Home » படித்ததில் பிடித்தது » கந்தன் பாட்டு!!!
கந்தன் பாட்டு!!!

கந்தன் பாட்டு!!!

1. கந்தன் காலடியை…

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளை இல்லை மருமகன்தான் திருமகன் (கந்)

உமையவள் தன் வடிவம் மதுரை மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சி காமாட்சி
கங்கையிலே குளிக்கிறாள் காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கிணை எவனுண்டு (கந்)

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவர்க்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள் (கந்)

2. கோடிமலைகளிலே….

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை – எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை – எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை – எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் – மருதமலை
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலங்காக்கும் வேலய்யா – ஐயா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் – ஐயா
உனது மங்கள மந்திரமே

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தையா ஆ…ஆ…ஆ….

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக
ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்
பக்திக் கடலென பற்றுப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே! அழகிய திருமகனே
காண்பதெல்லாம் உனது முகம் – அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே ! குருபரனே ! அருள் கதியே சரவணனே

பனி எது மழை எது நதி எது கட லெது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய்… குகனே…. வேலய்யா…

3. வருவாண்டி தருவாண்டி….

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள் வாண்டி
அவன் ஆண்டி பழனியாண்டி
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி
அவன் தாண்டி – பாலபிஷேகங்கள் கேட்டாண்டி – சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி (வரு)

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
பழனிமலையாண்டி பழனிமலையாண்டி பழனிமலையாண்டி

4. குன்றத்திலே குமரனுக்கு…

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானைத் திருமணமாம் – திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள்
முருகப் பெம்மானை முருகப் பெம்மானை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா ! வெற்றிவேல் முருகா !
வேல் முருகா ! வெற்றிவேல் முருகா !

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகராப் பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா அரோகரா
வெற்றி வேல் முருகா அரோகரா –

5. திருச்செந்தூரின் கடலோரத்தில் ….

திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக்காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமர னவன் கலையா

மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுமம்மா ஆறுமுகம் இங்கு
பொன்னழகு மின்னிவரும் வண்ண மயில் கந்தா
கண்மலரில் தன்அருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுறுகி நின்றால்
கந்தா முருகா… வருவாய் – அருள்வாய் -முருகா

6. முருகா என்றதும் உருகாதா….

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா (முருகா)

முறை கேளாயோ குறை தீராயே
மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் (முருகா)

ஜன்ம பாபவினை தீரவே பாரினில்
தினமே பதாம பஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவபாலா
சர்வமும் நீயே சிவசக்தி வேலா (முருகா)

7. சிந்தனை செய்மனமே..

சிந்தனை செய் மனமே – தினமும்
சிந்தனை செய் மனமே செய்மனமே – செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை (சிந்)

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை – செந்தில்
கந்தனை வானவர் நாவலனை – குகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை ஆதலினால் (சிந்)

இன்றே அருமறை பரவிய சரவண பவ குகனை (சிந்)

8.ஆறுமுகமான பொருள்….

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகனிவன் முருகனெனும் இனிய பெயர் கொண்டான்
காலமகள் பெற்ற மகன் கோலமுகம் வாழ்க !
கந்தனென குமரனென வந்த முகம் வாழ்க (ஆறு)

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண்ணிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால்மணமும் பூமணமும் மணக்கும் முகம் ஒன்று
காவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளிரதம் போலவரும் பிள்ளைமுகம் ஒன்று (ஆறு)

9. பழம் நீயப்பா ஞானப் பழம்…

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ்ஞானப்பழம் நீயப்பா
சபைதன்னில் உருவாகி – புலவோர்க்கும்
பொருள் கூறும் பழம் (நீயப்பா)
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் – நெஒற்றிக்
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் வந்தாய் – ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்… திரு
கார்த்திகைப் பெண் பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த (பழம்)
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றோரு முண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கைலையில்
நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு – உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் – ஒளவையின்
தமிழுக்கு உரிமையுண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ ! மாறுவது மனம் ! சேருவது யினம்
தெரியாத முருகனா நீ !
ஏறுமயில் ஏறு ஈசனிடம் நாடு ! இன்பமும் காட்டவா நீ
ஏற்றுக் கொள்வார் ! கூட்டிச்செல்வேன் ! என்னுடன் ஓடிவா நீ

10. பால் மணக்குது….

பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே
மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே அப்பப்பா
முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா(து) மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே
தேனிருக்குது தினையிருக்குது தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம்
சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம்
சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி – அவன்
போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே
இந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் விராலி
மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடி தேடி எங்கும் காணேனே

11. திருநீரில் மருந்திருக்கும்..

