Home » சிறுகதைகள் » சின்ன விஷயம், பெரிய விஷயம்!!!
சின்ன விஷயம், பெரிய விஷயம்!!!

சின்ன விஷயம், பெரிய விஷயம்!!!

குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது.

குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா?

மாணவர்கள்:- நிரம்பிடுச்சு

குரு :-இல்லை…!!!
(என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்)

குரு:- இப்போது . . .?

மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி

குரு:- இல்லை…!!!
(அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது)

குரு :-இப்போது . . .?

மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது

குரு:- இல்லை…!!!
(அடுத்து நீரை ஊற்றினார் மணல் இழுத்துக்கொண்டது)

குரு:-இதிலிருந்து என்ன தெரிகிறது

மாணவன் :-முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம்.

குரு:-உண்மைதான்…!!! ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாத்திரத்தில் முதலில் மணலை கொட்டியிருந்தால் இந்த பெரிய கற்களை வைக்கமுடியாமல் போயிருக்கும்,

நீதி:…நம் மனமும் அப்படித்தான்… சின்ன சின்ன விஷயங்களை மனத்துக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய விஷயங்களுக்கு இடமிருக்காது சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய
காரியங்களை செய்ய இயலாது……!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top