!!!
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்!!!!
ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்!!!!!
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்!!!!!!

=========================

தோல்வியின் அடையாளம் “தயக்கம்”
வெற்றியின் அடையாளம் “துணிச்சல்”…
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

=========================

“அன்பு ” யார் மீதும் காட்டலாம் ஆனால்
“கோபம்” உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்.

=========================

உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை

=========================

வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது,
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது.

=========================

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!

=========================

ஆசை படுவதை மறந்துவிடு
ஆனால் ஆசைபட்டதை மறந்து விடாதே

=========================

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!.

=========================

விட்டுக்கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்…
தட்டிக்கொடுங்கள்; தவறுகள் குறையும்….
மனம்விட்டுப்பேசுங்கள்; அன்பு பெருகும்…

=========================

நண்பனையும் நேசி… எதிரியையும் நேசி…
நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான்.
எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்…….

=========================

அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.!
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

=========================

நாம் விரும்பாத ஒருவரை விரும்புவது கஷ்டம்…
நாம் விரும்பும் ஒருவரை வெறுப்பது கஷ்டம்…

=========================

ஏழை தினமும் உணவு சம்பாதிக்க மைல்கள் நடக்கிறான்,
செல்வந்தன் தினமும் உண்ட உணவு செரிக்க மைல்கள் நடக்கிறான்!

=========================

மற்றவர்களின் மனங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை,
அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

=========================

உண்மையான அன்பைப் புரிந்து கொள்ளும் ……ஒரு அழகான சந்தர்ப்பமே ……” பிரிவு”

=========================

சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் –
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.”

=========================

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான்
தணிப்பதும் தனிமை தான் …….

=========================

நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே…
அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்.!

=========================

தூக்கத்தில் உன்னைப்பற்றி நினைப்பவள் “காதலி”..
தூங்காமல் கூட உன்னையே நினைப்பவள் “தாய்”.

=========================

மாற்றம் ஒன்றுதான் உலகிலே மாற்றம் இல்லாதது!

=========================

வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும்
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்…
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்…
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்…

=========================

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.

=========================

நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட
ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்;
தொடர்ந்து முன்னேறுங்கள்!

=========================

பணம் சம்பதிக்கனும்னு ஆசை படுறவன் பதவிய தேடி போவான்..
மக்களுக்கு சேவை செய்யனும்னு ஆசை படுறவன பதவி தேடி வரும்.

=========================

உங்கள் கண் முன்னே இருக்கும் மனிதர்களை நேசிக்கஇயலாவிட்டால்
கண்ணிற்க்கு தெரியா கடவுளைஎப்படி நேசிப்பீர்கள்.

=========================

ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட,
ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.

=========================

கஸ்டத்திலும் நேர்மையாய் இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே..

உன் வாழ் நாளிலே அதன் பயனை காண்பாய்..!!

=========================

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே நிம்மதியாக வாழ முயற்சி செய் 

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

=========================

மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது….
மிகவும் சந்தோஷமான விஷயம்…உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது…

=========================

குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்…
யாருக்கு அதை வழங்குவது என்பதை ….பணம் முடிவு செய்கிறது..!!!

=========================

ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச்
சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

=========================

நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்…..

=========================

தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்கு தான்
பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.
தனக்குள் தான் நிலையாகாதவன் தான்
பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.

=========================

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா…? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா….

=========================

“இது என்னுடையது” என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
“எதுவும் என்னுடையது அல்ல” என்கிற பக்குவம் வரும்போது,
விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..

=========================

தேவையில்லாததையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால்….
தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்…….

=========================

உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.
பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்..
உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டுமே சுவாசியுங்கள்…

=========================

அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடைமை.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.

=========================

வெற்றி – உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி – போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி – உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி – நீ யாரென்று உனக்கே காட்டும்…

=========================

நமது மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்….

=========================

துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்…

=========================

பொறுமையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும்,
சகிப்புத் தன்மையும், தெளிவான சிந்தனையும் இருந்தால்..
வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்….!

=========================

உலகத்தில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல…..
நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை….

=========================

உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே…
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே….

=========================

உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு…

=========================

முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல்,
வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்….

=========================

உலகில் எந்த ஒரு மனிதரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்…..
நாளை நீ கண் மூடிவிட்டால்…
அவர்கள் உன்னையும், உண்மையையும் மூடி விடக்கூடும்……

=========================

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top