Home » பொது » அலாஸ்கா!!!
அலாஸ்கா!!!

அலாஸ்கா!!!

‘அடடா… வெயில் தாங்கலையே… எங்கேயாவது குளுகுளுன்னு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்குமே’ என்று வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள்! அதில் ஒன்றுதான் குளிர் பிரதேசப் பயணம்.

அமெரிக்காவில் அலாஸ்காவில் உலகின் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் இருக்கின்றன. தென் அமெரிக்க ஆர்க்டிக் பகுதியில், உலகின் அற்புத பகுதிகள் இருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக, இந்த பகுதிகளின் பெரும்பான்மையான இடங்களில் ஊசி இலை மரங்கள், ஹெம்லாக் போன்ற அரிதான செடிகள் ஆகியவை காணப்படுகின்றன.

குறிப்பாக, ஊசி இலை மரங்களின் பல வகைகள் இங்கு உள்ளன. இங்கே சரிவாய் நிலப்பகுதிகள் இருக்கும். அதில் மணமணக்கும் கஸ்தூரி மரங்கள் வளர்ந்து இருக்கும். இப்பகுதியின் எல்லையிலிருந்து பார்ப்பவர்கள் ஒரு தாவரத்தின் வெவ்வேறு நிலை வளர்ச்சியை காணலாம்.
இங்கே பல வகை பாலூட்டிகள் வாழ்கின்றன.

அவற்றில் பழுப்பு மற்றும் கருப்பு நிற கரடிகள், ஓநாய்கள், பெரிய மான் வகைகள், கோவேறு கழுதை, என்று பாலூட்டிகளின், “லிஸ்ட்’ நீள்கிறது.
கடற்கரையோரம் ஏராளமான கடல் பறவைகள் கண்கொள்ளா காட்சியாக காண கிடைக்கும். அதோடு, கடல் சார்ந்த பாலூட்டி களானவைகளும் உண்டு. அவற்றில் சற்று பிதுக்கம் கொண்ட முதுகும், செதில்களாய் பின்புறமும் கொண்ட திமிங்கலமும் உண்டு.
இதோ, அலாஸ்காவின் காட்டிற்கு இலையுதிர் காலம். “ஹலோ’ சொல்லி கொண்டு இருக்கும் அழகு காட்சி.

இப்பகுதிக்கு பயணிக்க நினைக்கும் யாரும், எளிதாக செல்ல கூடிய பகுதியாக பார்ப்பதற்கு இருந்தாலும், இங்கே நிலப்பகுதி பரந்து விரிந்து கிடக்கும். ஆனால், மனிதர்கள் வசிப்பது வெகு குறைவே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

குஷிப்படுத்தும் குளிர் பூமிகளில் முதலிடம் அலாஸ்காவுக்கே கொடுக்கலாம்! காரணம், பரவசமூட்டும் பனிச்சூழல்; காணக்கிடைக்காத உயிரினங்கள்; நெஞ்சை அள்ளும் ‘நார்தர்ன் லைட்ஸ்’; பனிச்சறுக்கு; நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்; வித்தியாசமான வாழ்க்கைமுறை என சந்தோஷ சாத்தியக்கூறுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற நாடு அலாஸ்கா.

இயற்கை அன்னை தான் முன்பு விளையாடிய ஆட்டங்களை மறந்து போகாமல் மீண்டும் விளையாடி பார்க்க ஆசையப்பட்டு நிறுத்தி வைத்திருக்கிற இடங்களில் ஒன்று அலாஸ்கா.அலாஸ்கா என்றால் பெருநிலம்.

வெயில் அடிக்கும் திடீரென்று மழை பொழியும் திடீரென்று தண்ணீர் குட்டை தோன்றும் சிறிது நேரத்தில் அந்த இடம் பொட்டல் வெளியாகக் காட்சி தரும்.வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வராது அங்கே தாவரங்கள் கூட கிடையாது.

எஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கின்றனர்.பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும் குளிர் வாட்டி வதைத்தாலும் அலாஸ்காவில் வசிப்பதை அந்த மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

அலாஸ்காவிடம் இயற்கை அன்னை அளவுக்கு அதிகமான அன்பை கொண்டுள்ளது போல மற்ற இடங்களில் சாதாரணமாக நடைபெறுவது இங்கே இன்னும் அதிக அழகோடு நிகழ்கின்றது.

