Home » நகைச்சுவை » சிரியுங்கள்!!!
சிரியுங்கள்!!!

சிரியுங்கள்!!!

இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.
அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட
இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது.
கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான
மனநிலை தென்படவில்லை.

காரணம், மன இறுக்கம், மன உளைச்சல்.

இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது.
N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம்.
சில சிரிப்புகளை சிறிது அலசுவோம்.

வாய்விட்டு சிரிப்பது – நமட்டு சிரிப்பு – வாயை மூடிக்கொண்டு சிரிப்பது – ஓகோ
என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு – வெடிச்சிரிப்பு – ‘களுக்’கென்று சிரிப்பு
– பயங்கரமாய் சிரிப்புது – புன்சிரிப்பு – வயிறு வலிக்க சிரிப்புது – விழுந்து,
விழுந்து சிரிப்புது – குபீரென்று சிரிப்பு – மனதுக்குள்ளே சிரிப்பு –
உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு – கலகலவென்று சிரிப்பு – ‘பக்’கென்று
சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு*
[விடுப்பட்ட சிரிப்பு இருந்ததால் தெரிவிக்கலாம்.]

நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எதையும்
கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி
செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய,

கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட
தெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.
மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த
20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து
வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக்
கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின்
நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம் ஆண்டின்
இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு “CGRP”
என்று பெயர்.

இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின்
இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப ‘CGRP’
அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம்
விட்டுச்சிரிக்கும் போது ‘CGRP’ அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில்
கண்டறிப்பட்ட உண்மை.

உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக்
கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் ‘ம்யூனோகுளோபுலின் ஏ’
[IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகாரித்து பாக்டீயாக்கல்,
வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம்.
இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் இந்தப் பேராசிரியர்.
மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு -சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு

பாரிந்துரை செய்கிறார்கள்.

நேர்மன் கசின்ஸ்’ என்னும் அமெரிக்க நாவலாசியாரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி
இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
”நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன்.
எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன்.
விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க
சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன்.
நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சாரியம் ?
நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து
போனது”

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின்
உற்பத்தியைச் ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த
மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை ‘ GELOTO LOGIST என்கிறார்கள்.
இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள்.

சிரிப்பு நம்மிடைய ரத்ததில் அதிகப்படியான ஆ க்ஸஜன் இருப்பதற்கான தசைகள்
வலுவடைகின்றன. ”இரத்த அழுத்தம்” அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு
செயல்படுகின்றன.
‘என்சீபேலின்ஸ்’ என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க
உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம்
அதிகா¢க்கிறது. மன இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் – நம் மூளையின்
வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது.
உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு

நன்மைகள் என்று சிரித்து பாருங்கள்.

எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
“சிரிக்க தொரிந்த சமுதாய விலங்கு மனிதன்” என நம்மை மற்ற இனங்களிலிருந்து
வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு
இல்லாத சிறப்பு.

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க
ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி
என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.
நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல
சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

”பெர்னாட்ஷ” ஒரு சமயம். ”உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு
பின்னணியிலேயே செயல்படுகிறது’ என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை
அளவிட்டு
காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது.

நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு
அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.
அமரர் ‘கல்கி’ யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான்.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம்
ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு
காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பொரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று
கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.
இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில்
தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான
இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.
சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு

இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.
மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான்.
சிரிப்பு ‘கவர்ந்திழுக்கக்’ கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்,
அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள்
தொ¢யமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை.
‘மர்ரெ பாங்க்ஸ்’ என்ற தத்துவ டாக்டர், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள்,
கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க
முடிகிறது
என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு
உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?

இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.
நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.
உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள்.

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது
மிக்க அவசியமாகிறது.

நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மை பற்றி
மற்றவர்கள்,
”சாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு” என எண்ணக்கூடும்.

ஆகவே, அதனையும் கருத்தில் – கவனத்தில் கொண்டு சிரிக்கவும்,
மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top