Home » படித்ததில் பிடித்தது » வீரம் அசல் அடையாளம் வீரன் தீரன் சின்னமலை!!!
வீரம் அசல் அடையாளம் வீரன் தீரன் சின்னமலை!!!

வீரம் அசல் அடையாளம் வீரன் தீரன் சின்னமலை!!!

தீரன் சின்னமலையின் முன்னோர்கள்:

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை.

இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது.

இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது. ‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள்.

வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள். இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது.

இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார்.

அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது. பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள்.

இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு? சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான்.

பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான். அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான். இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் – முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.

மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால் புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’ என்ற பழம்பாடல் விளக்குகிறது. கொங்குநாடு பல ஆண்டுகளாக சோழ வேந்தர் ஆட்சியில் இருந்தது. ஆடல், பாடல்களிலும் கணிகையர் வலையிலும் வீழ்ந்து கிடந்த பிற்காலச் சோழ அரசர்களால் சோழர் ஆட்சி நலிவுற்ற காலகட்டத்தில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் படைத்தளபதியாக கொங்கு வேளாளரில் பயிரகுல காரையூர் சர்க்கரை என்ற துடிப்பான இளைஞன் ஒருவன் இருந்தான்.

அக்காலகட்டத்தில் சோழர் படைவீரர்கள் அடிக்கொருமுறை கொங்குமண்டலத்தில் படையெடுத்துப் புகுந்துகொண்டு கொள்ளையடித்தும், கொலைசெய்தும் கொங்குநாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தனர். கொதித்தெழுந்து இதைத்தடுத்து நிறுத்த காரையூர் சர்க்கரை குதித்தோடி முன்வந்தான். பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சோழமன்னனை நேரில் கண்டு “அரசே, தங்களது முன்னோர்கள் பாதுகாத்துவந்த இக்கொங்குநாட்டை உங்கள் படைவீரர்கள் கொள்ளையிடுகிறார்கள். இது தருமம் ஆகாது, இது நீதியாகாது. அன்புகூர்ந்து, கருணை கூர்ந்து கொள்ளையடிக்கும் படைகளை கொங்கு மண்ணிற்குள் நுழையவிடாமல் திரும்பிப் போக வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

இதை சோழ மன்னன் ஏற்றுக்கொள்ளாமல் கடும்கோபம் கொண்டான். இனிப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணி தனது படையுடன் சென்று சோழர் படையை அடியோடு விரட்டித் துரத்தித் துரத்தி அடித்தான். கி.பி. 1251ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது.

வெற்றி பெற்றுத் திரும்பிய தனது தளபதியைப் பாராட்டி வாழ்த்தி பாண்டிய மன்னர் “நல்ல சேனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் அளித்துப் பாராட்டினான்.

இம்மரபினர் பழைய கோட்டையில் இன்றும் ‘நல்ல சேனாதிபதி’ என்ற பட்டத்துடனும், பெரும்புகழுடனும், மக்கள் செல்வாக்குடனும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வரலாற்றுச் செய்தியை மிகவும் இனிமையான பழம்பாடலில் இருந்து தெளிவாக அறியலாம்.

கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கொங்கு 24 நாடுகளுக்கும் தலைவராக இந்த சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப்பட்டனர். அதிலிருந்து சர்க்கரை மரபினருக்கு “பட்டக்காரர்””என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது. சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான்.

இவ்வீரச்செயலை, ‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான். இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.

பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர். உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் ‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான்.

பின்னர் இப்பட்டம் ‘உத்தம சோழக்காமிண்டன்’’என்று மாறியதை நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’ என்று மாறிவிட்டது.

காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது. 24 நாடுகளிலும் புகழ்கொண்ட கொற்றவேல் சர்க்கரை அரண்மனையில் அன்னக்கொடியும், மேழிக்கொடியும் கட்டி ஆட்சி அதிகாரம் செலுத்தியவர். ஆனூரிலிலிருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் தற்பொழுது நொய்யல் நதிக்கரையில் உள்ள அரண்மனையைக் கட்டிக் குடியேறியது இவர் காலத்தில் தான். அவர் பட்டாபிடேகப் பாடல் அவர் பெருமையையும், புகழையும் காட்டுகிறது.

