Home » சிறுகதைகள் » எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள்.
 நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்.
இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும்.
இந்த இதழ் முழுவதும் பரவிக் கிடக்கின்ற எண்ணங்கள் பற்றிய கருத்துகளைஒன்றன்பின் ஒன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சிறிய இடைவெளிகொடுங்கள். உங்கள் எண்ணங்களோடு இக் கருத்துகளை இணைத்துப் பாருங்கள்.
எடுத்த எடுப்பில் சில கருத்துக்கள் உண்மை என்று உணர்வீர்கள்.
இரண்டாம் மூன்றாம் முறை இந்த இதழைப் படியுங்கள். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை உணர்வீர்கள்.
உங்களுக்கான நல்ல எண்ணங்களைத் தேர்ந்து எடுங்கள். அதை நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.
சந்தேகம் இருப்பின் எழுதுங்கள். அடுத்த இதழல் அதற்கான பதிலைப் பெறலாம்.
எண்ணங்களின் தோற்றம்
மனத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள பதிவுகளிலிருந்து எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை இயல்பாகத் தோன்றும் எண்ணங்களாகும்.
நடைமுறை வாழ்க்கையில் தோன்றும் எண்ணங்கள்
  • அறிகுறியால் தோன்றும் எண்ணங்கள்
  • இயல்பான உணர்ச்சியால் தோன்றும் எண்ணங்கள்
  • கேள்வியால் தோன்றும் எண்ணங்கள்
  • காட்சியால் தோன்றும் எண்ணங்கள்
  • பழக்கத்தின் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்
  • சிந்திப்பதன் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்.
எண்ணங்கள் பதிவாகும் இடங்கள்
  • நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் விண்வெளயில் பதிவாகின்றன.
  • எண்ணங்கள் நம் மனதிரையில் பதிவாகின்றன.
  • எண்ணங்கள் நம் முகத்திரையில் பதிவாகின்றன
  • எண்ணங்கள் நம் கண்களில் பதிவாகின்றன.
எண்ணங்களை வகைப்படுத்துதல்
  • மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைத்துக் கொண்டு பாகுபடுத்தி ஆராய வேண்டும்
  • எண்ணம் உருவாக ஒரு பின்னணி வேண்டும். நாம் அடைய விரும்பும் இலட்சியத்தைப் படமாகப் பார்க்கும் கற்பனை திறன் வேண்டும்.
தீய எண்ணங்களால் ஏற்படும் விளைவுகள்
  • மனம் வெற்றிடமாக இருக்கும் போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
  • எதையும் காம இச்சையோடு பார்க்கும்போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
  • பிறரைக் குறைகூறும்போது அந்த எண்ணங்களால் குறை கூறியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
·         மனம் ஓய்ந்திருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் தீய எண்ணங்கள் நுழைந்து விடுகின்றன. தீய எண்ணங்கள் தீமையையே விளைவிக்கின்றன.
  • முரண்ப்பட்ட எண்ணங்கள் முரண்பட்ட விளைவுகளையே உண்டாக்குகின்றன.
  • எண்ணங்களால் பற்றும் பற்றினால் ஆசையும், ஆசையால் கோபமும் உண்டாகின்றது.
எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறை:
  • எண்ணங்களைக் கட்டுப்படுத்த அளவு கடந்த முயற்சியும் பொறுமையும் தேவை
  • தேவைகளையும் குறைப்பதால் மட்டுமே எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
  • எண்ணத்தை வெல்வது என்பது நம்மிடம் உள்ள குறைகளை வெல்வது ஆகும்
  • இறை வழிபாட்டால் எண்ணங்களைக் கட்டுப்டுத்தலாம்.
  • தியாகங்கள் செய்வதால் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • முறையான பழக்க வழக்கங்களால் எந்த வகையான எண்ணங்களையும் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top