Home » படித்ததில் பிடித்தது » ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!
ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

பிறப்பு பற்றிய தகவல்

சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மகானாக சீரடி சாயி பாபா

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.

மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

மஹாராஷ்டிரா  மாநிலத்தில்  உள்ள அஹமத்  நகர்  மாவட்டத்தில் இருக்கும் ஷிர்டி  கிராமம் நாசிக் நகரத்திலிருந்து 76 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ஒரு புராதனமான பழைய ஊராக இருந்த இந்த ஷிர்டி கிராமம் இன்று சந்தடி மிகுந்த ஒரு பெரும் யாத்ரீக ஸ்தலமாக மாறியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த குருவான சாயி பாபா பிறந்த இடம் இந்த ஷிர்டி ஆகும். ஷிர்டியில் பாபா அரை நூற்றாண்டு காலம் அதாவது ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து இந்த சிறிய கிராமத்தை ஒரு பெரிய யாத்ரீக ஸ்தலமாக மாற்றியுள்ளார். உலகெங்கும்  இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து  மறைந்த ஸ்தலத்தை வணங்கி  தரிசிக்க ஷிர்டிக்கு வருகை தருகின்றனர்.

ஷிர்டி – தெய்வீக குரு சாயி வசித்த இடம்

சாயீ பாபாவின் தோற்றம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால் அவரது பிறப்பு விவரங்கள் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது. இருந்தாலும் பதினாறு வயதே ஆன இளம் பருவத்தில் அவர் ஒரு வேப்ப மரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் அமர்ந்தபோது அவர் மக்கள் மனதில் ஒரு மகானாக இடம் பிடித்து விட்டிருந்தார்.

சாயி பாபா தன் வாழ் நாள் முழுவதையும் ஏழை மக்களின் துயர் துடைக்கவும் முன்னேற்றத்துக்கும் அர்ப்பணித்துக் கொண்டார். சிவனின் அவதாரமாகவே கருதப்பட்ட அவர் ‘தெய்வத்தின் குழந்தை’ என்ற சிறப்பை பெற்றார்.

சாயி தன் வாழ் நாளை ஷிர்டியில் வாழ்ந்தவாறே ஒன்றுபட்ட சகோதரத்துவம் மற்றும் மத இணக்கம் போன்ற உன்னத கருத்துகளை பரப்புவதில் செலவழித்தார். அவர் அடிக்கடி சொல்லிய வாசகம் இது: “ஸப்கா மாலிக் ஏக்”. ‘அனைவருக்கும் ஒரே கடவுளே’ என்பதே அந்த உன்னத வாசகத்தின் பொருளாகும்.

அதன் பின்னர், ஷிர்டி கிராமம் எல்லா திசையிலிருந்தும் பக்தர்கள் வந்து குவியும் ஒரு ஸ்தலமாக மாறியது. சாய் பாபா என்னும் தெய்வீக மகானை தரிசித்து மகிழ்வதற்கு மக்கள் அதிக அளவில் வர ஆரம்பித்தனர். சாயி பாபா சிவலோக பிராப்தி அடைந்த பிறகு அவரது சமாதி ஸ்தலத்தை காண்பதற்கு இன்றும் யாத்ரீகர்களும் பக்தர்களும் ஷிர்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சிறு வயதில் பால யோகியாக தியானத்தில் சாயி பாபா அமர்ந்த இடம் குருஸ்தான்என்று  அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் இன்று ஒரு கோயிலும் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் சாயி பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்கி உறங்கிய இடம் என்று கூறப்படும் துவாரகாமாய் மசூதி என்ற இடமும்   தற்போது ஷிர்டியில் சாயி பாபா  சம்பந்தப் பட்ட இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. கண்டோபா கோயில், சகோரி ஆசிரம்ம், ஷானி மந்திர்,  சங்தேவ்  மஹாராஜ் மந்திர்   போன்றவை  ஷிர்டியில் பார்க்க வேண்டிய மற்ற இடங்களாகும்.