ஓரிடத்துக்கு செல்லும்போது செல்கின்ற பாதை பொட்டல் வெளியாக இருப்பதை பார்த்துக்கொண்டு செல்வோம் திரும்பி வருகின்ற போது அங்கே ஒரு குளம் இருக்கும்.

மழை பெய்யாமல் நீர் எவ்வாறு வந்தது ? வியப்பாக இருக்கும்.

திடீரென பூகம்பம் வந்ததுபோல் சத்தம் கேட்கும்.எங்கோ தொலைவில் பனிப்பாறையிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்து அது விழும் சத்தம் பல மைல் தூரம் எதிரொலிக்கும்.

நன்றாக வெயில் அடிக்கிறதே என்று குடையை எடுத்து கொள்ளாமல் செல்வோம் சிறிது நேரத்தில் முன்னறிவிப்பின்றி மழை கொட்டோகொட்டென்று கொட்டும்.சில தூரம் சென்று பார்த்தால் மழை பெய்ததற்கான அறிகுறியே இருக்காது.

சூரியன் மறைந்து விட்டது இருள் சூழப்போகிறது என்று நினைப்போம் இரண்டு மணி நேரத்துக்கு மங்கலான வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

அலாஸ்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பனிப்பாறைகள் (Glaciers) உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 290000 சதுர மைல்.மாலஸ்பினா (Malaspina) என்ற பனிப்பாறை அமெரிக்காவின் ஒரு மாநிலமான ரோட்ஸ் ஜலாண்டை (Rhode Island)விட பெரியது.

கிளேஸியர் என்றால் பனி விழுந்து உருகியது போக எஞ்சியிருப்பது பனிக்கட்டியாக மாறுகின்றது.அடுத்த பனிக்காலத்தில் அதன் மேல் பனிவிழ அதில் உருகியது போக எஞ்சியது அதன் மேல் பனிக்கட்டியாகிறது.இப்படி ஆண்டு தோறும் இறுகிய பனிப்பாறைகள் கிளேஸியர்.

உலகின் நீளமான நதிகளில் ஒன்றான யூகான் நதி (Yukon River) அலாஸ்காவில் மட்டுமே 1854 மைல் நீளம் ஓடுகின்றது. கனடாவில் ஓடும் இந்த நதியின் மொத்த நீளம் 2300 மைல்.எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் 80-க்கும் மேல் அலாஸ்காவில் உள்ளது.

அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்து விலகி அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இருப்பது அலாஸ்கா.கனடாவைத் தாண்டி அலாஸ்காவுக்கு செல்ல வேண்டும்.

அழகும் ஆபத்தும் நிறைந்த நிலப்பகுதி.அங்கே பூமிக்கடியிலும் பூமியின் மேலும் எப்போதும் சக்தியின் தாண்டவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த நூற்றாண்டுக்குள் அலாஸ்காவில் மட்டும் ரிக்டர் அளவில் 7-க்கு மேல் நேர்ந்த பூகம்பங்கள் 75.3.5 ரிக்டர் அளவில் நேர்ந்த பூகம்பங்கள் வருடத்துக்கு 1000-க்கும் மேல்.

சூரியன் கண்ணாமூச்சி ஆடும் நிலம் அலாஸ்கா.பாயிண்ட் பேரோ (Point Barrow) என்ற இடத்தில் வருடத்துக்கு 87 நாட்கள் சூரியன் மறைய மாட்டான்.67 நாட்கள் சூரியன் தலைகாட்ட மாட்டான்.

அலாஸ்காவின் ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டும் அதன் ஆபத்தை சகித்துக்கொண்டும் அந்த சகிப்பையே ஆனந்தமாக ஏற்றும் அலாஸ்கா மக்கள் வாழ்கிறார்கள்.

அலாஸ்கா பெருநிலம் ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்ட ஓர் பகுதியாகும்.இதன் பின்னனியை பார்ப்போமாயின் கிரிமியன் யுத்தத்தில் படுநஷ்டமடைந்த ரஷ்யா அலாஸ்காவை விற்க முன்வந்தது.பனியும் மலையும் கடலும் காடு;ம் எரிமலைகளும் நிறைந்த ஒரு நிலப்பகுதியை வாங்க எவரும் முன்வரவில்லை.அப்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாக இருந்த சீவார்ட் என்பவருடன் ரஷ்யர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

கிரிமியன் யுத்தம்:

ரஷ்யாவோடு பிரிட்டனும் பிரான்சும் 1854-56 வரையான ஆண்டுகளில் நடத்திய போர்.ஜெருசலேம் நாசரேத் ஆகிய இரண்டு புனிததட தலங்களில் யாருக்கு முன்னுரிமை என ரஷ்ய ஆசார சர்ச்சுக்கும் பிரான்ஸ் கத்தோலிக்கர்கனுக்கும் இடையே எழுந்த பிரச்சனைதான் இந்த யுத்தத்துக்கு அடிப்படை.இந்த யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பேரிழப்பு.

