Home » படித்ததில் பிடித்தது » மீன்கொத்திப் பறவைகள்!!!
மீன்கொத்திப் பறவைகள்!!!

மீன்கொத்திப் பறவைகள்!!!

மீன்கொத்திப் பறவைகள்

மீன் கொத்திப் பறவையும் அழிவின் விளிம்பில் உள்ள ஒன்றுதான்ஏறத்தாழ, 4–6 வண்ணங்களை உடலெங்கும் பூசி குவிக்” என்ற ஒலி எழுப்பியவாறு நீண்ட வால் முன் பின் அசைய கண்சிமிட்டும் நேரத்தில்வேகமாக,தலைகீழாக பாய்ந்துஇரையைக் கொத்தி கவ்வும் அழகு என துடிப்புள்ள ஒரு பறவையாக இனம் காணப்படுகிறது.

மின்சாரக் கம்பிகள்காய்ந்த மரக்கிளைகள்பாறை முகடுஆற்றோரம்நதியோரம் விளைந்திருக்கும் குற்றுச் செடிகளில் அசையும் நுனி போன்றவை இவை அமரும் இடங்கள்வெகு நிச்சயமாகஇப்போதெல்லாம் நகருக்குள் காண்பது அரிதினும் அரிதேபல கவிஞர்களும்காதலர்களும்காதலிகளும்இதன் அழகில் மயங்கிகவிதையாக்கி தூது அனுப்பி வருகிறார்கள்!

நதிக்கரையோரம் வாழ்பவைமரக்கிளைகளில் வாழ்பவைநீர் நிலையோரம் வாழ்பவை என இதை வகைப்படுத்துகிறார்கள் பறவையியலாளர்கள்96க்கும் மேற்பட்ட உள் இனம் கொண்ட இப்பறவையில் ஆண்பெண் பால் வேற்றுமை காண்பது சற்று சிரமம்.கிட்டத்தட்ட பெரும்பாலானவை காட்டிலேயே வாழ விரும்புகின்றன.மனிதனாலும் வசப்படுத்த முடியாதுஅதாவதுமனித நடமாட்டத்தை அவை விரும்புவதே இல்லை

முகத்துவாரத்தில் அமைந்த பள்ளங்களை,காய்ந்த மரங்களில் காணும் பொந்துகளைகரையான் புற்றுக்களைஅடர்ந்த புதர்களைக் கூடுகளாக மாற்றிக் கொள்கின்றனபூர்வீகம் ஆஸ்திரேலியா என்றாலும், 30—40 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய பறவைகளின் படிமங்களில் இவை உள்ளனஅவை மீன்கொத்தியின் மண்டையோட்டை ஒத்திருப்பதால்பல நூற்றாண்டுகளாக பூமிக் கோளத்தில் வாழ்ந்து வருகிறது என்று ஒரு தரப்பினர் கூறினாலும்மற்றொரு தரப்பினர்வேறு பறவையாகவும் இருக்கலாம் என்று வாதாடுகின்றனர்

பனி படர்ந்த துருவப் பிரதேசங்களையும்கடுமையான வெப்பம் தோய்ந்த பாலைவனங்களையும்இவை வாழ்வாதார இடமாக அங்கீகரிக்கவில்லை. தென் அமெரிக்காமெக்ஸிகோ,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்இவற்றின் எண்ணிக்கைபிற பறவைகளோடு ஒப்பிடும்போது மிக குறைவு.இந்தியாவிலோ இன்னும் மோசம்.