லெண்டி பாக் என்றழைக்கப்படும்  ஒரு சிறு பூங்கா தோட்டம் சாயி பாபாவால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட தோட்டமாகும். சாயி பாபா இங்கு தினமும் வருகை தந்து இங்கிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த லென்டி பாக் தோட்டத்தில் நந்ததீபம் என்ற அழைக்கப்படும் ஒரு எண்முக தீபக்கிருகம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பக்தர்கள் விடியற்காலையில் இருந்தே சாயி பகவானின் திரு உருவச்சிலையை தரிசித்து வணங்குவதற்காக வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகின்றனர். அதுவும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜையும் தரிசனமும் இருப்பதால் அப்போது கூட்டம் இன்னும் அதிகமாக காணப்படுகிறது. காலை பூஜையுடன் 5 மணிக்கு திறக்கப்படும் சாயி பாபா கோயில் இரவு 10 மணிக்கு இரவு பூஜையுடன் மூடப்படுகிறது.

இங்குள்ள பிரார்த்தனைக் கூடம் சுமார் 600 பக்தர்கள் கூடும் அளவுக்கு இடவசதியுடன் காணப்படுகிறது. கோயிலின் முதல் தளத்தில் சாயி பாபாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பக்தர்கள் பொறுமையாக பார்த்து மகிழ அனுமதி உண்டு. ஷிர்டியின் கடைத்தெருக்களில் பாபாவின் வாழ்க்கை பற்றிய பலவிதமான புத்தகங்களும் இதர நினைவுப் பொருட்களும் பெருமளவில் கிடைக்கின்றன.

இறப்பு

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

ஷிர்டி – ஒரு ஆன்மீக யாத்ரீக ஸ்தலம்

ஒரு சிறு நகரமான ஷிர்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் தீவிரமான பக்தி பிரவாகத்தில் நிரம்பி வழிகிறது. இந்த ஊர் உலகின் முக்கியமான ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாக பரவலாக அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷிர்டியில் உள்ள ஷானி, கணபதி மற்றும் ஷங்கர் தெய்வங்களுக்கான கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இங்குள்ள புனித கோயிலுக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் வருகை தரலாம். இருந்தாலும் மழைக்காலத்தில் இங்கு வருவது உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அக்காலத்தில் இப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை விரும்பத்தக்கதாக உள்ளதே காரணம்.

ஷிர்டியில்  மூன்று  முக்கிய  திருவிழாக்களை அடிப்படையாக வைத்து பக்தர்கள் இங்கு வருவதற்கு திட்டமிட்டுக் கொள்ளலாம். குரு பௌர்ணிமா, துஷேரா மற்றும் ராம நவமி எனும் மூன்று திருவிழாக்களே அவை.

இந்த திருவிழாக்களின் போது எண்ணிலடங்கா பக்தர்களும் யாத்ரீகர்களும் ஷிர்டியில் குவிவதால் அச்சமயம் இந்த இடம் பஜனை கோஷங்களால் உயிர் பெற்று காணப்படுகிறது.

பிரசித்தி பெற்ற ரத யாத்திரையும் அச்சமயம் யாவரும் பங்கேற்குமாறு நடத்தப்படுகிறது. இந்த மூன்று குறிப்பிட்ட திருவிழக்காளின் போது மட்டுமே ஷிர்டியில் உள்ள சமாதி மந்திர் இரவு முழுதும்  திறந்து வைக்கப்படும் என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.

சாய்பாபாவிற்கான இந்த ஆன்மீக திருத்தலம் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் எளிதில் சென்றடைவதற்கு வசதியாகவே உள்ளது. மிக நன்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நகரம் நாசிக் புனே மற்றும் மும்பை போன்ற முக்கிய  நகரங்களுடன்  நல்ல முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

ஷிர்டிக்கருகில் ஒரு விமான நிலையம் ஒன்றும் தற்சமயம் கட்டப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தபின் உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சாலை மார்க்கமாக ஷிர்டியை அஹ்மத்நகரிலிருந்து மன்மத் நகரத்தை இணைக்கும் மாநிலை நெடுஞ்சாலை எண்:10 ல் பயணம் செய்தால் கோபர்காவ்ன் எனும் ஊரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஷிர்டியை அடையலாம்.

ஷிர்டி சாயிபாபா  அளித்த பதினோரு உபதேச மொழிகள்:
1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை  அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும்  புத்திமதிகளையும்   கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும்  இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும்உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே  நான் உனக்குக் கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top