1867ம் ஆண்டு 726000 டொலருக்கு அலாஸ்கா வாங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அலாஸ்காவை விலைக்கு வாங்கியதை பல அமெரிக்கர்கள் ஏற்கவில்லை.ரஷ்யர்கள் உபயோகமற்றது என்று தள்ளிவிட்டதை அமெரிக்கா வாங்குவதா என்று எதித்தார்கள்.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலாஸ்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.அது பொன் விளையும் புமியாக உலகப் பிரசித்திப் பெற்றது.அலாஸ்காவின் வடமேற்கு பகுதியில் ஒரு பாகத்துக்கும் தென்மத்தியில் ஒரு நகருக்கும் ‘சீவார்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளார்கள்.

அலாஸ்கா என்றாலே அதியங்கள் நிறைந்த பகுதியாகவே கருத்தப்படுகிறது.அலாஸ்காவின் அதியங்கள் ஒன்றா இரண்டா ?? மீன் நீர் திடல் எல்லை மலை பனி என்று ஏராளமான அதியங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அலாஸ்காவின் தேசிய மீன் கிங் சால்மன் 

உலகிலுள்ள மிகச் சுவையான மீன்களில் முதல் இடத்தை வகிப்பபது கிங் சால்மன்.அலாஸ்கா அரசின் வருமானத்துக்குக் கணிசமாக உதவும் இந்த மீன் நல்ல நீரில் உற்பத்தி ஆகின்றது.பிறந்த சில மாதங்களில் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்து கடலை அடைகின்றது.அங்கேயே அது வளர்கின்றது.

மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி தான் பிறந்த இடத்துக்கே வருகின்றது.இதில் வியப்பு என்னவென்றால் அருவி எதிர்ப்படும் போது அது மேல்நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்து செல்கின்றது.அப்படி பாய்ந்து வரும் மீன்களை பிடிப்பதற்காக நீர்நிலைகள் அருவிகள் இவற்றின் ஓரம் கிரிஸ்லி கரடிகள் காத்திருக்கும்.சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடித்துவிடும்.

அருவி நீரை மீன் எதிர்த்து பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்க காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன் கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப் பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம்.அதைப் பார்ப்பவர்களுக்கு கரடியை அருவி அடித்துக்கொண்டு போயவிடும் என்றுதான் தோன்றும்.

மீன் பிடிப்பவர்களிடமிருந்து கரடிகள் பருந்துகள் ஆகியவற்றிடமிருந்து தப்பி பிழைத்துவரும் சால்மன் மீன் தான் பிறந்த இடத்துக்கே வந்து சேர்கின்றன.அங்கே தண்ணீருக்கு அடியில் பள்ளம் தோண்டி முட்டைகளை இடுகின்றன.ஆண் மீனும் போட்டி போட்டுக் கொண்டு அம் முட்டைகளை காக்கின்றது.மீன் குஞ்சுகள் வெளி வந்ததும் சில நாட்களில் சால்மன் மீன் இறந்து விடுகின்றது.

அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு அலாஸ்கா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயா மாகாணத்தை ரஷ்யா தன் நாட்டுடன் சேர்த்து கொண்டது.

இதனை தொடர்ந்து தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர்.

இவர்களது விருப்பம், வெள்ளை மாளிகை தளத்தில் நபர் ஒருவரால் எழுப்பட்ட கேள்வியில் அம்பலமாகியுள்ளது.

இந்த தளத்தில் அலாஸ்காவை அமெரிக்காவிடம் இருந்து பிரித்து ரஷ்யாவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறி, இதற்கு எத்தனை பேர் உடன்படுகிறீர்கள் என்று நபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு இதுவரை அலாஸ்காவை சேர்ந்த மக்களில், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த அலாஸ்காவை அமெரிக்கா, கடந்த 1867ம் ஆண்டில் 7.2 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதிக்குள் 1 லட்சம் பேர் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top