Home » 2016 » August » 20

Daily Archives: August 20, 2016

பெண்ணை மணக்க தகுதி!!!

பெண்ணை மணக்க தகுதி!!!

விக்கிரமாதித்தன் கதை பெண்ணை மணக்க யாருக்கு தகுதி? விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு ... Read More »

ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள் எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தகுந்த சைன்யத்தை ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தப் படைவீரர்களின் தொகுப்பு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும், அவர்கள்மீது கொள்ளப்பட்ட கண்காணிப்பு பற்றியும் மஹாகவி காளிதாஸன், தனது “ரகுவம்ச” காவியத்திலே அழகாக வர்ணித்துள்ளார். 1. மௌலா: நல்ல குடியில் பிறந்து, பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்பவர்கள். இவர்களைச் சுலபத்தில், பகைவர்கள் பணத்தாலோ, மற்ற வகையாலோ வசப்படுத்த முடியாது. இவர்கள் தங்களது அரசரிடத்தில் உறுதியான விஸ்வாசம் ... Read More »

பதினாறு செல்வங்கள்!!!

பதினாறு செல்வங்கள்!!!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத ... Read More »

திருவிளக்கின் தத்துவம்!!!

திருவிளக்கின் தத்துவம்!!!

திருவிளக்கின் தத்துவம் ………. குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும். திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் ... Read More »

Scroll To Top