பொதுவாக தீவுகளையே தன் விருப்ப ஸ்தலமாகச் கொள்கின்றனசாலமன் தீவுகளில் இவை அதிகம் உண்டுஅடர்ந்த வனமும்வனம்சார் சிறு புனலும்இவை மனம் ஒப்பி வாழ வழி செய்கின்றனஅதிக நிலப்பரப்பை ,ஒவ்வொரு பறவையும் தனதாக்கிக் கொள்கின்றனபிற பறவைகளின் உணவு எல்லைப் பரப்பும்இதனுடன் கலப்பதால்தாக்குதலுக்கு உள்ளாகி மலைகாடுமனித நடமாட்டமற்ற மரப்பட்டறைதோப்புதோட்டம் என ஜீவித எல்லையை மாற்றிக் கொள்ளவும் பழகிக் கொள்கின்றன. நீண்ட வாலும்கெட்டியான அலகும்தினசரி வாழ்வில் பேருதவி புரிகின்றன.

அதி வேகமாகப் பறக்கும்போது காற்றின் அழுத்தத்தை தீர்மானிப்பதற்குநீண்ட வால் துணை புரிகிறதுமேலும் கீழும் அசைந்து துடுப்பு போல் செயல்படுகிறதுஇரைகளை ஒரே கொத்தில் பிடிக்கவும்சில சமயம்மண் மரம்பாறை இடுக்குகளைக் குடைந்து,கிளறி உள்ளே வாழும் சிறு பூச்சி இனங்களைப் பிடிக்கவும் அலகு பயன்படுகிறது.

தூர நோக்கி போல இதன் கண்களின் அமைப்பு உள்ளதுதலையை ஆந்தை போல் திருப்பாமல்கண்களை முன் பின் அசைத்துதுல்லியமாக இரையின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கண்சிமிட்டும் நேரத்தில் அலகால் கொத்திச் செல்லும் பாங்கு அலாதியானதுதண்ணீருக்குக் கீழே உள்ள இரையையும்இதன் கூர்மையான கண் பார்வையால் கண்டறிய முடிகிறதுசூரிய ஒளியின் பிரதிப்பால் கூட இதன் பார்வையில் கூச்சம் ஏற்படுவதில்லை

கண்களின் மேல் படிந்துள்ள தோல் படலம்மூக்குக் கண்ணாடி போல் செயல்பட்டு நீருக்குள் மூழ்கும்போது கண்களைப் பாதுகாக்கின்றனகுட்டையான கால்கள் வலிமையானவை4 விரல் அமைப்பு கொண்டவை.மூன்று இரையைப் பிடிக்கவும்பின்புறம் உள்ள நகம் கிளைகளில் அமர கொண்டிபோல் செயல்படுகிறதுமீன்களைத்தான் அதிகம் உண்ணும் என்றாலும்தவளை ,ஓணான்,மண்புழுசிலந்திகள்சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வயது பாம்புகளையும் உண்ணும்

விருப்ப உணவு என்னவோ மீனும்,வெட்டுக்கிளியும் தான்பொதுவாகசிக்கலற்றஎந்த இடர்ப்பாடும் இல்லாத பிரதேசங்களில் இரையை வேட்டையாட விரும்புகிறதுஅந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப விருப்ப உணவையும் மாற்றிக் கொள்ளும்உதாரணமாக,பாலைவனங்களில் பயணிக்கும்போது ஓணான்மண்பாம்புகளையும்காடுகளில்பூச்சிகளையும்முகத்துவாரங்களில் நண்டுஇறால் மீன்களையும் அதிகம் உண்ணும்

சிறு பூச்சிகளை 5 அடி தொலைவிலிருந்து பாய்ந்து பிடிக்கும்புதர்களை அழித்துவிடும் போது வெறும் தரையில்இரையைப் பிடிக்கும் சந்தர்ப்பங்களில் மோதி காயமுறுகின்றனகாய்ந்த மரங்களில் ஒருசிலவற்றையாவதுதோப்பு ,தோட்டங்களில் வெட்டாமல் விட்டுவிடலாம்அனைத்தும் வெட்டப்படுவதால் கூடின்றி தவித்து இடம் பெயர்கின்றனஇடப் பெயர்ச்சி மகிழ்ச்சியாய் அமையும் என்ற உத்தரவாதத்திற்கு இடமில்லை.

