Home » 2016 » March (page 10)

Monthly Archives: March 2016

எப்போதும் நல்லவனாயிரு!!!

எப்போதும் நல்லவனாயிரு!!!

ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான். “”முனிவரே! நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்?” என்று கேட்டான். முனிவர் சிரித்தார். “”அது உன் முன்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது,”என்றார். பதிலுக்கு அவன்,””அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனையை, அப்போதே அல்லவா தர வேண்டும்….! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய் இருந்தாலும்,நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்…இது நியாயமா?” என்று கேட்டான். “”உன் ... Read More »

நான்… எனது…!பொறாமை!

நான்… எனது…!பொறாமை!

“நான்…’ என்பது ஆணவம். எனது என்பது அகங்காரம். நமக்கென்று இந்த பூமியில் எதுவுமே இல்லை. பிறக்கும் போது, உடலில் ஆடை கூட இல்லை. போகும்போது,சிதை சுட்டவுடன் முதலில் பொசுங்கிப்போவதும் ஆடை தான்! எதையும் கொண்டு வரவுமில்லை. கொண்டு போகப் போவதுமில்லை. ஆனாலும், இந்த பூமியில் ஏதோ ஒன்றைத் தேடி நாம் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையின் சூட்சுமம் நமக்கு புரியவில்லை என்பதற்காக, அந்த ஆண்டவன் போடுவதை தப்புக்கணக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறோம். இப்படித்தான் இருந்தார் சுகதேவர் என்ற முனிவர். முனிவர் என்பவருக்கு எந்த வித கெட்ட குணமும் இருக்கக்கூடாது. ஆனால், இவருக்கு “பொறாமை‘ என்கிற கெட்ட குணம் ... Read More »

வேண்டும் சோதனை!

வேண்டும் சோதனை!

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் எனஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனைமடக்குவான். ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது,ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். ... Read More »

வெற்றி பெற வேண்டுமா?

வெற்றி பெற வேண்டுமா?

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்றுகுழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப்பார்ப்போமா… அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் ... Read More »

புகழ்ச்சிக்கு அடிமையாகலாமா!!

புகழ்ச்சிக்கு அடிமையாகலாமா!!

ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்த நரி, “ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!’ என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச்சுவைக்க ஆசை எழுந்தது. மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. காகத்தை பார்த்து, “”தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல ... Read More »

வாக்குறுதியை மீறலாமா?

வாக்குறுதியை மீறலாமா?

கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார். அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை,தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள். அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் ... Read More »

மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !

மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !

உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் “ஆம்” அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும். ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திற்கும் காரணம். எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்தநல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும் நல்லவையாக இருக்கும். கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும் கெட்டவையாக  இருக்கும். மனது என்பது ஒளி  நாடாவை போன்றது. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து திருப்பி சொல்லும். ஆழ்மனது  என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது. உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும். ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும். அதனால் தோல்விகரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும். இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும். ... Read More »

குடை தானம்!!

குடை தானம்!!

தானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை,காலணி தானம் என்கிறது ஒரு கதை. பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது,கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று. “”ஏன் தாமதமாக வந்தாய் தேவி?” என்றார் ஜமதக்னி. “”நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன்,” என்றாள். ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் ... Read More »

இவர் குற்றமற்றவர்!!!

இவர் குற்றமற்றவர்!!!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். ... Read More »

அர்ஜுனா அப்படியா?

அர்ஜுனா அப்படியா?

கண்ணன் அர்ஜுனனிடம் “அப்படியா!’ என்றான். ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்? குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்றுவில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத்தாக்கிய அம்பு, அதை முப்பது ... Read More »

Scroll To Top