நத்தக்காடையூர் செயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் பெரும் திருப்பணி செய்தவர். அரும்பாடுபட்டு அக்கோயிலில் சிவன் தீபத்தம்பத்தை நிறுவியர். இத்தீபத்தம்பத்தின் தென்மேற்குத் தூணில் இவர் உருவச்சிலை உள்ளது. இவர் தலைசிறந்த கவிஞர். இக்கோயில் அம்மன் நல்லமங்கை மீது இவர் ஒரு சதகம் பாடியுள்ளார். அச்சதகத்தின் சில பாடல்கள் கிடைத்துள்ளன. சடையபெருமாள், அருணாச்சல வாத்தியார், சம்புலிலிங்க ஒதுவார், கார்மேகக் கவிஞர் போன்றவர்கள் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இவர் மிகச்சிறந்த பக்தர். பழநியில் இவர் மடம் இன்றும் உள்ளது. சர்க்கரை மடம் என்று அதற்குப் பெயர். ஒரே நாளில் குதிரைச் சவாரி செய்து கொங்கேழு சிவாலய தரிசனம் செய்த பெருமை உடையவர். கருவூர், வெஞ்சமாங்கூடல், கொடுமுடி, அவினாசி, பவானி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி என்பன கொங்கேழு தலங்களாகும். கால்நடை மருத்துவம் இவைகளில் மிகவும் கைதேர்ந்தவர், பயிர்காப்பு மருத்துவர்.

மிகச்சிறந்த தத்துவஞானி, சமரசநோக்கம் உடையவர். நாட்டுப்பற்று உடையவர். ‘கொங்கதன் மண்ணே சுகம் தரும்’ என்று பாடியுள்ளார். ஆனூர் சர்க்கரை மரபில் வந்த கொற்றவேல் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் என்பவர் 1708-இல் பட்டத்துக்கு வந்தார். அப்பட்டக்காரரான இக்கொற்றவேல் சக்கரைக்கு இரண்டு மனைவிகள்.

இருவருக்கும் குழந்தைப் பாக்கியம் வாய்க்கவில்லை. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கொற்றவேல் மன்றாடியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் பழநிக்கு சஷ்டி திருநாளுக்குச் சென்று பழையகோட்டை திரும்பி வரும்பொழுது வரும் வழியில் செலாம்பாளையம் என்ற ஊர் வழியாக வரநேரிட்டது. அவ்வூரில் தனது பங்காளிகள் முறையாகிய பயிர குலத்தவர்கள் வாழ்ந்துவந்தனர். தம் உறவினர் ஒருவர் வீட்டில் இரண்டு சிறுவர்களை நேரில் கண்டார்.

சுறுசுறுப்பும், துடிப்பும், புத்திக்கூர்மையும் மிக்க அச்சிறுவர் இருவரையும் சுவீகாரம் (தத்து எடுப்பதாக) செய்துகொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.  அதற்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேண்டிய அளவு செல்வமும் நிலமும் அளிக்கப்பட்டன. ஆகவே, நீண்ட நாளைக்குப் பிறகு பயிரங்குலத்தைச் சேர்ந்த தன் உறவினர் ஒருவரின் வீட்டில் உள்ள இரு சிறுவர்களை தத்து எடுத்துக்கொண்டார்.