பூனை, எலி, பாம்புபிற ஊண் உண்ணும் பறவைகளாலும் ஆபத்துக்கள் அதிகம்மரமேறும் உயிகளிடமிருந்து இவைகளைக் காப்பாற்ற சலசலப்பான சத்தம் எழுப்பும்மெல்லிய தகரம்பேப்பர் போன்றவற்றால்,கூடு அமைந்துள்ள மரங்களில் 7 அடி உயரத்திற்கு சுற்றி வைக்கலாம்.ஒலி இப்பறவைகளை விழிப்படையச் செய்யும்

எனினும்என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்மனிதனின் விழிப்புணர்வும் ,உதவியும் மட்டுமே இவைகளைக் காப்பாற்ற முடியும்.ஏனெனில் மிகமிக விரைவாக அழிந்து வரும் பறவையாக உள்ளது கவலையளிக்கிறது என்கிறார் டாக்டர் டைலன் கெஸ்லர்இவர் 30வருடங்களாக மீன்கொத்தி பறவைகளை ஆராயும் அமெரிக்க ஆய்வாளர்.மீன்கொத்திதான் பறவைகளில் அதிக போராட்டமான வாழ்வை மேற்கொள்கின்றன என்கிறார் சலீம் அலி

காரணம்அவைகளுக்கு வாழும் பரப்பளவு அதிகம் தேவைப்படுவதால் பிற உயிர்களோடும்இயற்கையோடும்மனிதனோடும் போராட வேண்டியுள்ளதுஇவைகளின் உறவு கவித்துவமானது.ஆணும் பெண்ணும் மனமொப்பி இணைகின்றனஅந்த சந்தர்பத்தில் ,பிற பறவைகள் தலையிடுவது இல்லைமாறாக,இளம் பருவத்தினர்அவைகளின் உறவுக்கு உதவுகின்றனர்இவைகள் உறவுகொள்ளும்போது தன்னிலை மறக்கின்றன.அந்த சமயம்பிற ஊண் உண்ணும் பறவைகள் தாக்குதலை நடத்துகின்றன

இவ்வாறான தாக்குதலை ,முன்கூட்டியே அறிந்து, குரல் எழுப்புதல்போரிடுதல் மூலமாக இளம் பருவத்தினர்தங்கள் கடமையை நிறைவேற்றுகின்றனர்.ஆபத்துகளைக் கருத்தில் கொண்டே உறவுக்காக மரப் பொந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றன

பிரம்மாண்டமான கரையான் புற்றுகளும் புகலிடம் அளிக்கின்றனபெண் கீழேயும்ஆண் மேலமர்ந்தும்சேவல்கோழி போல் உறவு நிகழும்சில நிமிட உறவு எனினும்பல முறை உறவு கொண்டு இன்பத்தை நீட்டிப்பதில் ஆர்வம் கொள்கின்றன

6—10 முட்டைகள் வரை இடும்.பளப்பளப்பான வெண்ணிறம் கொண்டவை இவைஅதிக பய உணர்வும்வெட்க உணர்வும் ஆட்டிப்படைக்கஆற்றங்கரை,வயல்வெளிகாடுகளின் நடுப்பகுதியைத் தனது முட்டையிடும் காலங்களில் தேர்ந்தெடுக்கின்றன

அப்போது பூச்சிகளை அதிகம் உணவாகக் கொள்வதால்பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறதுஇது இயற்கையான பயிர் காப்பாளனாக விளங்கி, விவசாயிக்கு உதவுகின்றன என்கிறார் சலீம் அலிஇதையே வேறு வார்த்தையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுக் வோக்கா பறவைகளை வாழவும்வரவழைக்கவும் வழிவகுத்திடுங்கள் அவை பூச்சிகளைப் பார்த்துக் கொள்ளும் ,பூச்சி மருந்தெல்லாம் தேவையில்லை என்கிறார்.

