Home » 2017 » April (page 3)

Monthly Archives: April 2017

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே, ஆண், பெண் இரு பாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் 60 வயது வரை, தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில், நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, ... Read More »

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: 1878, பிப். 21- மறைவு:1973, நவ.  17) ‘கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ – இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது.  ‘மதர்’ என்றாலும்  ‘ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மிக ... Read More »

மழலை இலக்கியம் படைத்த மாமா

மழலை இலக்கியம் படைத்த மாமா

ஆனந்த்  பை (பிறப்பு: 1929, நவ. 17 – மறைவு: 2011, பிப். 24) அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை. கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் ... Read More »

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

பீல்ட் மார்ஷல் மானேக்ஷா (பிறப்பு:  1914, ஏப். 3- மறைவு: 2008, ஜூன் 27)   40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன்  முரண்பட்ட போதும்,   போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்   தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவு கூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ... Read More »

துன்பத்தை உதறித் தள்ளு

துன்பத்தை உதறித் தள்ளு

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று ... Read More »

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?” என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது. “என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார். முல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார். தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய ... Read More »

சைவம் போற்றும் அன்னை

சைவம் போற்றும் அன்னை

காரைக்கால் அம்மையார் சைவம் வளர்த்த 63  நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.  பொது யுகத்திற்குப்  பின்  300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.  நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ”அம்மையே” என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர். இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 ... Read More »

நண்டு போதனை

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது. நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது. Read More »

யானைக்கு வந்த திருமண ஆசை

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி ... Read More »

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (பிறப்பு: 1855, ஏப். 5 – மறைவு: 1897 ஏப். 26) கேரளத்தின் ஆலப்புழையில்  குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி மறைந்தார். சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22-வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை ... Read More »

Scroll To Top