Home » படித்ததில் பிடித்தது » ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!
ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:
1.தேவையான அளவு மழை பெய்யாது

2.கைப்பிடி விதை கூட கிடைக்காது

3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்

4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்

5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்

6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.

7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.

8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.

9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்க்கும் கேட்காது

10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.

11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.

12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

நீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள்  போல அரசனற்ற  ராஜ்யம் இருக்கும்.
தேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி
தீ   இருப்பதைக் காட்டுவது அதன் புகை
தெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.
அப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தமன்மை அடைந்து விட்டார்.

அரசனற்ற  ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.

நாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டணைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.

அரசன் தான் தாயும் தந்தையும்
அரசந்தான்  தர்மமும் சத்தியமும்
அவனே நற் குடிப் பிறந்தோருக்குத் தலைவன்

அரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்

எவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்ககள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே ! உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள்.

இவ்வாறு 67 ஆவது ஸர்கம் முடிவடைகிறது.

அரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.

சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது

வால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப் படும்  — குறள் 388

பொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்

அரசன் முறை செய்யாவிடில்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவாது எனின்

1.ஆபயன் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர்= பசு பால் தராது; பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்– குறள் 560

2.உறைகோடி ஒல்லாது வானம் பெயல் =  மன்னன் சரியாக ஆளாவிட்டால் மழை பெய்யாது குறள் 559

3.மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி = உலகம் மழையை நம்பி இருக்கும், மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர் –குறள் 542

4.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி = பிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம் – குறள் 543

5.கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் -குறள் 550

6.மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புற நானூறு 55- 9

7.நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும்

தாயென இனிது பேணத் தாங்குதி — கம்ப– அரசியல் –34

8. குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான் – கலித்தொகை 130-19

வள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்று கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் (பாஸிட்டிவாக)  என்று சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top