திருநீரில் மருந்திருக்கும் தெரியுமா?
திருநீரில் மருந்திருக்கும் தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கும் புரியுமா
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கும் புரியுமா முருகன் (திருநீரில்)

அருள் மணக்கும் ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக்கண்ணை திறந்து வைக்கும் அருமருந்து
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும்மருந்து வேலன் (திருநீரில்)

கன்னியரை கற்பு வழியில் நடத்து மருந்த
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து
மங்கையர்க்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து
திரு மங்களமாய் குங்குமமும் வழங்கும் மருந்து குமரன் (திருநீரில்)

கற்பனையில் கவிதைபாட செய்யும் மருந்து
பெரும் கள்வரையும் திருந்திவாழ செய்யும் மருந்து
முன்வினை தந்தஊழ் எல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்செல்வமெல்லாம் கொடுக்கும் மருந்து கந்தன் (திருநீரில்)

12. ஆறெழுத்தில் மந்திரமாம்

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவண பவ எனும் மந்திரமாம் (ஆறெ)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் … நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திருமந்திரமாம் … நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் … நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தான் பெற்ற மந்திரமாம் … நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம் (ஆறெ)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் … நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் … பல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம் (ஆறெ)

13. காவடிகள் ஆடி வரும்….

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே … முருகா
ஆட்டத்திலே ஆடல்
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே முருகா கூட்டத்திலே (பால் காவடிகள்)
சேவடி காணவென்றே ஓடி வருவார் … அவர்
சிந்தையிலே உந்தனையே பாடி வருவார் … முருகா பாடி வருவார் (மச்ச காவடிகள்)
ஏறாத மலையினிலே ஏறி வருவார் ஏறுமயில்
வாகனனை காண வருவார்
உள்ளவனும் இல்லா என்ற பேதமில்லை …. அருள்
வள்ளல் உந்தன் அன்புக் கொரு எல்லை இல்லை (பன்னீர் காவடிகள்)
தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் … வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார் (பூங்காவடிகள்)

14. கற்பனை என்றாலும்….

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே (கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே (கற்பனை)

15. முருகனுக்கொரு நாள்…

முருகனுக்கொரு நாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்கொருநாள் திருநாள்
நல்ல கார்த்திகை பெருநாள் ஒரு நாள் (முருக)

வைகாசி விசாக திருநாள்
வண்ணக்கதிர் வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோம வாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள் (முருக)

சரவணன் பிறந்த திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒரு நாள்
கந்தனின் காலடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளி பெருநாள் (முருக)

16. ஒருமுகமாய் நின்று…

ஒருமுகமாய் நின்று பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா…. முருகா உன்
ஆறுமுகம் போலாகுமா
இனிக்கும் மதுவை வைத்த விழிகளுண்டு… அன்பு
இன்பமெல்லாம் உதிர்க்கும் கருணையிலே
பனிக்கும் கதிரவன் போல் இருக்கும் கந்தனே
பாதம் தொட்டால் மணக்கும் படைப்பு அதில் சிரிக்கும்
கருவாகி உருவாகி காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி போற்றும் பொருளாகி
மலைகண்ட இதயமெல்லாம்குடி கொண்ட வேலவனே
வணங்கி நின்றால் இரங்கிவரம் கொடுக்கும் சிவனே

17. கருணை முகங்கள் ஓராறு….

கருணை முகங்கள் ஓராறு காக்கும் கரங்களோ ஈராறு
முருகன் வாழும் வீடாறு
முகம் பார்த்து இறங்க வேராறு கந்தன்
துணை அன்றி ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் வாழ்வின் வேலை (கருணை)

அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில்
குடியாய் இருப்பவன் குறைதீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

18. வேல் வந்து வினை தீர்க்க….

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராடி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனை கண்டானடி எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல்)

19. முருகா உந்தன் சிரிப்பு…

முருகா உந்தன் சிரிப்பு முத்தமிழின் உயிர் சிரிப்பு
குமரா உந்தன் சிரிப்பு
குழந்தையின் முதல் சிரிப்பு
கண்களிலே பொங்கி வரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளில் தாங்கிவரும் வேல் சிரிப்பு
புன்னகையில் ஏந்தி வரும் பால் சிரிப்பு
அந்த பழனியிலே தோன்றிவரும் சிரிப்பு
தத்துவங்கள் பேசி வரும் தவச்சிரிப்பு
என்றும் தென் கடலில் அலைபாயும் புன் சிரிப்பு
எத்திசையும் கொடிபறக்கும் புகழ் சிரிப்பு
கருணை பொழிந்து கொண்டே
மணம் கொடுக்கும் உன் சிரிப்பு

20. ஆயிரம் கோடி நிலவுகள்…

ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
வாவையூரனை கீரி கிழித்திடவேலோடு
பன்னிரு கையென வந்திருக்கிற இடம் திருச்செந்தூரு
கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்
அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
தாய் பராசக்தி அவள் தந்த அருளோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும் (ஆயிரம்)

நம்பிதொழுகிற நெஞ்சின் கவலைகள் தூளாகும்
மனம் நாடபிறந்த அவன் ஞானசுந்தரி களியாகும்
கோயில்படிகளில் வேலும் மயிலும் விளையாடும்
அந்த கூத்துக்கு தகுந்த மாதிரி சேவல் இசைபாடும்
குன்னடி என்றென்ன பிரமிக்கச் சிலையானவன்
தந்தைகுந்தி குனிந்திட மந்திரம் சொல்லி உருவானவன்
வண்ணகுமரிகள் நெஞ்சத்து நல்ல துணையானவன்
பல குன்றுகளின் சிறுதுண்டுடன் நின்றுதவமானவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top