மிசெளரி பல்கலைக்கழக ஆய்வு ஒன்று சமீபத்திய தனது அறிக்கையில் 50,000 வருடம் கட்டிக் காத்த பாரம்பரியம்,தனித்துவத்தின் அழிவுஇப்பறவைகளின் அழிவின் மூலம் துவங்கி உள்ளதுதனிமையையும்தனித்துவத்தையும்,அமைதியையும்மட்டுமே தனது வாழ்க்கை முழுதும் மேற்கொள்ளும் ஒரு பறவையின் முக்கிய குறிப்பு இது.

வலசை பறவைகள்

அறிமுகம்

ஊர்வனவற்றிலிருந்து தோற்றம் கொண்ட பறவைகள், மரத்தில் தொற்றி, ஏறிக் கொண்டிருந்த ஆதிப் பறவையான ‘ஆர்க்கியாப்ட்ரிக்ஸ்’ நிலையிலிருந்து, இன்றைய பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளன. கண்டங்கள் பிரிந்து, நீர்நிலைகள், காடுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் உருவான பிறகு சூழலின் தகவமைப்பிற்கு ஏற்ப, நீர்ப்பறவைகளும், மற்ற வகை பறவைகளும் பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கலாம். வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப இடம்பெயர்வதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருக்கலாம்.

வலசை என்றால் என்ன?

வலசை என்பது, பறவைகளின் உள்தூண்டல், பல்லூழிகால இயல்பூக்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்வதுடன், பெரும்பாலான பறவைகள் குளிர்கால துவக்கத்தில் உள்தூண்டலால் வலசையை மேற்கொள்கின்றன என ரசிய இயற்கையியலாளர் மன்தேய்பெல் குறிப்பிடுகிறார்.

உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, தங்கள் தாய்நிலங்களிலிருந்து, வாழும் சூழல் நிறைந்த இடங்களுக்கு சென்று, திரும்பி வருவதை, ‘வலசை போதல்’ (Migration) என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலான மேற்குலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால் மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன. இவைகளை, ‘வலசை பறவைகள்’ என சுட்டுகின்றனர். வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய் நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின் பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன், ‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு ‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.

பழந்தமிழர் பாடல்களில் வலசை பறவைகள்

பறவைகள் ‘வலசை’ செல்வதை இன்றைய அறிவியலுலகம் ஆய்வு செய்துக் கொண்டிருக்க, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் ‘பறவைகளின் வலசை’யை அறிந்துள்ளனர். பழந்தமிழ் நூல்களில் ‘வலசை’ போவதை ‘புலம்பெயர் புள்’ என்றும், ‘வம்பப் புள்’ என்றும் அழைத்துள்ளனர்.

‘பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியினர்ப்
புன்னையன் கானற் புறந்தை முன்றுறை
வம்ப நாரை யின்னெலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண்டிலர்’
– அகம் 100

பொறையாற்றில் கடற்கரை முற்றத்திலிருந்து புன்னைக் கானலில் வம்ப நாரை இனமாக இருந்து ஒலித்ததாக அகநானூறு கூறியுள்ளது. விருந்து என்ற சொல் புதுமை என்றும், வம்பு என்ற சொல் நிலையின்மையைக் குறிப்பதாக தொல்காப்பியம் கூறுகிறது.

இதில் குறிப்பிடப்படும் வம்ப நாரை, செங்கால் நாரையாக இருக்கலாம் என பி.எல். சாமி தனது ‘சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’ (1976) நூலில் குறிப்பிடுகிறார். White Stork என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘செங்கால் நாரை’ ஐரோப்பாவிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையில் தமிழகத்திற்கு குளிர்காலத்தில் வலசை வரும் பறவையாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை,

நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி…

நீண்ட சிவந்த கால்களையும், பனங்கிழங்கை ஒத்த அழகிய அலகை கொண்ட செங்கால் நாரையையே (White Stork), சத்தி முத்தப் புலவர் வர்ணிக்கிறார் என்பது புலப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வலசை வருவதாக அறியப்பட்டுள்ள செங்கால் நாரையை, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கூர்ந்து அவதானித்து தொல் தமிழன் பாடியுள்ளது பிரமிக்க வைக்கிறது.

