Home » 2016 » November » 02

Daily Archives: November 2, 2016

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்தகாலம் 11திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921 வரையாகும். அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்காக மிக வலிமையாக போரிட்டவர், போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு. சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக ... Read More »

ஆசை

ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை ... Read More »

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம். 1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் ... Read More »

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

ர விச்சந்திரனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். ரவிச்சந்திரனின் வெறுப்பெல்லாம், ‘விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச்சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது ... Read More »

Scroll To Top