Home » 2016 » December » 20

Daily Archives: December 20, 2016

மேற்கத்திய மருந்துகள் – மறுக்க முடியாத சில உண்மைகள்..!

மேற்கத்திய மருந்துகள் – மறுக்க முடியாத சில உண்மைகள்..!

சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.) வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது. அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, ... Read More »

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு

இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா? தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை “மரணத்தின் வர்த்தகன் மரணம்” என்று பெரிய எழுத்தில் தலைப்புச் ... Read More »

நாறமீன்!!!

நாறமீன்!!!

காலை தொழுகை  முடிந்து தொப்பியை எடுத்து இடுப்பில் சொருகிகிகொண்டான். வானம் விடியலாமா என யோசித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. சைக்கிள் பழக்கப்பட்ட மாடு மாதிரி  வழக்காடி டீக்கடை பக்கம் சென்றது.   மோதியார் தனக்கும் முன்பே அங்கு ஆஜராயிருந்தது  குரலில் தெரிந்தது. “பால் கூடினாலும் பரவாயில்லை சீனியை குறைச்சுராதடே” வழக்கமான புளிச்ச ஜோக்.   ஒரு பன்னை தின்று தனக்கு வந்த டீயை குடித்தான்.   மோதியார் அருகில் வந்து குசுகுசுத்தார். “மருமக பெத்திருக்கா   நல்ல பூச்சிகாரலோ, விளமீனோ வாங்கிட்டு வந்துருடே மறக்காம” ” ... Read More »

ராமாயி தேடிய‌ தனபாலன்

“இப்ப இன்னான்ற? வந்ததுலேந்து பாக்கறேன், சொம்மா கூவிக்கினே இருக்க?” “எங்க போன? அத சொல்லேன் மொதல்ல.” “சொல்லாங்காட்டி இன்னா செய்வ? நானே அல்லாடிட்டு வந்துருக்கேன். சொம்மா நொய் நொய்னு நொச்சுக்கினு. போ அப்பால. சொல்றேன்ல, போய்யா அப்பால.” கண்ணை கசக்கிக்கொண்டே அடுப்பை ஊதி ஊதி சோறு பொங்கிக்கொண்டிருந்த ராமாயி எரிந்து விழுந்ததில் தனபாலன் முனகிக்கொண்டே மூலையில் சென்று முடங்கிக்கொண்டான். அரை மணி பொறுத்து, இரண்டு தட்டுகளில் சோறு, குழம்பு, பொரியல் என்று எடுத்து வைத்து, பேருக்கு இவனை ... Read More »

இன்று: டிசம்பர் 20

இன்று: டிசம்பர் 20

நிகழ்வுகள் 69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான். 1192 – சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான் 1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ... Read More »

Scroll To Top