Home » படித்ததில் பிடித்தது » சதாம் உசேன் வாழ்க்கை வரலாறு!!!
சதாம் உசேன் வாழ்க்கை வரலாறு!!!

சதாம் உசேன் வாழ்க்கை வரலாறு!!!

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி

பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006

முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

எதிரிகளின் பார்வையில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும் சுபாவம் உடையவர். ஆனாலும், ஈராக் மக்களுடைய ஆதரவுடன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியை நடத்திய சதாம், தற்போது அமெரிக்கப் படைகளின் பிடியில்.

அவருடைய வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்க்கும்போது, நமக்கு கிடைத்தவை:

குழந்தை பருவம் :

1937 ஏப்ரல் 28 தேதியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ள “அல்_ஒளஜா” என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருடைய குழந்தை பருவம் பல கஷ்டங்களுடன் இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்போதே, அப்பா இறந்தார். சதாம் பிறந்த பிறகு, சுபா மற்றொருவரை மணக்க, அந்த மாற்றான் தந்தை சதாமை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். சிறு வயதிலேயே ஆடுகளை மேய்க்கவும், திருடவும் சதாமை அனுப்புவார் அந்த மாற்றாந்தந்தை. இதனால் சதாம் தன்னுடைய 10ஆவது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, தாய் மாமன் கைருல்லா தல்பாவிடம் தஞ்சம் புகுந்தார்.

படிப்பு :

சதாம் உசேனுக்கு பத்து வயது வரைக்கும் “அ, ஆ…” கூட தெரியாது. மாமன் கைருல்லாதான் சதாமுக்கு படிப்பு சொல்லித் தந்தார். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நடந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமறைவாக வாழும்போது, சட்டப் படிப்பை முடித்தார். அங்குதான் ஸ்டாலின் பற்றி முழுமையாகப் படித்தார். அவருடைய மேசையிலும், பீரோக்களிலும் ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். அரபு தேசீய வாதத்தை சதாமிற்கு சொல்லிக் கொடுத்தது மாமன் கைருல்லா தலாஃபாதான் என்பார்கள்.

குடும்பம் :

சதாம் எத்தனை பேரை கல்யாணம் செய்து-கொண்டாரென்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக உலகத்துக்குத் தெரியும். மகன்கள் காஸே உசேன், உதய் உசேன் சதாமுக்கு இடது, வலது கைகள் போன்றவர்கள். அமெரிக்கப் படையெடுப்பின்போது, இவர்கள் கொல்லப்பட்டனர். மருமகன் உசேன் கமால், பல விஷயங்களில் மாமாவுக்கு துணையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும் ஜோர்டான் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.

சுபாவம் :

ஆரம்பத்திலிருந்து சதாம் உசேன் போராட்ட குணம் உடையவர்தான். அந்த போராட்ட குணத்துடனே, கொடூர குணமும் இருந்தது. தன்னை எதிர்த்தவரை ஈவு இரக்கமின்றி கொல்வதுதான் சதாமின் ஸ்டைல். தன்னை அதிபர் பதவியிலிருந்து விலகச் சொன்ன சுகாதார அமைச்சரைக் கொன்றதும், புரட்சி செய்த குர்த்துக்களின் மேல் இராசாயன ஆயுதங்களை பிரயோகித்ததும் இந்த கொடூரம்தான். சதாமுக்கு சிறு வயதலிருந்தே மேற்கத்திய நாடுகள் என்றால் அறவே பிடிக்காது. அரபு நாடுகளையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்பது அவருடைய கனவு.

அரசியல் :

மாமன் கைருல்லாவிடம் அரசியலை பற்றி கற்றுக் கொண்ட சதாம், 1957_ல் பாத் கட்சியில் சேர்ந்தார். சுயநலத்துடன், நம்பியதைத் துணிச்லாக செய்யும் யுக்தியுடன், பாத் கட்சியின் துணைத் தலைவராக வளர்ந்தார். 1979ல் ஈராக் நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 20 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். ஈராக்கில் பாத் கட்சியை பட்டித்தொட்டியிலும் பரப்பவிட்ட புகழ், சதாம் உசேனைத்தான் சேரும்.

