Home » நகைச்சுவை » முடியல …..முடியல!!!
முடியல …..முடியல!!!

முடியல …..முடியல!!!

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே…ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்…

 

டாக்டர்:ஏனப்பா…நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்…சாகலாம்னு நினைக்கிறேன்…
தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்…வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்
தேடி வந்தேன்..

 

”ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?”

‘கொட்டற மழையில்நடந்து வந்தேன்.’

 

”டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.”

‘அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.’

”நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?’

‘இன்றைக்கு ஏன் வேண்டாம்?’

”இன்று தான் இறுதி மேட்ச்.”

 

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,”இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.”

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,”ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?”

‘என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்’

”ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?”

‘என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.’

 

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!

 

சாப்பிட்டு முடித்ததும் சர்வர், “சார் எல்லாத்தையும் எடுத்திறவா??”
“எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!”

போனில் “அப்புறம்” வார்த்தையை அடிக்கடி உபயோகித்தால் எதிர்முனையில் காதலி!         “அப்புறம் என்ன?” என்று உபயோகித்தால் எதிர்முனையில் மனைவி….

 

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.

சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். ” டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை”.

டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. ” அப்படியா” என்று வியந்தார்.

பேஷண்ட் சொன்னார் ” நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை” என்றார்.

 

டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.

பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க

டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.

பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?

டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.

 

மனோதத்துவ டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.

சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.

டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?

பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.

 

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்

டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.

வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று ” டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற” என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி ” இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

 

மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கான வகுப்பு; டாக்டர் மாணவர்களிடம் சொன்னார் “பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கணும். முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்போ பாருங்க ” என்று சொல்லி தன் விரலைக் கொண்ட பிரேதத்தின் உடலைத் தொட்டு விரலை வாயில் வைத்தார்.

” எஙல்லோரும் பண்ணுங்க” எனறார். மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப்படியே பண்ணினாங்க.

” இரண்டாவதாக கவனம் வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க பார்க்க தவறிட்டீங்க. நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில் அனால் வாயில் வைத்தது நடு விரலை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top