குமரி அம் பெருந்துறை ஆயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் – புறம் 67

குமரியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வடதிசை நோக்கி செல்லும் பூநாரைகள் குறித்து புறநானூறு பாடல் குறிப்பிடுகிறது. குசராத்திலுள்ள ராணா-கட்ச், ஒடிசாவிலுள்ள சில்கா ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து விட்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழகத்தின் பழவேற்காடு, கோடிக்கரை, கூந்தங்குளம் போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வலசை வரும் பூநாரைகள் குறித்து, பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட புறநானூற்றில் கூறப்பட்டிருப்பது வியப்பை தருகிறது.

பழந்தமிழர்களின் நூல்களில் காட்டுயிர்கள், இயற்கைக்கு அணுக்கமாகவும், உண்மையாகவும் நிறைய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரெதிராக, இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தில் கற்பனையும், எதிர்மறை கருத்துக்களும், புரிதலற்ற தன்மையும் பெரும்பான்மையாக உள்ளது. இது காட்டுயிர்களுக்கும், நவீன இலக்கியவாதிகளுக்குமுள்ள இடைவெளியை வெளிப்படுத்துகிறது.

காப்பிடங்களுக்கு வருகை தரும் பறவைகள் அனைத்தும் வலசை பறவைகளா?

தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா, நததைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு, நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம் செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம். இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில் உணவு தேடி மற்ற இடங்களுக்கு சென்று விட்டு, குளிர்காலத்தில் தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.

குசராத், ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு குளிர்காலத்தில் வருகை தரும் பூநாரைகள் ‘உள்ளூர் வலசை பறவை’களாகவும், ஐரோப்பா, ரசியா, இமயமலை பகுதிகளில் இருந்து வரும் பட்டை தலை வாத்து, ஆலாக்கள், உப்புக் கொத்திகள், உள்ளான்கள், நாரைகள் போன்றவைகள் ‘வலசை பறவை’களாக அறியப்படுகிறது.

வலசை உயிரினங்கள்

வலசை என்பது பறவைகளிடம் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவில் காணப்படும் “Wild Beast” எனப்படும் ‘நூ’ என்ற காட்டெருதுகளும் லட்சக்கணக்கில் இடம் பெயர்கின்றன. தான்சானியாவின் செரங்கிட்டி தேசிய பூங்காவிலிருந்து, கென்யாவின் மசைமாரா காப்பிடத்திற்கு 320 கி.மீ., தூரத்தை நூக்கள் (Wild Beast) கடக்கின்றன. சிங்கம், சிறுத்தை, சிவிங்கி உள்ளிட்ட வேட்டையாடிகளின் ஆபத்துக்கள் இருப்பினும் நூக்கள் வலசை செல்கின்றன. சூன் மாதத்தில் துவங்கும் வலசை பாதையின் இடையில் மாரா என்ற பெரிய ஆற்றை கடக்கையில் முதலை, கழுதைப் புலிகள், நரிகள், பிணம் தின்னிக் கழுகுகள் போன்ற வேட்டையாடிகளையும் கடந்து செல்ல வேண்டிய அபாயம் உள்ளது.

