Home » 2016 » March » 28

Daily Archives: March 28, 2016

ஜென் கதை :சாதாரணமாக இருப்பதுதான் அதிசயம்!!!

ஜென் கதை :சாதாரணமாக இருப்பதுதான் அதிசயம்!!!

இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான். `எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார்,காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களைசெய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?’, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான். ஜிங்ஜு `எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக்கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு ... Read More »

பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

தத்துவக் கதையொன்று…. “ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள். இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான். “குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்? என்று கேட்டான். “பத்து ஆண்டுகள் பிடிக்கும்“என்றார் ஆசான். “என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கேதங்கியிருக்க முடியாது. நான் சீக்கிரம் ஊர் திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும்.மிகக் கடுமையாகப் ... Read More »

புண்ணியம் வேண்டுமா?

புண்ணியம் வேண்டுமா?

ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும். ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ‘ஐயா… என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா ... Read More »

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்

1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத்தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all). 2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars). 3.யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea). 4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடுபாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture). 5 உங்கள்மீதும்  உங்கள் தொழில்மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the ... Read More »

சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம்

என்சைக்ளோபீடியாவின் புதிய பதிப்பு ஒன்று சுவாமியின் மடத்தில் இருந்தது.மொத்தம் இருபத்தைந்து பெரிய தொகுதிகள் கொண்டது அந்த நூல். அவர் அதைப்படிக்க ஆரம்பித்தார். அவருடைய மன ஒருமைப்பாடு அபாரமானது. வெகு விரைவிலேயே அவர் பத்து தொகுதிகளை முடித்துவிட்டு, பதினொன்றாவதை ஆரம்பித்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சீடர் அந்த நூல் வரிசையைக் கண்டு, ‘ஒருவன் வாழ்நாள்முழுவதும் படித்தாலும் இத்தனை நூல்களையும் முடிக்க முடியாது’ என்று கூறினார்.‘அது எப்படி? நான் ஏற்கனவே பத்து தொகுதிகளை முடித்துவிட்டேனே! என்ன கேள்வி வேண்டுமானாலும் அதிலிருந்து கேள்’ என்றார் சுவாமி. சீடர் ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் ... Read More »

சின்ன‌ சின்ன‌ சிந்தனைகள்

சின்ன‌ சின்ன‌ சிந்தனைகள்

வாழ்க்கையை வண்ணங்களுக்காக வாழ்பவன் தோற்று விடுகிறான் …!!! தன் எண்ணங்களுக்கேற்ப வாழ்பவன் வெற்றி பெறுகிறான் …..!!! ***************************** எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும் கரைக்கு தெரியும் அலையின் அன்பும் அரவணைப்பும் …..!!! ****************************** தனிச்சிந்தனை தவறை கொண்டுவரலாம் கூட்டத்தோடு பேசும் போது வார்த்தை மீறலாம் வாழ்க்கையில் துன்பத்தை இவற்றால் தான் அதிகமானோர் சந்திக்கின்றனர் ******************************* மறந்து கொண்டே இருப்பது மூளையின் வேலை நினைவு படுத்திக்கொண்டிருப்பது அறிவின் வேலை ******************************* உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் – இளநீர் ... Read More »

விவேகானந்தர் சிறப்பு பகிர்வு: முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள்..

விவேகானந்தர் சிறப்பு பகிர்வு: முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள்..

மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி! * நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு ‘குட்டிப் பிசாசு’. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் ‘பயில்வான் சாமி’.அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு ‘விவேகானந்தர்’ என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது! * கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர்,வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்.,ஆக்குவதாக மாமனார் சொன்னார். ‘என்னோடு இருந்துவிடேன்’ என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது! * ‘புத்தகத்தில் ... Read More »

ஜென் கதை : கோமாளியை விட சிறியவன்!!

ஜென் கதை : கோமாளியை விட சிறியவன்!!

ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால் இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள் தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம் சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல், ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான். “யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம்கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் ... Read More »

பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்

பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்

இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து,ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர், மின்சாரம், காற்று,நெருப்பு, கணினி, இயற்கை, கடவுள் என்று விடைகள்தான் அவை. இவை அனைத்தும் பெரிய சக்திகள் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும்,இவை அனைத்தையும்விட மிகப் பிரம்மாண்டமான சக்தி ஒன்று உள்ளது.  அதுதான் ‘மன ஆற்றல்’ (Mind Power) இதை உருவாக்கி, இயக்குவதுதான்,மனிதமூளை . ஒரு மனிதன் வாழ்வதும், அழிவதும் மூளையின் இயக்கத்தினால்தான். மூளையைச் சரியாகப் பயன்படுத்தியவர்களேவாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சரியாக பயன்படுத்தாதவர்கள்தோல்வியடைகின்றனர். அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற ... Read More »

குருவை மிஞ்ச முடியுமா?

குருவை மிஞ்ச முடியுமா?

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூடசெய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனதுஎண்ணத்தைச் சொல்லி விட்டான். குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். “”இதில் என்ன இருக்கிறது?” என சீடனிடம் கேட்டார். அவன் “தண்ணீர் இருக்கிறது’ என பதில் சொன்னான். “”இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!” என்றார் அவனிடம். அவனும் அப்படியே செய்தான். “”இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!” என குரு ... Read More »

Scroll To Top