Home » படித்ததில் பிடித்தது » எல்லோருடைய சொல்லும்!!!
எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா?

உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம்.

– உட்வெல்.

பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது.
– மகாவீர்.

யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர்.
– புளுடர்கி.

மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு.
– ஸைரஸ்.

மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.
– பேகன்.

வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு.
– பர்த்ருஹரி.

எடுத்தால் குறைவது செல்வம். கொடுத்தால் வளர்வது கல்வி.
– ஜீவெனாப்.

வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே.
– கோல்டன்.

பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.
– ஸைரஸ்.

கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.
– மெரிடித்.

துன்பப்படுவோர் மத்தியில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை.
– புத்தர்.

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
– அரிஸ்டாட்டில்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.
– மெஹர்பாபா.

உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.
– ஐன்ஸ்டீன்

தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.
– சாக்ரடீஸ்.

எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.
– அரவிந்தர்.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.
– எட்கார் ஆலன்யோ.

உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.
– கிரேஸியன்.

யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.
– மாண்டேயின்.

அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.
– ஜே. ஆர். லெவல்.

வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
– மால்ட்ஸ்.

கோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா? என்கிற சந்தேகமும் வந்துவிடும்.
– அனுராதாரமணன்.

மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.
– மார்ட்டின் புபெர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top