Home » 2016 » May » 27

Daily Archives: May 27, 2016

தாய்மையின் நேர்மை!!!

தாய்மையின் நேர்மை!!!

ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது. அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை . கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு ... Read More »

மாரீச வதம்-இது எந்த வகை தர்மம்???

மாரீச வதம்-இது எந்த வகை தர்மம்???

மாரீச வதம்  இது எந்த வகை தர்மம்..? அத்யாத்ம ராமாயணம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக நான் யுகங்கள் தோறும் தோன்றுகிறேன் என்றார் பகவான். பகவான் அவதாரம் செய்துவிட்டால், அவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் ஏதாவதொரு தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவே அமைய வேண்டும். இராவணனின் கட்டளைப்படி மான் வடிவமெடுத்தான் மாரீசன். பஞ்சவடியில் சீதாதேவியின் முன்பாக வந்து விநோதங்கள் காட்டி விளையாடுகிறான். அந்த மான் உண்மையில் அரக்கனென்று ராமனுக்கு நன்றாகத் தெரியும். அந்த மாரீசனால் ... Read More »

சங்குகளின் வகைகள்!!!

சங்குகளின் வகைகள்!!!

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே! பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர். வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய ... Read More »

மந்திரம் குச்சிகள்!!!

மந்திரம் குச்சிகள்!!!

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார். “நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர். “மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித் ... Read More »

முல்லாவின் இறப்பு!!!

முல்லாவின் இறப்பு!!!

முல்லா ஒரு கிளையை அறுக்கலாம் என்று ரம்பத்துடன் மரத்தின் மீதேறினார். அந்தப் பக்கமாகப் போன ஒருவர், நன்கு கவனியுங்கள்!உட்கார்ந்திருக்கும் கிளையையே நீங்கள் அறுக்கிறீர்கள்.கிளையோடு நீங்களும் கீழே விழுந்து விடுவீர்கள். என்று முல்லாவைப் பார்த்து அவர் சத்தம் போட்டார்: “நீங்கள் சொல்வதை நம்புவதற்கு நானென்ன முட்டாளா; அல்லது எதிர்காலத்தை எனக்குச் சொல்லக்கூடிய ஞானியா நீங்கள்?’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் முல்லா.   சொல்லி முடித்தவுடனேயே கிளையோடு தரையில் விழுந்தார் முல்லா. தன்னுடன் பேசிய மனிதனைப் பார்க்க அடித்துப் பிடித்து ஓடினார் முல்லா. ... Read More »

Scroll To Top