Home » 2016 » November » 18

Daily Archives: November 18, 2016

குரு சிஷ்யன்!!!

குரு சிஷ்யன்!!!

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’ ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம்  அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு. ‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’ ‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் ... Read More »

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்!

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்!

மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம். காரணங்கள் தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. தீர்வுகள் 1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற,தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி? இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் ... Read More »

அவரவர் கடமை

அவரவர் கடமை

வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும்அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டேவந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும்வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார். ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். ”ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்”என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் தேடிப் போனார். அவர்காலில் வீழ்ந்து வணங்கி, ”ஐயா… ஜென் தத்துவத்தை எனக்கு விளக்க வேண்டும்…’என்றார். ‘ஜென் தத்துவம் ... Read More »

நல்லோர் வழி சேர்தல்

நல்லோர் வழி சேர்தல்

உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார். குறள்: முகம்நக நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. பொருள்: பார்க்கும் போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக, செம்மண்ணில் மழை விழுந்தால்,தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் ... Read More »

இன்று: நவம்பர் 18

இன்று: நவம்பர் 18

1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார். 1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர் புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி. 1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார். 1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள்     தோற்கடித்தன. 1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த ... Read More »

Scroll To Top