Home » சிறுகதைகள் » பேராசை!!!
பேராசை!!!

பேராசை!!!

ஒரு தாய் தந்தை. மிகப்பெரும்  செல்வந்தர்கள். அவர்களுக்கு ஒரே மகன். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஆண் மகன்.
அவர்களுக்கு பிறந்தான். ஏற்கனவே அந்த குடும்பத்தின் தலைவருக்கு காலம். கடந்த திருமணம் நடைபெற்றதால் இரண்டாவது பையன் பிறக்கும்போது அவர்களுக்கு வயதாகி விட்டது. ஆகவே தனது மூத்த மகனை அழைத்து.
மகனே எனக்கு வயதாகிவிட்டது. உன்தம்பி ஆளாக வரும்போது நான் நிச்சயமாக உயிருடன் இருக்க மாட்டேன். ஆகவே நீதான் உனது தம்பிக்கு அவனுக்கு உரிய பங்கினை பிரித்து தரவேண்டும் என்று சொன்னார்.
மூத்தவன் கொஞ்சம் பேராசைக்காரன். எனவே இவன் நிச்சயம் நமது இளைய மகனுக்கு உரிய பங்கினைத் தர மாட்டான் என்பது அவனது தந்தைக்கு தெரியும் ஆதலால்
பொடி வைத்து உயில் ஒன்றினை தயாரித்து அதை பதிவும் செய்து விட்டார்.
அந்த உயிலில் தந்தை என்ன எழுதி இருந்தார் என்றால் எனது மூத்த மகன் விரும்பியதை இளைய மகனுக்கு கொடுத்தால் போதுமானது என்று தந்தை எழுதிவிட்டு காலமாகிவிட்டனர் தாய் தந்தை இருவரும்.
சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அண்ணா நான் தனியாக செல்லப்  போகிறேன் ஆகவே தந்தையின் சொத்துக்களில் எனக்கு உள்ள நியாயமான பங்கினை பிரித்து கொடு என்றான். ஆனால் அதிக ஆசை கொண்ட அவனது மூத்த உடன் பிறப்பு தந்தையின் மொத்த சொத்தின் மதிப்பில் இருந்து பத்து சதவிகித பங்குகளை மட்டுமே தம்பிக்கு  தர முடிவு செய்தான்.
ஆனால் தம்பி இதை ஏற்க மறுத்துவிட்டான். உடனே மூத்தவன் நான் உயில்படிதான் உனக்கு சொத்தை பிரித்து தருகிறேன்.தந்தை நான் விரும்பியதை உனக்கு தந்தால் போதும் என எழுதி உள்ளதை காண்பித்தான். தம்பி இதை ஏற்க மறுத்து வழக்கு பதிவு செய்திட்டான் நீதி மன்றத்தில். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கின் சாராம்சத்தினை உற்று கவனித்து படித்தார்.
பிறகு மூத்தவனிடம் நீ சற்று நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். சரி ஒரு முப்பது சதம் பங்கினையாவது நீ உன் தம்பிக்கு வழங்ககூடாதா என நீதிபதி கேட்க அதற்கு அவனோ ஐயா என் தந்தை உயில்படி மட்டுமே நான் என் தம்பிக்கு சொத்து பிரித்து உள்ளேன்.
எனவே நீங்கள் உயில்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டான். நீதிபதி சரி அப்புறம் உனது இஷ்டம். சரி பின்னால் நீ பேச்சு மாற மாட்டாயே. உயில்படி உன் தம்பிக்கு பிரித்து தர சம்மதம்தானே என்று கேட்க அவனும் சத்தியம் சொல்லி சம்மதித்தான். உடனே நீதிபதி நாளை இந்த வழக்கினில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சொல்லி சென்றார்.
                                                                 தீர்ப்பு !!
இரு தரப்பு வாதங்களையும் நான் கேட்டு அறிந்தேன். தந்தை உயில்படி மட்டுமே தம்பிக்கு பங்கு பிரித்து தரமுடியும் என்பதில் மூத்தவர் மிகவும் உறுதியுடன் இருப்பதால் அவர் கேட்டுக்கொண்டபடியே  சொத்தினை
பிரித்து தர ஆணை பிறப்பிக்கிறேன்.
மூத்தவன் விரும்பியதை தம்பிக்கு தந்தால்  போதும் என்பதுதான் தந்தையின் மரண சாசனம். அதன் படி மூத்தவர் விரும்பியது தொண்ணூறு சதவிகித சொத்தின் பங்குகள்.
எனவே அவர் விரும்பியது  தொண்ணூறு சதவீதம்  அதை தம்பிக்கு பிரித்து தர ஆணை பிறப்பிக்கிறேன் என்று நீதிபதி தந்த உத்தரவு கண்டு மூத்தவர் அதிர்ச்சியுற்று  மயக்கம் அடைந்தார்.  பேராசை பெரும் நஷ்டம் என்பதற்கு உதாரணமாக இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top