புரட்சிகள் :

1956 ஈராக் மன்னர் ஃபைஜல்2 க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்கேற்றார். 1959ல் ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜெனரல் காசிம்மை கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோல்வியுற்றார். அப்போது தன் காலில் பாய்ந்த புல்லட்டை கத்தியுடன் அவரே அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு கிடைத்தது. பிறகு கைரோவுக்கு ஓடிப்போனார். 1963_ல் தன் சொந்த நாட்டுக்குள் நுழைந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்களின் புரட்சியை வடக்கு ஈராக்கில் குர்த்துக்களின் புரட்சியை இரும்பு கரங்களுடன் அடக்கினார்.

யுத்தங்கள் :

சதாம் உசேன் அரபு நாடுகளுடன் தோழமையுடன்தான் இருந்தார். ஆனால், அரபு நாடுகள்தான் அவரை தூரமாக வைத்திருந்தன. பக்கத்திலுள்ள குவைத் நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். சௌதீ அரேபியாவுடனும் வைரம்தான். சிரியா, ஜோர்டன் நாடுகளுக்-கு நல்ல நண்பன். இஸ்ரேல் யூத ஐக்கிய வாதமென்றால், எரிச்சல். அமெரிக்கா, இங்கிலாந்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிபரான ஓராண்டிற்குள்ளேயே, ஈரானுடன் போர் தொடங்கினார். அந்தப் போர் 8 ஆண்டுகள் தொடர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் தேதியன்று சதாம் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தன.

1991_ல் அமெரிக்கப் படைகள் தோழமை நாடுகளின் உதவியுடன் ஈராக்கின் மேல் படையெடுத்து குவைத் நாட்டை மீட்டுவிட்டன. ஆனால், அந்தப் போரினால் ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 தேதியன்று, அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக சதாம் தலைமறைவானார்.

சதாம் உசேன் எப்படி பிடிபட்டார்?

எங்கே :

சொந்த ஊர் திக்ரிட் பட்டணத்திற்கு 16 கி.மீ. தொலைவிலுள்ள அத்வரில்…. தன்னுடைய பண்ணை வீட்டின் சுரங்கத்தில் தூங்கிக் கொண்டு.

எப்போது :

சனிக்கிழமை இரவு 11 மணி அளவில்.

எப்படி :

கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா படைகள் சதாம் பந்துக்களை இண்டராகேட் செய்து வருகின்றன. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்ற அமெரிக்க படைகளுக்கு சில கற்கள், மண்ணும் தெரிந்தன. அந்த மண்ணை எடுத்தபோது, அங்கு ஒரு குழி தெரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக் கொண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் செய்யாமல், அமெரிக்க படைகள் சதாமை பிடித்தன.

சதாம்தானா? :

ஈராக்கின் முன்னாள் வெளியுறவுத்துரை அமைச்சர் தாரீக் அஜீஜ் சதாம் உசேனை அடையாளம் கண்டுகொண்டார். வாயிலிருந்து சாம்பில்ஸ் எடுத்து பிடிபட்டவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.

ஆயுதங்களைக் கொண்டு, களங்களில் நடைபெற்ற போர்கள் ஒருபுறமிருக்க, ‘கத்தியின்றி ரத்தமின்றிப் பொருளாதாரப் போர்கள் மறுபுறம் நடந்துகொணடே உள்ளன. அறிவியலின் ஈடு இணையற்ற வளர்ச்சி உலகிற்குப் பல நன்மைகளையும், சில தீமைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. தொலைத் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்ற வளர்ச்சி எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு உயர்ந்தது. அதன் விளைவாக ஊடகங்களின் மறைமுக ஆட்சி உலகில் தொடங்கிய என்றும் கூறலாம்.

மேலே கூறப்பட்டுள்ளவைகளைச் சற்று விளக்கமாகப் பார்வையிட்டால், இத்தொடரின் வரலாற்றுப் பகுதி ஒரு நிறைவுக்கு வரும்.

சோவியத் சிதறுண்ட ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே முதல் வளைகுடாப் போர் தொடங்கிவிட்டது. 1980களில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் நடைபெற்ற ஈரான் & ஈராக் பெரும்போர் அப்போதுதான் ஓய்ந்திருந்தது. போரில் ஈராக் வெற்றி பெற்றது போல் தோன்றினாலும், இரு நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாயின.

