Home » பொது » ஜஹாங்கீர்!!!
ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்!!!

ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்)
அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள்
பெயர்: திரு. ஜஹாங்கீர்.
வயது: 58 (ஆகஸ்ட் 30,கி.பி 1569 முதல் அக்டோபர் 28, 1627)
இராஜ்ஜியம்: ஆப்கன், பாகிஸ்தான், இந்தியா

இவனெல்லாம் எங்கே உருப்பட போகிறான் என்று சில பிள்ளைகளைப்பார்த்து பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா ? அப்படி ஒரு வகையான பையனாக தான் அவர் இருந்தார். எப்பொழுதும் போதை,பெண்கள்,மது,ரொம்பவும் போர் அடித்தால் ஆண்கள் என்றே அவரின் இளவயது கழிந்தது. அக்பர் தனியறையில் வைத்து இவரை பூட்டி அடி பின்னுகிற அளவுக்கு இவரின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு இருந்தன. அக்பர் தக்காணத்தில் அமைதியை நிலைநாட்ட போயிருந்த பொழுது அவருக்கு எதிராக புரட்சி நடத்தி கைது எல்லாம் செய்யப்பட்டார். தான் கட்டி வளர்த்த ராஜ்ஜியம் என்னாகுமோ என்கிற பயத்தோடு தான் அக்பர் கண் மூடினார்.

அதற்கு பின்னர் இவர் பலரின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தார். ஆச்சரியகரமாக அற்புதமான அமைதி நிரம்பிய ஒரு ஆட்சியை அவர் தந்தார். இவர் எப்படி அக்பருக்கு எதிராக் புரட்சி செய்தாரோ அதைப்போலவே இவரின் மகனும் இவருக்கு எதிராக புரட்சி செய்தார். அவரின் பெயர் குஸ்ரூ. அவரின் கண்களை குருடாக்கி தண்டனை தந்தது ஒருபுறம் என்றால் அவருக்கு ஆதரவு தந்த சீக்கிய குரு அர்ஜுன் தேவை மரணதண்டனை கொடுத்து சீக்கியர்களிடம் வன்மத்தை சம்பாதித்து கொண்டார் இவர்.

ஏற்கனவே கணவனை இழந்திருந்த நூருனிசா எனும் பெண்ணை மணந்து அவரை தன் மனைவி ஆக்கிக்கொண்டார். அவரின் அப்பா,தம்பி ஆகியோர் சேர்ந்துகொண்டு தான் ஆட்சியை நடந்துகிறார்கள் என்கிற அளவுக்கு நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருந்தது. நூருனிசா தான் நூர்ஜஹான் ஆனது. அவரின் சகோதரர் மகளை ஜகாங்கீரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவர்கள் தான் ஷாஜஹான்,மும்தாஜ் ஆனார்கள். நாணயங்களில் நூர்ஜஹானின் முகம் இடம்பெறுகிற் அளவுக்கு ஆட்சி அவர் கட்டுபாட்டில் இருந்தது. என்றாலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

அவர் உண்டாக்கிய நகர் தான் இன்றைய டாக்கா. ஜகாங்கீர் காலத்தில் ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்பட்டது. நாடு முழுக்க அமைதி நிலவியது. மற்ற மதங்களை மதித்தார் அவர். ஹிந்துக்கள் மீதான வரி விதிப்பு இவர் ஆட்சியிலும் இல்லாமலே இருந்தது. ஹிந்துக்கள்,கிறிஸ்துவர்கள்,ஷியா இஸ்லாமியர்கள் என்று பலரும் சங்கமிக்கும் இடமாக அவரின் அவை இருந்தது. ஓவியக்கலையின் உச்சம் அவர் காலத்தில் தான் ஏற்பட்டது. ஓவியக்கலை உச்சத்தை தொட்டது அவர் ஆட்சிகாலத்தில் தான். தங்க சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நீதிமணி இவர் ஆட்சிக்காலத்தில் ஆக்ராவில் தொங்கிக்கொண்டு இருந்தது.

