Home » படித்ததில் பிடித்தது » சங்கர் தயாள் சர்மா!!!
சங்கர் தயாள் சர்மா!!!

சங்கர் தயாள் சர்மா!!!

சங்கர் தயாள் சர்மா

பிறப்பு:

ஆகஸ்டு 19, 1918ம் வருடம் போப்பால் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது துணைவியார் பெயர் விமலா சர்மா.

பதவி:

இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில்இருந்தார்.  இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

மத்தியப்பிரதேச முதல் அமைச்சராகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் பதவிகளை வகித்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா மூன்று பிரதமர்களைப் பார்த்தவர். தேசிய அவமானமாக கருதப்பட்ட, பாசிச வெறியர்களால் நடத்தப்பட்ட பாபர் மஸ்ஜித் இடிப்பு இவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போது நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அவமானகரமான நிகழ்வைக் கண்டு மனம் கொதித்தார்.

இந்த செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானம் நேருமே பெயர் கெட்டுவிடுமே என செய்தியாளர்களின் கூட்டத்தில் கிட்டத்தட்ட கண்ணீர்விட்டே கதறினார். அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் லக்னோ பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்று பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் சட்டத் துறையில் உயர் கல்வி பெற்றவர் ஆவார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.

லக்னோ பல்கலைக் கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் சட்ட பேராசிரியராக பணியாற்றிய சங்கர் தயாள் சர்மா மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக் கழகத்தில் இணை வேந்தராகவும் பணியாற்றினார். ஆந்திர பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த டாக்டர் சர்மா நாட்டின் 22 பல்கலைக் கழகங்களில் வேந்தராக பணியாற்றிய பெருமை பெற்றவர் ஆவார்.

1940-ல் லக்னோவில் வழக்கறிஞராக தமது பணியை துவக்கிய அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். போபால் மாநிலத்தின் முதலமைச்சராகவும் மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய அவர் நாட்டின் குடியரசுத் துணை தலைவராக 1987-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவராக டாக்டர் சங்கர் தயாள் சர்மா பொறுப்பேற்றார்.

சர்வதேச இயலியலும், சட்ட இயலியலும், தத்துவ இயலியலும் பெரும் புலமை பெற்றவர். பலவேதங்கள் தங்களது இனத்தைப் பற்றி, பிரிவைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கடவுள் கொள்கையைக்கூட அவைகள் பொதுமைப்படுத்துவதில்லை என்று சங்கர் தயாள் சர்மா விவரிக்கிறார்.

இறப்பு:

டிசம்பர் 26, 1999ம் ஆண்டு புது தில்லியில் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top