கருப்பு கலந்த அடர் பழுப்பு நிற உடலில், பெரிய தலையும், வாயின் கீழ்ப்பகுதியில் வளர்ப்பு ஆடுகளுக்கு உள்ளது போன்ற சிறு தாடியும், குட்டையான உடலையும் நூக்கள் பெற்றுள்ளன. வலசை பாதையிலேயே குட்டி ஈனுவதும், சிங்கம் போன்ற வேட்டையாடிகளுக்கு உணவாக மாறுவதும் நிகழ்கிறது. ஒரு தொகுப்பிற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூக்கள் திரண்டு, பல தொகுதிகளாக, சுமார் 20 லட்சம் காட்டெருதுகள் வலசை செல்வது பேரதிசயங்களில் ஒன்றாகவே இயற்கையியலாளர்களால் அவதானிக்கப்படுகிறது. மசைமாராவில் தங்கியிருக்கும் நூக்களுக்கு ‘இயற்கையின் அழைப்பு’ வந்தவுடன் அக்டோபர் மாதத்தில் தாய் நிலம் நோக்கி திரும்பத் தொடங்குகின்றன.

நூக்கள் எனப்படும் காட்டெருதுகளின் பயணத்தில் சில ஆயிரம் வரிக்குதிரைகளும் வலசை பயணத்தில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. லட்சக்கணக்கில் திரண்டு வலசை செல்லும் நூக்களின் அழகிய பயணத்தை காண உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் ஆப்பிரிக்கா நோக்கி பயணிக்கின்றனர்.

நூக்கள் தவிர, Monarch Butterfly எனும் வண்ணத்துப் பூச்சி கனடாவில் இருந்து கலிபோர்னியா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்கும், Swallow Tail வண்ணத்துப் பூச்சிகளில் ஒரு வகை இந்தியாவிலிருந்து 10 கி.மீ., வேகத்தில் 2000 கி.மீ., தூரம் பறந்து இலங்கைக்கு வலசை செல்கின்றன.

நாகணவாய் குடும்பத்தை சார்ந்த சூரமாறிகள் (Rosy Starling) இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு குளிர்காலத்தில் வலசை வருகின்றன. சூரமாறிகள் குளம், குட்டை, ஏரி, ஆறு என்று நீர்நிலைகள், பரந்த புல்வெளிகளில் கூட்டமாக வாழக் கூடிய இயல்புடையது. மாலை நேரத்தில் கூட்டமாக பறக்கும் போது இடமும், வலமும் மாறி, மாறி பறந்து பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும். விளைநிலங்களில் சோளம் உள்ளிட்ட மற்ற பயிர் வகைகளுக்கு தீங்கு ஏற்படுத்தினாலும், விளைநிலங்களுக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கக் கூடிய வெட்டுக் கிளிகளை உண்டு விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன. கோடிக்கரையில் ஊசிவால் வாத்துகளின் கூட்டத்தையும், பவழக்கால் உள்ளான்களின் எழில்மிகு பறப்பையும் கண்டு இரசித்தப்படி, ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த எங்களுக்கு இடப்புறத்திலிருந்து வலப்பக்கமாக சட்டென பறந்து சென்ற பறவைக் கூட்டத்தை, அதே வேகத்தில் படம் பிடித்திருந்தேன். பிறகு பறவை நூலில் ஒப்பிட்டு பார்க்கும் போது, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் சூரமாறிகள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இரவாடிகளான பட்டை தலை வாத்துகளை திருப்பூர் நஞ்சராயன் குளம், கோடிக்கரை, கூந்தங்குளம், பழவேற்காடு காப்பிடம் என பல இடங்களில் தேடியலைகிறேன். எனக்கும், என் ஒளிப்படக் கருவிக்கும் சிக்காமல் ‘பட்டை தலை வாத்துகள்’ தப்பித்ததுக் கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு, பூநாரைகளின் இனிய காதல் நடனத்தை கூந்தங்குளம் பறவைகள் காப்பிடத்தில் நீண்ட நேரம் கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.