தாமஸ் ரோ எனும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுக்கு அனுமதி கொடுத்து இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடிகோலிய செயல் இவருடையதே.
அவருக்கு எதிராக அவரின் இன்னொரு மகனான குர்ராம் என்கிற வருங்கால ஷாஜஹான் எதிர்த்து புரட்சி செய்தார். அவரை அடக்க மக்பாத் கான் அனுப்பப்பட்டார். ஒரு வழியாக அவரை அடக்கிய பின் அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவரின் மகன் ஒருவனை அனுப்பி வைக்க சொன்னார். அப்பொழுது தன்னின் மூன்றாவது மகன் அவுரங்கசீபை அனுப்பி வைத்தார் அவர். அதற்கு பின் தாரா ஷுக்கோவையும் அனுப்பி வைக்க வைத்தார் ஜகாங்கீர். இருவரையும் அவரே வளர்த்தார்

மஹ்பத் கான் இறுதியில் தன்னுடைய பாதுகாப்புக்காக ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு இவரையே கடத்தினார். அப்பொழுது தன் செயல்களால் அவரை மீட்டது நூர்ஜகான். மஹ்பத் கானுக்கு அதற்கு பின் அடைக்கலம் தந்தது குர்ராம். சீக்கிரம் உடல் நலம் நலிவடைந்து எழ முடியாமல் இறந்தார் அரசர். அவர் காலத்தில் ஆட்சி என்னவோ நிமிர்ந்து தான் இருந்தது.

 
சரித்திர நிகள்வு:
1. அக்டோபர் 24, 1605ல் ஆக்ராவில் அரியணை ஏரினார்.
2. 1611 ல் அறிவிலும், அழகிலும், இராஜ தந்திரத்திலும் சிறந்து விளங்கிய நூர்ஜகானை மணந்தார்.(நூர்ஜகான் இளம் விதவை).
3. அரசர் ஜஹாங்கீரானாலும், ஆண்டது நூர்ஜகானே…(நூர்ஜகானை குறைத்து மதிப்பிட இயலாது. கலைகளிலும், கவியிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியப் பெண்மணி. “அத்தர்” என்னும் வாசனை திரவியத்தை உருவாக்கியவர் இவரே).
4. 1615 ல் சர் தாமஸ் ரோ பிரபு வந்தார். கிழக்கிந்திய கம்பெனி ஆரமிப்பதற்காக..
5. அக்டோபர் 28, 1627 ல் உடல்நிலை குறைவால் இறந்தார்.
6. துளசிதாஸ் வாழ்ந்து இராமாயணம் எழுதியது இவர் காலத்தில்தான். அந்த அளவு மத சகிப்புத்தன்மை கொண்டவர்.
சாதனைகள்:
1. ”கலைஞ்கர்களுக்கு ஓர் தந்தை” என்று அழைக்கப் பட்டார். அந்த அளவு கலைகளில் ஈடுபாடு.
2. தன் தந்தை விட்டுச்சென்ற நாட்டை, நிர்வாகத்தை அப்படியே திறம்பட நடத்தினார். அவையெல்லாம் அக்பரின் புகழுக்குமுன் மழுங்கடிக்கப் பட்டன…புதிதாக எதையும் சாதிக்கவில்லை. மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு களங்கம் ஏற்படுத்தவுமில்லை.
குறைபாடுகள்:
1. சீக்கிய மத குருவான ச்ர்ஜீன் சிங், தனது மகன் குஸ்ரூவிற்கு உதவியதற்காக மரணதண்டனை வழங்கப் பட்டது. இதனால் சீக்கியர்கள், மொகலாய சாம்ராஜ்ஜிய எதிர்ப்பிற்கு காரணமக அமைந்தது.
2. அரசியல் காரணங்களுக்காக, தன் மகனையே சிரையில் அடைத்து சித்திரவதை செய்தார், பின்னர் குஸ்ரூ நூர்ஜகானின் சதியால் கொல்லப்பட்டார்.
3. பாதிநேரம் போதையிலேயே இருந்ததால், நிர்வாகத்தில் லஞ்சம், கள்ளத்தனம் தலையெடுத்தது.
துணுக்கு:
1. பெண்கள் விசயத்தில் ரெம்ப வீக். கிட்டத்தட்ட 300 மனைவிகள்.
2. சிறந்த ஆராய்ச்சியாளர், ஓவியக் கலைஞ்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top