Home » தன்னம்பிக்கை » ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!
ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்..

01. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால் அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது,அந்தக் குடும்பத்தில் இருந்துதான் ஜேம்ஸ்வாட் உருவானார்.

02. பெற்றோர் கல்வியே செல்வம் என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார்.

03. பாடசாலைக் கல்வியையும், அதை மலர்ச்சியற்று வைத்திருக்கும் ஆசிரியர்களையும் வெறுத்து பாடசாலைக்கு போகாமலே படித்து சாதித்த இளைஞனே ஜேம்ஸ்வாட், மின்சாரத்தை வாற் என்று அளக்கிறோமே அந்தப் பெயர் இவருடையதுதான் இவரை மரியாதைப்படுத்தவே இவருடைய பெயரின் பிற்பகுதியில் உள்ள வாற் என்பதை மின்சார அளவுக்கு பெயராக்கினர்.

04. ஜேம்ஸ்வாட் ஒரு புத்தகப்புழு, இயற்கையை ரசித்தல், புத்தகம் படித்தல் என்பன அவருடைய பொழுதுபோக்கு. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும், எந்த நண்பனுடன் பேசினாலும் அதிலிருந்து ஒரு செய்தியை எடுக்க நான் தவறமாட்டேன் என்றார்.

05. திறமை கொண்ட மனிதனுக்கு தோல்விகள் தொடரலாம், வெற்றிகள் தாமதமாகலாம் ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி.

06. ஒரு லீட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அது 1600 லீட்டர் ஆவியாக மாறும், அதை அடைக்க பாத்திரத்தில் இடமிருக்காது, ஆகவேதான் ஆவியை அழுத்தமாக்கி இயந்திரங்களை இயங்க வைத்தார் ரயில் வண்டி, கப்பல்கள் ஓட ஆரம்பித்தன, நீராவியில்.

07. ஒரு குதிரை ஒரு நிமிடத்தில் 33.000 இறாத்தல் எடையை ஓர் அடி தூரம் இழுக்கும். இதை அடிப்படையாக வைத்து இயந்திரத்தின் வேகத்திற்கு குதிரைச் சக்தி என்று பெயர் வைத்தவரும் ஜேம்ஸ்வாட்தான். ( கோர்ஸ் பவர் )

08. புதிய தத்துவம் கண்டு பிடிக்க அறிவு வேண்டும், தெள்ளத் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும். ஜெயிக்கிற வெறி வேண்டும், கடுமையான உழைப்பும் வேண்டும். தோல்விகள் வரும் அப்போது துவளாத மனதும் வேண்டும்.

09. ஜேம்ஸ்வாட் தனது 35 வது பிறந்த நாளில் நான் 35 பவுணுக்கு இணையான உற்பத்தியை செய்திருப்பேனா என்ற கேள்வியையே குறிப்பாக்கினார்.

10. விஞ்ஞானிகள், எழுத்தாளர், தத்துவ மேதைகளை வாழும் போது உலகம் கண்டு கொள்ளாது. ஆனால் வாழும்போதே வெற்றியையும் பாராட்டுக்களையும் கண்ணால் கண்டு சாதனை படைத்தவர் ஜேம்ஸ்வாட்.

11. மனதைச் சூன்யமாக வைக்கப் பழகிக் கொண்டால் தெய்வீக சக்தி உங்கள் அகத்தில் பிரவேசிக்க யாதொரு தடையும் இருக்காது. நீங்கள் ஒன்றுமே இல்லை என்று நினையுங்கள் அந்த நிலையில் பூரணத்தை அனுபவிப்பீர்கள்.

12. மனம் ஒரு யானையைப் போன்றது, அதற்குப் பயிற்சியளித்துப் பழக்கினால் மிகவும் பயனுள்ளதாக மாறும். பழக்கப்படுத்தப்படாத யானை நடமாடும் நரகமாகும்.

13. எண்ணங்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளைப் பாருங்கள், அந்த இடைவெளிகளுக்குள் மகத்தான சக்தி மறைந்திருக்கிறது. அந்த இடைவெளியை சிறப்பாகப் பாவித்தால் அடுத்து வரும் எண்ணங்களை நல்லபடியாக மாற்றலாம்.

14. மது அருந்துவதற்குப் பதிலாக மன அழுத்தங்கள் நீங்கவும், மனதை இலேசாக்கிக் கொள்ளவும் மது அல்லாத வேறு ஆரோக்கியமான வழிகள் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

15. திருமணமான தம்பதியரிடையே பல்வேறு பிரச்சனைகள் உருவாகக் காரணம் அவர்கள்மனங்களில் கட்டாயமான எண்ணங்கள் புகுந்து மண்டையைக் குடைவதால்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top