Home » 2016 » November » 17

Daily Archives: November 17, 2016

செய்யும் செயலில் கவனம்

செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்றுகேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால்தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் ... Read More »

ஆசையின் அழிவு

ஆசையின் அழிவு

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான். உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது. வண்டு எதனால் ... Read More »

மதியும் விதியும்

மதியும் விதியும்

மதி – அறிவு விதி – நமது அறியாமையால் நடக்கும் ஒவ்வொன்றின் மீதும் மற்றவரை காரணம் காட்டுவது. அறிவு எல்லோருக்கும் தெளிவாக இருந்து விட்டால் விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை. அறியாமையே விதியின் கைப்பாவை. எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவிற்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயர் தான் விதி. உதாரணம்: பள்ளம் என்று தெரியும் போது அதில் விழாதே என்று தெரிய வைத்தது மதி. மதியால் விதியைய் ஆராய்ச்சி செய்யலாம். ... Read More »

மூன்று தலைகள்!

மூன்று தலைகள்!

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் ... Read More »

இன்று: நவம்பர் 17

இன்று: நவம்பர் 17

1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன. 1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார். 1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது. 1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன. 1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கபப்ட்டது. 1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் ... Read More »

Scroll To Top