தத்தெடுத்த தனது பங்காளி வீட்டுப் பிள்ளைகளான, ஆண் மக்கள் இருவரின் வயதுகள் முறையே 5, 3 ஆகும். அப்படி சுவீகாரம் செய்து பழையகோட்டைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கு அரண்மனை மரபுப்படி முறையாக மூத்தவனுக்கு சேனாதிபதி என்றும் இளையவனுக்கு இரத்தினம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

செல்வச்செழிப்புடன், சீரும் சிறப்புமாக இருவரும் வளர்க்கப்பட்டனர்.  மூத்தவர் சேனாதிபதியை மூத்த மனைவியும், இளையவர் இரத்தினத்தை இளைய மனைவியும் மிகுந்த அன்புகாட்டிச் செல்லமாக வளர்த்துவந்தனர். துவக்கக்கல்வியை படித்து முடித்தபின் அரண்மனைப் புலவர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றுவந்தனர். அரண்மனைப் பிள்ளைகளுக்குண்டான வீர, தீர விளையாட்டுக்களிலும் தேர்ச்சிப் பெற்றனர்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு முறைப்படி, மூத்தவர் சேனாபதிக்கு காங்கயம் செங்கண்ண குல பல்லவராயர் குடும்பத்திலும், இளையவர் இரத்தினத்திற்கு பெரிய ஆரியப்பட்டி ஒதாளன் குலத்து பத்துகுடி உடையாக் கவுண்டர் குடும்பத்திலும் பெண் எடுத்து மணம் செய்விக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் அரண்மனை மரபுப்படி மூத்தவரான சேனாபதிக்கு “நல்ல சேனாபதி சக்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார்””என்ற பட்டம் சூட்டப்பட்டு பழைய கோட்டை அரண்மனைக்கு 20ஆம் பட்டக்காரராக 08.02.1731-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பட்டக்காரர் மரபில் மூத்தமகனுக்குத்தான் நாடாளும் உரிமை. அதன்படி சின்னமலையின் பெரியப்பா மூத்தவரான சேனாபதி ஆட்சியை ஏற்று அரண்மனையில் தங்கினார். பழையகோட்டை அரண்மனையில் மூத்த மகனுக்கே பட்டக்காரராக, சமுதாயத் தலைவராகத் தகுதியுண்டு. அரண்மனை அதிகாரமும், நிர்வாகமும், சொத்துக்களும் மூத்தவருக்கே உரியது. இளையவர்கள் வாழ்க்கைக்கேற்ற பொன், பொருள், பூமி முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக் கிராமங்கள் ஏதேனும் ஒன்றிற்கு குடியேறி விடுவது அரண்மனை மரபு.

அல்லது இளையவர்கள் பக்கத்தில் தாங்கள் விரும்பும் ஊரிலும், தங்களுக்குப் பிடித்த வசதியுடைய ஏதேனும் ஒரு ஊரில் குடியேறிவிடுவர். சிலர் தமது விருப்பப்படி தூரத்தில் உள்ள ஊர்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வதுண்டு. அப்படிக் குடியேறிய சிலர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் “மன்னடியார்”’பட்டம் பெற்று இன்றும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் தமது தமிழகத் தொடர்பை இன்றும் கூட பெருமையாக நினைவு கூறுகிறார்கள்.

அதன்படி, சேனாபதி பழையகோட்டை அரண்மனைக்கு பட்டக்காரராக முடி சூடியதும், இளைய மகனான இரத்தினம் (தீரன் சின்னமலையின் தந்தை) தனக்கு தேவையான பொன், பொருள், முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு தன் மனைவி பெரியாத்தாளுடன், அரண்மனைக் கிராமமான காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் குடியேறினார். காங்கேய நாட்டில் மன்றாடியார் மரபினுக்கு ஆனூர், பழையகோட்டை, நத்தக்காடையூர் போல மேலப்பாளையமும் உரிய ஊராகும்.

ஆனூருக்கு மேற்கே இருந்தமையால் பாளையம் அது மேலப்பாளையமாயிற்று. மேலப்பாளையம் இலக்கிய வழக்கில் மேலைநகர் என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றுள்ள மேலப்பாளையம் என்னும் ஊர் முன்பு இவ்விடத்தில் இல்லை. ஒரு பர்லாங்கு தொலைவில் கிழக்கில் கோட்டைக்காடு, ஊர்த்தோட்டம், நடுத்தோணி, குட்டைக்காடு என்றுள்ள பகுதிகளில்தான் பழைய ஊர் இருந்தது. கீழ்பவானி வாய்க்காலால் ஊர் இடம்பெயர்ந்து கொஞ்சம் மேற்கே வந்துவிட்டது. மிகவும் இனிமையான செயல்கள் செய்பவர்கள் சர்க்கரை என்று பெயர் பெற்றனர்.

பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் எல்லாப் பட்டக்காரர்களுக்கும் சர்க்கரை என்ற சிறப்புப் பெயர் இன்றளவிலும் அவர்களது பெயரின் கடைசியில் இணைந்து வருகின்றது. சர்க்கரை என்ற பெயர் தலைவர்களின் பெயரோடு வருவதால் முன்னாளில் பழையகோட்டையில் சர்க்கரைக்குச் சர்க்கரை என்று பெயரை யாரும் சொல்லுவதில்லை.

‘இனிப்புப் பொடி’ போன்ற வேறு பெயர்களையே சொல்லுவர். ஒருசிலர் சக்கரை என்றும் கூறுவர். இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியருக்கு 5 ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமிழ் தாது வருடம் சித்திரை மாதம் 9-ஆம் நாள் 17.04. 1756 -ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில், பழைய கோட்டை பட்டக்காரர் மரபில், ஆனூர் அரண்மனையில் இரத்தின சர்க்கரை கவுண்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவன் தீர்த்தகிரி.

மூத்த சகோதரர் கொளந்தசாமி, இளைய சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி. ஒரே தங்கை பருவதம் ஆகியோர் உடன் பிறந்தவர்களாவர். சகோதரர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தனர். தீர்த்தகிரி, பெரியதம்பி, கிலேதார் மூவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் மூவரும் தேசத்தையும், கொங்கு நாட்டையும் மணந்ததனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.

மூத்தவன் குழந்தைசாமி தாய் மாமனின் மகள் கெம்பாயியை மணம் கொண்டார். கடைசி தம்பியான குட்டிசாமிக்கு காங்கயம் சிதம்பர பல்லவராயரின் மகள் பகவதியை மணம் முடித்தார்கள். மற்றுமுள்ள மகன்கள் மூவரும் நாடு, நகரம், ஊர், உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் ஒரே தங்கையான பருவதத்தை உலகபுரம் சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த பழனியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இளம் பருவத்தில் தீர்த்தகிரியை தம்பாக்கவுண்டர், சின்னக்கவுண்டர் என்ற பெயராலும் செல்லமாக அழைப்பார். தீர்த்தகிரியின் தம்பிகளில் தம்பி என்பவர் மூத்த தம்பியாவார்.

எனவே அவர் பெரிய தம்பி என்று அழைக்கப்பட்டார். கிலேதார் என்றால் கோட்டைத் தலைவர் என்பது பெயர். கொங்கு நாட்டின் 19-ஆவது பட்டக்காரரான கொற்றைவேல் சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் 1708-இல் இருந்து 1731 வரை சிறப்பாக நிர்வாகம் நடத்தி நாட்டை ஆண்டார். இவர்தான் சின்னமலையின் தாத்தா. பழைய கோட்டைப் பட்டக்காரர் தம் மரபில் 19ஆம் பட்டக்காரராக விளங்கியவர் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆவார். காங்கயம் பகுதியில் நத்தக்காடையூர் அருகே உள்ள ஆனூர் அரண்மனைதான் இன்று பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 5 அண்ணன்களை கொண்ட தீரனின் தங்கை பருவதம் தீரனின் மீதே அதிக பாசம் கொண்டிருந்தார்.

இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால் “உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான்.

காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்டி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.

கொங்குப்பகுதியில் வசூலித்த வரிகள், தானியங்கள், கல்நடைகளுடன் 1782ல் மைசூர் புலி ஹைதர் அலியின் திவான் முகமது அலி வருகின்றான். தீர்த்தகிரி என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் தலைமையில் ஒரு இளைஞர் படை வழிமறித்து நிற்கின்றது.

