Home » 2017 » January (page 5)

Monthly Archives: January 2017

கடமையே கடவுள்!!!

கடமையே கடவுள்!!!

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே மரக்கிளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த காகமும், கொக்கும் அவரது உக்கிரப் பார்வையினால் எரிந்து சாம்பலாகின. தனது தவ ஆற்றலைக் கண்டு துறவிக்கு மிக்க மகிழ்ச்சி. சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். கொஞ்சம் பொறு என வீட்டினுள் இருந்து ஒரு பெண்மணியின் ... Read More »

விளாடிமிர் லெனின்!!!

விளாடிமிர் லெனின்!!!

விளாடிமிர் இல்யிச் உல்யேனாவ் என்னும் இயற்பெயர் கொண்ட லெனின், 17-வது வயதில் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். லெனினிடம் போலீஸ் அதிகாரி, ‘‘உன் அண்ணன் ஜார் மன்னருக்கு எதிரான தீவிரவாதத்தில் இறங்கியதால் தூக்கிலிடப்பட்டு உயிர் இழந்தான். நீயும் ஏன் சுவருடன் மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார். ‘‘என் எதிரே சுவர் இருப்பது உண்மைதான். ஆனால், அது பலவீனமானது. முட்டினாலே உடைந்துபோகும்’’ என்றார் லெனின் கோபத்துடன். ‘‘தீவிரவாதம், மக்கள் போராட்டம் போன்றவற்றை நசுக்கிவிடுவோம். உன்னால் எதுவும் ... Read More »

கறிவேப்பிலை!!!

கறிவேப்பிலை!!!

க‌றி‌வே‌ப்‌பிலையை மெ‌ல்லலா‌ம்! உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்.ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், ... Read More »

தன்கைத்தொன்று செய்வான் வினை!!!

தன்கைத்தொன்று செய்வான் வினை!!!

திருக்குறள் கதைகள் என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன. பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது. மாலை மணி மூன்று. இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன். இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக ... Read More »

பிராணாயாம விளக்கம்!!!

பிராணாயாம விளக்கம்!!!

முன்னொரு காலத்தில் ஓர் அரசனிடம் மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ஏதோ குற்றம் செய்துவிட்டான். அதற்குத் தண்டனையாக அவனை ஒரு உயரமான கோபுரத்தின் உச்சி அறையில் சிறை வைக்கக் கட்டளையிட்டான் அரசன். அவன் அங்கேயே கிடந்து சாகுமாறு விடப்பட்டான். மந்திரியின் மனைவி ஓர் இரவில் கோபுரத்தின் அடியில் வந்து அவனைக் கூவி அழைத்து, தான் எந்த விதத்திலாவது அவனுக்கு உதவ முடியுமா என்று கேட்டாள். அதற்கு மந்திரி, அடுத்த நாள் இரவு வரும்போது, தடித்த நீண்ட கயிறு ... Read More »

காதுகளைப் பராமரிப்பு!!!

காதுகளைப் பராமரிப்பு!!!

காதுகளைப் பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம். காதில் எண்ணெய் விடுவதும் தவறான ... Read More »

முற்பகல் செய்யின்!!!

முற்பகல் செய்யின்!!!

திருக்குறள் கதைகள் பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான். அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்…விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான். அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ‘ டாமி ‘ என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது …மீண்டும் தூக்கிப் ... Read More »

கவிஞர் பெரியசாமி தூரன்!!!

கவிஞர் பெரியசாமி தூரன்!!!

கவிஞர் பெரியசாமி தூரன் இசை மற்றும் இலக்கிய உலகில் பெரிதும் போற்றப்பட்ட திரு. பெரியசாமி தூரன் அவர்கள், அவ்விரண்டின் வளர்ச்சிக்கும் மாபெரும் சேவை செய்துள்ளார்கள். தன்னுடைய காலத்தை வென்ற படைப்புகளின் மூலம் இசை மற்றும் இலக்கியங்களுக்கு மெருகூட்டியிருக்கிறார்கள். ”தூரன் என்றால் தமிழ்; தமிழ் என்றால் தூரன்” என்று சொன்னால் அது மிகையாகாது. தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா)  குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் ... Read More »

விளாம்பழம்!!!

விளாம்பழம்!!!

விளாம்பழம் ஆங்கிலத்தில் இதை WOOD APPLE என்று சொல்வார்கள் இது இந்தியாவிலும் அதை சுற்றிய நாடுகளிலும் அதாவது பங்களாதேஷ் , பாகிஸ்தான் , ஸ்ரீலங்காவிலும் தான் அதிகம் பயிராகிறது இது பழுப்பு நிறத்தில் கிரிகெட் பந்து வடிவில் இருக்கும் இது செப்டெம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் இதில் விட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது பழம் மட்டுமல்லாது இதன் வேரும் இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை ... Read More »

உனக்கான கடமையைச் செய்!!!

உனக்கான கடமையைச் செய்!!!

ஒரு நாள் நல்ல வெயில்… சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான். வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான். அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.’ நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்’ என்றது. செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. அடுத்த நாள் நல்ல மழை….வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட…குடை செருப்பைப் ... Read More »

Scroll To Top