Home » சிறுகதைகள் » முல்லாவின் கதை
முல்லாவின் கதை

முல்லாவின் கதை

ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.

முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் “முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டான். “நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.

நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என்றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்.” என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினைக் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசினை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். “முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்

என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்” என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான்.

முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அதனை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறிந்துகொண்டு நின்றான். “என்ன சமாச்சாரம்…?” என்று கேட்டார் முல்லா. “ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அதனையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்.” என்றான் டம்பன்.
உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது” என்று கோபமாகக் சொன்னார் முல்லா.

“முதலில் நான் வாங்கிய ஒரகாசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். “நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் ” முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பிக்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்” என்றான்.

” நம்பிக்ககைத் துரோகம் தான் செய்துவிட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பிக்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது” என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top