இமயமலை பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து விட்டு, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நீலத்தலை பூங்குருவிகள் குளிர் காலத்தில் வலசை வருகின்றன. எலி, சிறு பறவைகள், பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இரவாடியான குட்டைக் காது ஆந்தை (Short-eared Owl), தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு குளிர் காலத்தில் வலசை வருகின்றன. (பெரும்பாலான ஆந்தைகள் வலசை செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆர்டிக் பகுதியிருந்து சற்றேறக்குறைய 20,000 கி.மீ., தொலைவிற்கு சென்று திரும்புகின்ற துருவ ஆலாவே (Artic Tern), வலசை பறவைகளுள் அதிக தொலைவு பயணிக்கின்றன. இப்பறவை இந்தியாவில் வெகு அரிதாக காணப்படுவதுண்டு.
வலசை குறித்த ஆய்வுகள்

வலசை பறவைகள் (Migratory Birds) புவியின் மின் காந்தப்புலத்தை (Electromagnatic Field) உணர்ந்தே செயல்படுவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவித்தாலும், தங்களது பாதைகளை முன்னுணர்ந்து, தொடர்ந்து பயணிப்பது முழுமையாக விடுபடாத புதிராகவே உள்ளது. பறவையியல் அறிஞர்கள் வலசை செல்லும் பறவைகளின் பாதைகளை கண்டறிந்து, அதன் வான்வழிகளை 12 தடங்களாக பிரித்துள்ளனர். இதில் இந்தியாவிற்கு வலசை வரும் பறவைகளின் வான் வழியை ‘மத்திய ஆசிய வான்வழி’ என பெயரிட்டுள்ளனர்.

ஒவ்வொரு பறவையும் தனக்கென ஒர் வாழ்வெல்லையை நிர்ணயித்துக் கொண்டு, அதற்குள்ளாகவே கூடுகட்டுவது, இணை தேடல், உணவு தேடல் என அனைத்து செயல்பாடுகளை நிகழ்த்துகிறது. இது ‘வாழ்வு எல்லை’ (Territory) என்றழைக்கப்படுகிறது. இது போலவே வலசை பறவைகள், தங்களது வலசை பாதையில் சீராக பயணிக்கின்றன. வாழ்வெல்லையை தாண்டி செல்லும் பறவையும், வலசை பாதையை தவறவிடும் பறவையும் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகின்றன.
இறுதியாக

வலசை மேற்கொள்ளும் பறவைகள் தங்கள் பாதையை எப்படி, எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கின்றன? பல தலைமுறைகளாக ஒரே வழித்தடத்தில் செல்வது ஏன்? சூழல் மாறுவதை எப்படி முன் உணர்கின்றன? என பல்வேறு தளங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வலசை வந்துக் கொண்டிருந்த பறவைகள், இன்று ஆயிரக்கணக்காக குறைந்து போனதற்கு, நீர்நிலைகள், வாழிட அழிவு தான் முதன்மை காரணமாக அமைந்துள்ளது. வலசை பறவைகள் மட்டுமின்றி, உள்ளூர் பறவைகளையும் காக்க, நீர்நிலைகளையும், தாவரங்களையும் காப்பது அவசியமாகிறது. நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகளை சீர்ப்படுத்தி, நன்னீர் நிலைகளாக மாற்றி, இயல்பான மரங்களை வளர்க்கும் போது, வலசை பறவைகள் மட்டுமல்லாது, உள்ளூர் பறவைகளும் அவ்விடத்தை சோலையாக மாற்றும்.

கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டளவில் வலசை பறவைகளை காக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் வலசை பாதைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நீர்நிலைகளை காக்க என பல வழிகளில் மக்களிடம் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘உலக வலசை பறவைகள் தினம்’ மே 10, 11 தேதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பறவைகளையும், இயற்கையையும் உயிரினும் மேலாக காத்து வந்தவர்கள் தமிழர்கள். ஒரு நாட்டின் அரணாக தொல் தமிழன் வள்ளுவன் சுட்டிய மணிநீரையும், மண்ணையும், மலையையும், அணிநிழற் காட்டையும் காத்து, இலட்சக்கணக்கான விருந்தாளிகளை (பறவைகள்) தமிழகத்திற்கு வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top