Home » 2016 » December » 19

Daily Archives: December 19, 2016

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி? இதற்கான சிகிச்சையை, எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்? ரத்தப் புற்றுநோய், எல்லா தரப்பினரையும் பாதிக்கக் கூடியது. சிறுவர்களுக்கு வரும் நோயை, கீமோதெரபி கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். பெரியவர்களுக்கு, (20 முதல், 50 வயது வரையுள்ளோர்) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். முதியோருக்கு, (55 முதல், 60 வயது) இந்நோய் வந்தால், 15 முதல், 20 சதவீதம் பேருக்கு, ... Read More »

விதியை வென்ற விடாமுயற்சி

விதியை வென்ற விடாமுயற்சி

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட ... Read More »

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்

நம் இன்றைய வாழ்க்கை நேற்றைய சிந்தனை மற்றும் செயல்களின் விளைவு. நேற்று என்ன விதைத்தோம் என்பதை விவரிக்கும் அறுவடையே இன்றைய வாழ்க்கை. எப்படி இருந்திருக்கிறோம், எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதை நாம் சொல்லாமலேயே நம் வாழ்க்கை உரத்துச் சொல்லும். விதைப்பவன் யார் கண்ணிற்கும் தெரிவதில்லை என்று நினைத்து கோணல் மாணலாக இன்று விதைத்துச் செல்லலாம். ஆனால் நாளை வளரும் பயிர் அதைக் கண்டிப்பாகக் காண்பித்துக் கொடுக்கும். நம் வாழ்க்கைக்கு நாமே பிரம்மாக்கள். நமக்கு அதை எப்படியும் உருவாக்கும் சக்தி ... Read More »

குப்பைத்தொட்டி’ல்’!

குப்பைத்தொட்டி’ல்’!

வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது  புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம்.   ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும் துளைத்துக் கொண்டிருந்தன.   மெதுவாய் சிரிக்கும் அவன் விழிகளின் ஆழத்துள் நுரைத்துத் தளும்பின சோகத்தின் சுமைகள்.   பட்டினிப் போரால் ... Read More »

இன்று: டிசம்பர் 19

இன்று: டிசம்பர் 19

1154 – ஹென்றி II இங்கிலாந்து அரசர் ஆனார். 1606 – தொடர்ந்து சூசன், வெற்றி , மற்றும் டிஸ்கவரி ஜேம்ஸ்டவுன் , விர்ஜினியா, அமெரிக்காவில் ஆனது என்று பதின்மூன்று காலனிகளின் முதலில் , காணப்படும் குடியேறிகள் செல்லும் இங்கிலாந்து வருதல் . 1776 – தாமஸ் பெயின் , அமெரிக்க நெருக்கடி என்ற தலைப்பில் பென்சில்வேனியா ஜர்னல் துண்டு பிரசுரங்களையும் ஒரு தொடர் ஒன்று வெளியிடுகிறது . 1842 – ஹவாய் சுதந்திரம் அமெரிக்க அங்கீகரிக்கப்பட்டது ... Read More »

Scroll To Top