Home » தன்னம்பிக்கை » தன்னம்பிக்கை – 2
தன்னம்பிக்கை – 2

தன்னம்பிக்கை – 2

* மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையும் நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும்.

* கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க கூடாது.

* அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும்.

* ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இருக்கத்தான் செய்யும்.

* சாதித்தே தீருவேன் என்று சபதம் போடு. குறைகளும்,தடைகளும் கூட கொடுக்கும் ஒத்துழைப்பு.

* மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே; மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே! மாற்றக்கூடியது எது, மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.

* யானைகள் வாழும் பூமியில் தான்
எறும்புகளும் வாழ்கின்றன….

* பூனைகள் வாழும் வீடுகளில் தான்
எலிகளும் வாழ்கின்றன…

* சிறுத்தை புலிகள் வாழும் காடுகளில் தான்
மான்களும் வாழ்கின்றன…

* சுறாக்கள் வாழும் கடலில் தான்
சிறு மீன்களும் வாழ்கின்றன..

* பாம்புகள் வாழும் வயல்களில் தான்
தவளைகளும் வாழ்கின்றன…

* வாழ்க்கை என்பது
ஏய்த்து பிழைப்பதல்ல
போராடி ஜெயிப்பது …

* வாழ்கையை இழந்துவிட்டோம்
என்று வருந்துவதற்கு ஒன்றுமில்லை
வாழ்ந்து ஜெயித்துக்காட்ட வேண்டும்.

* இ(எ)துவும் கடந்து போகும்!! -எல்லாம் சில காலமே நம் துன்பங்களும் கூட நம்பிக்கையிருந்தால்…

* ஓர் எறும்பைப் பாருங்கள். அதற்கு என்ன எதிர்காலம் இருந்துவிட முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறதா? நீங்கள் அதன் வழியை தடைபடுத்தினால் அது அடுத்த வழியை அமைத்துக் கொள்கிறது. தோல்வியே இல்லாத பயணம்; நமக்கு மட்டுமென்ன வழியா இல்லை?

 

* தவளையும் மனிதனும்…

சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்…..

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்…..

வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும்.

சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும்.

எது அந்த தவளையை கொன்றது ?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால்

உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது……

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
ஆனால்…..
நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர்.

* குடையால் மழையை நிறுத்த முடியாது.
ஆனால்….
மழையில் நனையாமல்
நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்…

அது போல, தன்னம்பிக்கை
வெற்றியை தராமல் இருக்கலாம்….
ஆனால், வெற்றி பெறுவதற்கு
தடையாக இருக்கும் சவால்களை
எதிர்கொள்ளும் வலிமையை கொடுக்கும்.

* ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவை மேலே பறக்கும் பலூன்கள்.

அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம்’’ என்றார்.

நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top