“யார் நீ?” திவானின் அதிகாரக் கேள்வி எழுகிறது. “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று உரிமைக்குரல் நீள்கிறது. “இது மைசூருக்கு கட்டுப்பட்ட ஆட்சி” என்கிறார் திவான்.

இங்கு எங்களாட்சி தவிர வேறு எந்த ஆட்சியும் செல்லாது என்று தீர்த்தகிரி தீர்மானமாக பதில் தருகிறான். தொடர்ந்து வரிப்பொருட்களை பறித்து மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர் தீர்த்தகிரியின் படையினர். வரிகளையும், அதிகாரத்தையும் திவான் இழந்து அவமானத்தைச் சுமந்து சென்றான்.

வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றான். தனது படைகளை திரட்டினான். தீர்த்தகிரி பாளையத்தின் மீது படையெடுத்து வந்தான். தகவல் அறிந்த தீர்த்த கிரி தனது பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் திவானின் படையை வழிமறித்து எதிர் கொண்டான். பாளையங்களை தாண்டியும் தீர்த்தகிரியின் கீர்த்தி பரவியது.

தோல்வி அடைந்த திவான் மைசூருக்கு சென்று பெரும் படையுடன் திரும்ப நினைத்தான். ஆனால், அதற்குள் 1782ல் ஹைதர் அலி மரணம் அடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அரியனை ஏறிய திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க விரிவான அணியை உருவாக்கினான். கொங்கு நாட்டு தீர்த்த கிரிக்கும் அழைப்பு விடுத்தான். அண்டைய மன்னனின் ஆட்சியை ஏற்காத தீர்த்தகிரி அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடத்தயங்குவானா? தானும் இரு தம்பிகளுடனும், தனது நம்பிக்கைக்குரிய வீரர்கள் கருப்பன், வேலப்பருடனும், திப்புசுல்தானின் ஆங்கிலேய எதிர்ப்பு அணியில் இணைந்தான். 1000 பேர்கள் கொண்ட தீர்த்தகிரியின் படைக்கு திப்புவின் நண்பர்கள் பிரெஞ்சு தளபதிகள் பயிற்சி அளித்தனர். முறையான படைத்தளபதியாக உயர்ந்தான் தீர்த்தகிரி.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார் தீர்த்தகிரி. புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சமயங்களை சேர்ந்தவர்களும் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

தீர்த்தகிரி தனது படைபலத்தை பெருக்கினான் ஒடா நிலையில் கோட்டையை கட்டி முடித்தான். அங்கேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யத் துவங்கினான். பிரிட்டிஷாருக்கு, சேலமும், மலபாரும், மைசூரும் தங்கள் வசம் உள்ளபோது இடையில் உள்ள கொங்குப்பகுதி அவர்கள் வசம் இல்லாதது இடைஞ்சலாக இருந்தது. தீர்த்தகிரிக்கு தூது அனுப்பி அவர்களுடன் இணைந்து வரிசெலுத்திட கோரினர். தீர்த்தகிரி தீர்க்கமாக மறுத்தான். எதிர்விளைவுகள் என்னவாக இருந்தாலும் சந்திக்க தயாரானான்.

மண்டியிட மறுத்த தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்தான் தீர்த்தகிரி, நொய்யல் ஆற்றில் தனது படைகளுடன் காத்திருந்து வெள்ளையர் படையை எதிர்கொண்டு சிதறடித்தான் கேப்டன் மக்கீஸ் கானின் தலைதுண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட ஆங்கிலேயர்கள் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் தீர்த்த கிரியின் படையுடன் மோதியது. தீர்த்தகிரி என்ற அந்த தீரன்சின்னமலையின் தனிதிறமைவாய்ந்த வீரத்தை யுத்தகளத்தில் நேரில் கண்டான். தனது படைகளுடன் சமாளிக்க முடியாமல் பின்வாங்கினான்.

சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

எப்படியும் தீரன் சின்னமலையை வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் வெள்ளையர்கள் பெரும் பீரங்கிபடைகளை அனுப்பினர். வேலப்பன் மூலமாக தகவல் அறிந்த தீரன் சின்னமலை பின்வாங்கி பதுங்கிடத்திட்டமிட்டான். கருப்பனையும் மற்றவர்களையும் ஒரு பகுதியில் மறைந்திருக்க உத்தரவிட்டு, தான் இரு சகோதரர்களுடன் மற்றும் நல்லப்பன் என்ற சமையல் காரனுடன் பழனி கருமலை காட்டில் பதுங்கினான். ஒடாநிலை வந்து சேர்ந்த பீரங்கிப் படை கோட்டை காலியாக இருந்ததை கண்டு ஏமாந்தது. கோட்டையில் சோதனையிட்டதில் வேலப்பன் அனுப்பிய தகவல் குறிப்புகள் கண்டெடுத்து அதிர்ந்தனர். அந்த இடத்திலேயே வேலப்பனை சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்.

எப்படியும் தீரன் சின்னமலையை பிடிப்பதில் தீவிரம் காட்டினர். தேடினர். பல அறிவிப்புகளை செய்தனர். மாவீரர்கள் வாழ்வில் காட்டிக்கொடுப்பவர்களுக்கு பஞ்சம் எது? ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைகளுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்ட சமையல் காரன் நல்லப்பன் தீரனை காட்டிக்கொடுகக் துணிந்தான். உணவிற்காக வந்த தீரன் சின்ன மலையையும், அவர்களது தம்பிகளையும் “நயமாக‘’ பேசி ஆயுதங்களை வெளியில் வைத்து, உள்ளே உணவருந்த அழைத்துச் சென்றான். காத்திருந்த கயவர்கள் இவர்களை கைது செய்தனர்.

இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம்பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார்.

ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார்.

புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது.

சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார். தூக்கிலிடப்படல் போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக்கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட திப்பு சுல்தானின் படைகளுக்கு, பெருந்துறையின் பாளையக்காரராக இருந்த சின்னமலை, தனது படைகளை அனுப்பினார். 4-வது மைசூர் போரில் திப்பு சுல்தான், தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, அனைத்து சிற்றரசுகளும் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தது. ஆனால், சின்னமலை மட்டும் இறுதிவரை ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்து வந்தார்.

அறச்சலூர் போர், காவிரிக்கரைப் போர் மற்றும் ஓடா நிலைப் போர்களில் ஆங்கிலேயப் படைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டியடித்தார் சின்னமலை. ஓடா நிலைக் கோட்டையை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டபோது, தப்பிச் சென்ற சின்னமலை, ஏனைய பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரைத் தாக்க திட்டமிட்டார்.

ஆனால், அவர் இருக்கும் இடத்தை வஞ்சகமாக அறிந்த ஆங்கிலேயப் படைகள், அவரைக் கைது செய்தது. தங்கள் அரசுக்கு கட்டுப்பட்டு நடந்தால், விடுவித்து விடுவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களுக்கு அடிபணிய சின்னமலை மறுத்ததால், 1805-ம் ஆண்டு இதே நாளில் சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

 

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில்சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

காலவரிசை

1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

1799: தனது படைகளைப் பெருக்கினார்.

1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.

1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.

1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.

1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.

1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

தனக்கென ஒரு குடும்பம் உருவானால், நாட்டுக்காக தான் மேற்கொண்டுள்ள சுதந்திரப் போராட்டங்களுக்கு இடையூறாக இருக்குமென்று கருதி, தீர்த்தகிரி கடைசி வரை திருமணத்தை துறந்தார். அதுமட்டுமின்றி, அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்ட அவரது தம்பிகள் பெரிய தம்பி, கிலேதார் ஆகியோரும் கூட திருமணம் செய்து கொள்ளவில்லை. நம் நாட்டில் பிறந்த ஆயிரமாயிரம் தியாகிகளின் தியாகம் எத்தகையது என்பதை இத்தகைய வரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம்.

அவரது வீரத்திற்கும், நமது நாட்டு சுகந்திரம் பெறுவதற்காகவும் பாடுபட்ட நமது தீரன் சின்னமலையை தலைவணங்குவோம்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top