Home » சிறுகதைகள் » தாய்மையின் நேர்மை!!!
தாய்மையின் நேர்மை!!!

தாய்மையின் நேர்மை!!!

ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது.

அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை .

கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.

உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு இவரும் என்கொயரிக்கு வந்துவிட்டார்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 11 மணியளவில் அந்த பெண்ணே சிறைச்சாலைக்கு திரும்ப வந்துவிட்டாள் ஆனால் கூடவே ஒரு சிறுமியுடன்.

சிறை நிர்வாகம் நிம்மதியடைந்தது

விசாரணையில் தெரிந்தது இதுதான்.

இவள் வசிப்பதே ப்ளாட்பார்மில் காவல் துறையினர் இவளை ஒரு திருட்டுகேசில் சம்மந்தபடுத்தி சிறையில் கொண்டுவந்து தள்ளிவிட்டனர்.

இந்த பெண்ணை கைது செய்யும்போதே அந்த பெண் அந்த காவலர்களிடம் கெஞ்சியிருக்கிறார் ..

அய்யா நான் சத்தியமாக திருடவில்லை ஆனாலும் என்னை ஜெயிலில் போடுவதைபற்றி நான் கவலைப்படவில்லை என் மகள் ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு என்னைவிட்டால் யாருமில்லை
நான் இல்லாமல் தவித்துபோய்விடுவாள் அவள் இங்குதான் எங்காவது சுற்றிகொன்டிருப்பாள் நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அவளை தேடி அழைத்துவந்துவிடுகிறேன் என மீண்டும் மீண்டும் கெஞ்சியிருக்கிறாள்.

அப்படி சொல்லி எங்களிடமிருந்து தப்பிக்க பார்கிறியா ஏறுவண்டியில என மிரட்டி அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

சிறைச்சாலையிலும் அந்த பெண் சிறை அதிகரிகளிடமும் அதேபுலம்பலை புலம்பியிருக்கிறார்.
என்னை ஒரு மணிநேரம் வெளியில் விடுங்கள் கண்டிப்பாக நான் திரும்ப வந்துவிடுவேன் என்று.

ஆனால் காதுகொடுத்து கேட்கத்தான் ஆட்கள் இல்லை.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பெண்தான் இரவில் அந்த சாகசத்தை செய்திருக்கிறார் சொன்னதுபோலவே குழந்தையுடன் திரும்ப வந்து தனது நேர்மையையும் நிருபித்திருக்கிறார்.

தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு.

அன்னையின் அன்பிற்கு இணையான ஒன்று ஏதுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top