Home » 2017 » April » 17

Daily Archives: April 17, 2017

துன்பத்தை உதறித் தள்ளு

துன்பத்தை உதறித் தள்ளு

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று ... Read More »

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?” என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது. “என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார். முல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார். தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய ... Read More »

சைவம் போற்றும் அன்னை

சைவம் போற்றும் அன்னை

காரைக்கால் அம்மையார் சைவம் வளர்த்த 63  நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.  பொது யுகத்திற்குப்  பின்  300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.  நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ”அம்மையே” என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர். இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 ... Read More »

Scroll To Top