Home » 2016 » March » 20

Daily Archives: March 20, 2016

ராஜ யோகம் பகுதி-12

ராஜ யோகம் பகுதி-12

41. ஸத்வ சுத்தி ஸெளமனஸ்யைகாக்ர்யேந்த்ரிய ஜயாத்மதர்சன யோக்யத்வானி சத்வத் தூய்மை, மன உற்சாகம், மன ஒருமைப்பாடு, புலன்களை வெற்றி கொள்ளல், ஆன்ம அனுபூதிக்குத் தகுதி இவற்றை அடைகிறான். தூய்மையைப் பழகுவதால் சத்வப்பொருள் மேலோங்குகிறது. மனம் குவிந்து உற்சாகம் பெறுகிறது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு முதல் அடையாளம் உற்சாகம் பெறுவதே. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது அஜீரணத்தின் விளைவாக இருக்கலாம். அது ஆன்மீகம் ஆகாது. சத்வத்தின் இயல்பே ஆனந்த உணர்ச்சிதான். சாத்வீக மனிதனுக்கு எல்லாமே இன்பம் ... Read More »

உதைத்த காலுக்கு முத்தம்!!!

உதைத்த காலுக்கு முத்தம்!!!

ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். “நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?” இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது. பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி ... Read More »

ராஜ யோகம் பகுதி -11

ராஜ யோகம் பகுதி -11

21. ததர்த்த ஏவ த்ருச்யஸ்யாத்மா காணப்படுவதன் இயல்பு அவனுக்காக அமைந்துள்ளது. பிரகிருதிக்குச் சுய ஒளி இல்லை. புருஷன் அதில் இருக்கும்வரை அது ஒளிபோல் தோன்றுகிறது. ஆனால் அந்த ஒளி கடன் வாங்கியது. சந்திரனின் ஒளிபோல் பிரதிபலிப்பு ஒளிதான். இயற்கையின் வெளிப்பாடுகள் எல்லாமே இயற்கை தனக்குத்தானே உண்டாக்கியவை. புருஷனைச் சுந்திரனாகச் செய்வதைத் தவிர இயற்கையின் இந்தச் செயலுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை என்று யோகிகள் கூறுகின்றனர். 22. க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்யநஷ்டம் ததன்ய ஸாதாரணத்வாத் குறிக்கோளை அடைந்தவர்களுக்கு அது ... Read More »

படிப்பு எதற்கு?

படிப்பு எதற்கு?

அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும். ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார். என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார். பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு ... Read More »

ராஜ யோகம் பகுதி -10

ராஜ யோகம் பகுதி -10

2. சாதனை பாதம் ஒருமைப்பாடு: அதன் பயிற்சி 1. தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக தவம், படிப்பு, செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் இவை கிரியா யோகம். சென்ற பகுதியின் இறுதியில் நாம் கண்டசமாதிகளை அடைவது மிகவும் கடினம். அவற்றைப் படிப்படியாகத் தான் முயல வேண்டும். முதல்படி, ஆரம்பப்படி கிரியா யோகம், கிரியா என்பதற்குச் செயல் என்று பொருள், கிரியா யோகம் என்றால் யோகத்தை அடைவதற்கான செயல். புலன்களே குதிரைகள், மனம், கடிவாளம்; புத்தி, சாரதி, ... Read More »

Scroll To Top