ஈராக்கின் அதிபராக அன்று ஆட்சி நடத்திய சதாம் உசேன், பிராந்திய வல்லரசாகத் தன் நாட்டினை ஆக்க முயல்கின்றார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. 1950களின் இறுதியில் எகிப்து அதிபர் நாசர் மீதும் அதே விமர்சனம் வைக்கப்பட்டதை நாம் அறிவோம். சதாம் உசேனைப் பொறுத்தளவில், “மத அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராடி, அராபிய உலகைக் காப்பாற்றுவது என்பதுதான் எங்கள் நோக்கம்” என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால், சவூதி, குவைத் உட்பட்ட வளைகுடா நாடுகள், போர்ச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஈராக்கிற்குக் கொடுத்துள்ள கடன்களை அவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சதாம் கேட்டுக்கொண்டார். அமெரிக்க அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக இருந்தது.

இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்கி, மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியைக் குலைத்ததும், அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை கொள்வதும் அமெரிக்காதானே எனக் கேட்டு ஆர்ப்பரித்தார். ஈராக் & ஈரான் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும், வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் வலம் வருவது ஏன் என்று உரத்துக் குரல் எழுப்பினார். இவை எல்லாவற்றையும் தாண்டி, மேலைநாட்டு வங்கிகளில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் அரபு மக்களின் நிதியை, அரசியல் நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்றார். நம்முடைய பணம் அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் போது, அவர்களுடைய அரசியலை நமக்குப் பயன்படுத்திக் கொள்வது நியாயம்தானே என்று கேட்டார். அமெரிக்கா நம் அரசியலுக்கு இணங்கவில்லை என்றால், அமெரிக்கா மற்றும் மேலைநாட்டு வங்கிகளில் உள்ள நம் பணத்தை எடுத்து, சோவியத் அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யுங்கள் என்றார்

.gty_Saddam_Hussein_nt_111109_wg

சதாம் உசேன் பற்றிய மதிப்பீடுகளை இங்கு நாம் நோக்க வேண்டியுள்ளது. அவர் ஒன்றும் அரபு நாடுகளுக்கான விடுதலைப் போராளி இல்லை. இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரிலும் பெரும்பங்கைச் செலுத்தியவர் இல்லை. தன் சொந்த நாட்டு மக்களான குர்து தேசிய இன மக்களையே கொடுமையாக ஒடுக்கியவர்தான் அவர். பல்வேறு பொருளாதார இழப்புகளில் ஈராக் சிக்கித் தவித்த வேளையிலும், அவரும், அவரைச் சேர்ந்தவர்களும் ஆடம்பரமான வாழ்க்கை முறையில்தான் மூழ்கிக் கிடந்தனர். இவையெல்லாம் அவர் மீதான மறுக்க முடியாத விமர்சனங்களே! இருப்பினும், சோவியத் சிதறுண்ட பிறகு, அமெரிக்காவை எதிர்த்து இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதற்கு மிகப் பெரிய நெஞ்சுரம் தேவை. அது சதாம் உசேனிடம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதற்காக அவர் கொடுத்த விலையும் மிகப் பெரியது.

அமெரிக்கா தன் பொறுமையை இழந்தது. சதாம் உசேனை வீழ்த்துவதற்குக் காலம் பார்த்துக் காத்திருந்தது. அப்போது குவைத் நாட்டிற்குள் ஈராக் படை ஊடுருவியது, அமெரிக்காவிற்கு மிக நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

1990 ஜுலை மாத இறுதியில் ஈராக்கின் 30 ஆயிரம் துருப்புகள் குவைத்தை நோக்கி நகர்ந்தன. ஈராக்கின் அச்சுறுத்தலுக்குக் குவைத் பணியாது என்றார் அந்நாட்டின் அதிபர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இஸ்ரேலுடனும் கைகோத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்குக் குவைத் துரோகம் இழைக்கிறது என்னும் சதாமின் குற்றச்சாட்டைக் குவைத் மறுத்தது. ஆனால், குவைத் அமெரிக்காவுடன் இணக்கமாக இருந்ததை உலகம் அறியும். எகிப்து நாட்டு அதிபரும், ஜோர்டான் மன்னரும் கடைசி நேரத்தில் எடுத்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன.

1990 ஆகஸ்ட் 2 குவைத்தின் மீது ஈராக் தன் முற்றுகையைத் தொடங்கியது. தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் குவைத் திணறியது. இனிமேல் குவைத், தன் நாட்டின் 19ஆவது மாநிலம் என்று அறிவித்தார் சதாம்.

