Home » பொது » பாரதத் தாயின் தவப்புதல்வர்
பாரதத் தாயின் தவப்புதல்வர்

பாரதத் தாயின் தவப்புதல்வர்

குருஜி கோல்வல்கர்
(பிறப்பு:  1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5)

“தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட
துறவறம் வேண்டிப் புறப்பட்டாய்
தனிநபர் மோட்சம் வேண்டுமென்று
தொண்டின் மூலம் இன்பம் கண்டாய்!”

– என்ற ஆழமான , பொருள் பொதிந்த பாடல் ஒன்றே கணீர் என்ற குரலுடன் காற்றினில் மிதந்து வந்து என் செவிகளில் நிறைந்தது.

துறவறம் வேண்டிப் புறப்பட்டு, பின் மோட்சத்தை புறந்தள்ளி, தொண்டின் மூலம் இன்பம் கண்ட அந்த அசாதாரணமான  மகான் யார்? அவர் தான் ‘ஸ்ரீ குருஜி’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின்  2 வது தலைவரான ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர். 1906, பிப். 19 -இல் பிறந்தவர்  அவர்.

அவரது  வாழ்க்கையில்….

1922 – எம்.எஸ்.சி – விலங்கியலில் முதன்மை நிலை;
1930-31 காசி இந்து பலகலைக்கழகத்தில் பேராசிரியர்;
1934 – பட்டப்படிப்பு, எல்.எல்.பி. தேர்வில் வெற்றி;
1936 – தாரகாட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி அகண்டானந்தரின் தீட்சை.

தனது மோட்சத்தை விட, தேச நலன் பெரிதென கருதி,  துறவு வாழ்க்கையை துறந்து,  1940ல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) 2வது தலைவரானார்.

1940 முதல் தனது இறுதிக் காலம் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் பல லட்சக்கணக்கான மக்களிடையே சுயநலமற்ற மனப்பானமையும் தேச பக்தியையும் பதியவைத்தார்.

தேசியத்திலும் லட்சியத்திலும் அசைக்கமுடியாத உறுதியையும் கொண்ட இளைஞர்களை –  பல்வேறு அமைப்புகளை உருவாக்க காரணமாக முன்னின்றார்.

பல்வேறு சம்பிரதாயங்களைக் கொண்ட துறவியர்களை இணைத்து, “இந்து சமாஜத்தில் அனைவரும் சமம்” என்ற பிரகடனத்தை முழங்கச்செய்த கருமயோகி ஆனார்.

” சிவோபூத்வ சிவம் யாதேக்” என்று உயர்ந்த பொன்மொழிக்கேற்ப (சிவமயமாய் ஆகித்தான் சிவனை பூஜிக்க வேண்டும்),   தனது குருவான ஆர்.எஸ்.எஸ்.  ஸ்தாபகர்  டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரைப்  போலவே தனது வாழ்க்கையையும் பாரத அன்னையின் பாதககமலங்களில் அற்பணம் செய்தார்.

” துள்ளிய நிந்தா த்துவிர் மௌனி சந்துஸ்தோ ஏன் கேன சித்
அணிகேதா: ஸ்திர மகீர் பக்தி மான் மே க்ரியோ நரக:”
                                                         -கீதை 12 : 19

( இகழுரை, புகழுரை இரண்டையும் சமமாக கருதுகிறவன், சிந்தனையில் மூழ்குகிறவன்,  கிடைத்ததைக் கொண்டு திருப்திப் படுகிறவன், தனக்கென வீடு வாசல் இல்லாதவன் – இத்தகைய ஸ்திர புத்தியுள்ள மனிதனே எனக்கு பிடித்தமானவன்)

என்ற பகவத் கீதை வரிகளுக்கு உதாரணமாக அமைந்தது ஸ்ரீ குருஜியின் வாழ்க்கை!

1948-இல் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்ட போது அமைப்பை வழி நடத்திய தலைமைப் பண்பும், 1962-இல் சீனாவுடனும் 1963-இல் பாகிஸ்தானுடனும் நடந்த போர்களின் போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூலம் செய்த தேசப்பணிகளையும் கண்டு அன்றைய வலிமை மிகுந்த பிரதமர்களான பண்டித நேருவும்,  லால் பகதூர் சாஸ்திரியும் ஸ்ரீ குருஜியின் தீர்க்க தரிசனத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராகவும் பின் தலைவராகவும் பொறுப்பேற்று 30 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் சங்க சிந்தனைகளை பரவிடச்  செய்தார். பாரதமெங்கும் தேசிய சிந்தனையையும்,  லட்சிய பக்தியையும் சங்கத்தின் ஊழியர்களான ஸ்வயம்சேவகர்களின் மனங்களில் பதியச் செய்தார்.

பாரதமெங்கும் பலமுறை பவனி வந்து தேசத்துக்கும், தேசபக்தியை தாரக மந்திரமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் வழிகாட்டிய ஸ்ரீ குருஜி,  தினசரி பாடப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையை கேட்டபடியே தனது 67 வயதான  பூதஉடலை நீத்து 1973, ஜூன் 5  அன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top