Home » பொது » ‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்
‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

தியாகி சங்கரலிங்கனார்

(பிறப்பு: ஜன. 26- பலிதானம்: 1956, அக். 10)

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் 1956 , அக்டோபர் 10-ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top