Home » 2016 » September » 09

Daily Archives: September 9, 2016

எலுமிச்சையின் பலன்கள்!!!

எலுமிச்சையின் பலன்கள்!!!

எலுமிச்சை என்ற அந்த மஞ்சள் நிற பழத்தின் பலன்களை கணக்கில்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சுவையை கூட்டுவதற்காக தண்ணீரிலோ அல்லது குளிர் பானங்களிலோ போட்டு பயன்படுத்தலாம் அல்லது சரும பராமரிப்பிற்காகவும் கூட பயன்படுத்தலாம். இப்படியாக எலுமிச்சையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் அடங்கிவிடும் இந்த பழத்தை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனெனி ல், இந்த பழம் எப்பொழுது தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது. எலுமிச்சைப் பழத்தையும், அதன் பிற பகுதிகளையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் ... Read More »

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!!!

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!!!

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் ... Read More »

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு!!!

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு!!!

குழந்தைகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் தந்தை. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம் என பாடல் வரியே உண்டு. தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல்   வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம்குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச்   சிந்திக்க, சுயமாகச்செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி  அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக்கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன்  போக்கில் எதேச்சையாகவிட்டுவிடக் கூடாது.  குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி,அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும். ‘நீ ராசா அல்லவா? ராசாத்திஅல்லவா?’ என்கிற வாசகங்கள்  பெற்றோர்  வாயிலிருந்து  வர  வேண்டும்.  ‘மக்கு, மண்டு, மண்டூகம்’ – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வானபண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை… – சிக்மண்ட் ... Read More »

சூஃபியும் கொடிய அரக்கனும்!!!

சூஃபியும் கொடிய அரக்கனும்!!!

சூஃபி ஞானி கதைகள் சூஃபி ஞானி ஒருவர், ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப் பயணம் போய்க் கொண்டிருந்தார். அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி “உன்னைக் கபளீகரம் பண்ணப் போகிறேன்” என்று அவரிடம் சொன்னான். “அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி” என்று பதில் சொன்னார் அந்த சூஃபி. “நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. ... Read More »

Scroll To Top