Home » பொது » இரத்தினச் சுருக்கம்

இரத்தினச் சுருக்கம்

இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார்.

கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசைகொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார்.
எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான்,சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர். ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன. ஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று கூறி கதையைய் முடித்தார்.
இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் இராமாயணத்தை முடித்த அந்த பெரியவருக்கு நியை பரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“ஒளவையார் கூறிய, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இது தானோ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top