Home » 2016 » August » 28

Daily Archives: August 28, 2016

வேதாந்தமும் தனிச்சலுகையும்!!!

வேதாந்தமும் தனிச்சலுகையும்!!!

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் ... Read More »

இராமன் பற்றிய பழமொழிகள்!!!

இராமன் பற்றிய பழமொழிகள்!!!

அனுமார் வால் போல நீளுகிறதே – அனுமார் வால் போல நீண்டதாம்! இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக ... Read More »

ஸ்வஸ்திகா சின்னம்!!!

ஸ்வஸ்திகா சின்னம்!!!

ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவம்! ஸ்வஸ்திகா என்பது ஒவ்வொரு இந்து வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான சின்னமாகும். இந்துக்களின் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிலும் இந்த சின்னம் கண்டிப்பாக இடம் பெறும். ரங்கோலி வடிவிலோ அல்லது கலசத்திலோ அல்லது வீட்டின் கதவுகளிலோ அது வரையப்பட்டிருக்கும். ஸ்வஸ்திகா எனும் வார்த்தை ‘சு’ (மங்களகரம் என பொருள் தரும்) மற்றும் ‘அஸ்தி’ (இருக்கும் என பொருள் தரும்) என்ற இரண்டு அசைகளால் உருவானவை. இரண்டையும் சேர்த்தால் ஸ்வஸ்திகா என்பதற்கு ‘மங்களகரம் உங்கள் உடனிருக்கும்’ ... Read More »

அன்பு பயமறியாதது!!!

அன்பு பயமறியாதது!!!

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. ... Read More »

Scroll To Top