Home » பொது » இயற்கை வைத்தியம்-1
இயற்கை வைத்தியம்-1

இயற்கை வைத்தியம்-1

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும்.

தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம்.

உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்  தன்மையுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top