Home » சிறுகதைகள் » ஆட்டிப் படைத்த முல்லா!!!
ஆட்டிப் படைத்த முல்லா!!!

ஆட்டிப் படைத்த முல்லா!!!

ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

விருந்துண்ணுவோர் கூட்டத்திலே முல்லாவும் இருந்தார்.

பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பொய்யும் புனை சுருட்டுமான நிகழ்ச்சிகளை தங்களுக்கு ஆதாரமாகக் கூறி தாங்கள் ஏதோ பெரிய சாகசக்காரர்கள் என்பது போல் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய தற்பெருமைத் தம்பட்டம் முல்லாவுக்கு விரசமாகவும் அருவெறுப்பாகவும்
இருந்தது.

அவர்களுக்குத் தக்க பாடம் ஒன்று கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். உடனே அவர் அங்கிருந்த பிரமுகர்களை நோக்கி ” உங்களுக்கு நான் செய்த வீரசாகசம் ஒன்றைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

” முல்லாவினால் கூட வீரசாகசங்கள் செய்ய முடியுமா?” என்று கூறி கலகலவென ஏளனமாகச் சிரித்த பிரமுகர்கள் ” எங்கே உமது வீரசாகசத்தை கூறும் பார்ப்போம் ” என்று கேட்டனர்.

” ஒரு தடவை ஒரு நடுக்காட்டில் பத்துப் பதினைந்து கொள்ளைக்காரர்களை என் விருப்பம் போல் ஆட்டிப் படைத்தேன். நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் நாய்களைப் போல என்னைப் பின்தொடர்ந்து ஒடிவந்தார்கள்” என்றார் முல்லா.

” அப்படியா? இது உண்மையிலேயே பெரிய விஷயந்தான். உம்பின்னால் அவர்கள் ஒடி வருவதற்கு அப்படி என்ன மந்திர மாயம் செய்தீர்?” என்று பிரமுகர்கள் வியப்போடு வினவினர்.

” அது அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் அவர்களைக் கண்டதும் பயந்து ஒடினேன். அவர்கள் என்னைப் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு வந்தார்கள் ” என்றார் முல்லா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top