அமெரிக்காவின் குரல் ஐ.நா.வில் ஒலித்தது. மேலை நாடுகள் அதனை ஆதரித்தன.

ஐ.நா. அவையின் தீர்மானம் கண்டும் அஞ்சாமல் விடையளித்தார் சதாம். தன் தீர்மானங்களின் மூலம், இஸ்ரேலியர்களின் அட்டூழியங்களை நிறுத்தி விட்டதா ஐ.நா. என்று கேட்டார். பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேறும் நாளில், குவைத்தை விட்டுத் தங்கள் படையும் வெளியேறும் என்று அறிவித்தார்.

போர் மேகங்கள் சூழ்ந்தன. ‘பாலைவனப் புயல்’ என்று பெயரிட்டுத் தன் போர்ப் பிரகடனத்தை அறிவித்தார் அன்றைய அமெரிக்க அதிபர் (சீனியர்) ஜார்ஜ் புஷ்.

1991 ஜனவரி 16 அன்று, ஈராக் படைகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா. சோவியத் அதிபர் கோர்ப்பசேவ் நடத்திய சமாதான முயற்சிகள் எடுபடவில்லை. மிகக் கடுமையான போர். குவைத்தை விட்டு, ஈராக் படைகள் பின்வாங்கின. முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது குவைத்.

போர்க்களம் ஓய்ந்தது. ஆனால் பகை ஓயவில்லை. தந்தை புஷ் தொடங்கிய போரை, அவரது மகன் புஷ் 2003இல் முடித்து வைத்தார்.

இரண்டாவது வளைகுடாப் போர், 2003இல் தொடங்கியது. ஈராக்கின் பெரும்பகுதியை அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது. 85,000 பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதும், அமெரிக்காவும், மேலை நாடுகளும் போரை நிறுத்தவில்லை. ‘பேரழிவு ஆயுதங்களை’த் தலைமறைவாகிவிட்ட சதாம் உசேன் எங்கோ மறைத்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டின. சதாமையும், அந்தப் ‘பேரழிவு ஆயுதங்களையும்’ தேடத் தொடங்கின.

தேடலில் பலர் கொல்லப்பட்டனர் – அவருடைய இரண்டு மகன்கள் உள்பட. அவருடைய 14 வயதுப் பேரன் முஸ்தபாவும் சுட்டுக் கொல்லப்பட்டான். எவ்வளவு பெரிய நாடு அமெரிக்கா… எவ்வளவு சிறிய பையனைக் கொன்றுள்ளது என்று எண்ணிப் பார்த்தால் வேதனையாக உள்ளது. 2003இல் ஈராக்கில் முஸ்தபா, 2009இல் ஈழத்தில் பாலச்சந்திரன்!

2003 டிசம்பர் 13 அன்று அத் தவார்  ((ad – Dawr)) என்னுமிடத்தில், ஒரு பண்ணையில், பூமிக்குக் கீழே பதுங்கியிருந்த சதாம், அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். சதாம் உசேன் கிடைத்து விட்டார். ஆனால் அவருடைய பல்லிடுக்குகளில் விளக்கடித்துப் பார்த்தும், அவர் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட, ‘பேரழிவு ஆயுதங்கள்’ ஏதும் கிடைக்கவில்லை.

 

யாரைக் கொல்வதாக இருந்தாலும், ஒரு விசாரணை நடத்திக் கொல்வதுதானே மேலை நாட்டுப் பண்பு. சதாம் மீது விசாரணை தொடங்கி, அவர் குற்றவாளி என்று 2006 நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. 2006 டிசம்பர் 30 அன்று, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

பொதுவாகத் தூக்கிலிடப்படுபவர்களின், முகத்தைத்தான் கறுப்புத் துணியால் மூடுவார்கள். ஆனால் சதாம் உசேன் தூக்கிலிடப்படும்போது, அவர் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்தக் கறுப்புத் துணியும் இல்லை. ஆனால் தூக்கில் அவரை மாட்டியவர்கள் அனைவரும், தங்கள் முகங்களைக் கறுப்புத் துணியால் மூடிக் கொண்டிருந்தார்கள்.

 

விமர்சனங்களைத் தாண்டியும், சதாம் உசேன் அன்று ஒரு கதாநாயகனாகத் தூக்கில் தொங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top